எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 14 பிப்ரவரி, 2013

காதல் கசப்பா இனிப்பா..காதல் கசப்பா இனிப்பா..

இன்னிக்கு வாலண்டைஸ் டே.. நாமளும் எதுனாச்சும் கவுஜ சொல்லணும்னு பார்க்குறேன். அல்லது கருத்து பகிரணும்னு பார்க்குறேன். ரோசிச்சு ரோசிச்சு வயசான மாதிரி ஆயிடுச்சு..

"நம் தோழியி"ல் போட்டபடி "காதலுக்கு தூது சென்றேன் . உதைத்தார்கள்." "அத்தைமகனும் தோழியும் பின்ன நானும்" என்றெல்லாம் காதலுக்காவது தூது போயிருக்கமான்னு பார்த்தா ஒண்ணுமே இல்லை.

இப்பிடி ப்ளாங்கா காதல்னா என்னன்னே தெரியாம இத்தனை வயசு வரைக்கும் வளர்ந்துட்டமே.. இளைய தலைமுறை எல்லாம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமா இருக்காங்களே.. அட்லீஸ்ட் நம்ம லைஃப்ல எங்கியாச்சும் காதல் ,இன்ஃபாச்சுவேஷன் எட்டிப் பார்த்திருக்கான்னு பார்த்தா எல்லா இடத்துலயும் சைபர் மார்க்குத்தான்..

அட போங்கப்பா.. எல்லாத்தையும் ஆராஞ்சு ஆராஞ்சே பொழுதைக் கடத்தி இருக்கோம்னு புரியுது. கண்ணாலம் கட்டிக்கிட்டு காதலிக்கிறதுதான் சேஃப்னு கண்ணாலத்துக்கு அப்புறம் காதலிக்க ஆரம்பிச்சேன். ஹூம் எங்கே ..எப்ப பாரு சண்டை மண்டை ஒடையுதுன்னு ரங்ஸ் முணுமுணுக்குறார்.

அன்பு செலுத்துறேன்னு பாடாப்படுத்துறதுதான் நான் செஞ்சது எல்லாமே.. அதீத அக்கறை, அதீத அன்பு, அதீத துன்பம்னு வயசு கத்துக் கொடுக்குது.

தன்னைத்தானேகூட நேசிச்சுருக்கமான்னு யோசிச்சுப் பார்த்தேன். ஹ்ம்ம் இல்ல.. இல்ல .. இல்லவே இல்ல..

அப்பா அம்மாவை நேசிக்கிறது, கணவரிடம் அன்பு செலுத்துறது, பசங்கள்கிட்ட பாசம் காண்பிக்கிறது, தோழமைகள் கிட்ட இன்சொல்லும் நட்பும் பாராட்டுறது இதுதான் ஞாபகத்துல இருக்கு. 

தனிப்பட்ட எதையும் யாரையும் எந்தப் பருவத்துலயும் காதலிச்சதாவோ, தொடர்ந்து ஒரு விஷயத்தைக்கூட காதலிக்காததாவோதான் இருக்கு வாழ்க்கை..

போகட்டும் விடுங்க.. நாம என்ன லைலா மஜ்னுவா, ஷாஜகான் மும்தாஜா, இல்ல செல்வகுமார் ஜெயந்தியா.. பதினாலு வருஷம் காதலிச்சு கண்ணாலம் கட்டிக்கிறதுக்கு.. அது எல்லாம் பொறுமையானவங்க செய்ற விஷயம். நமக்கும் அந்தப் பொறுமைக்கும் சம்பந்தமேயில்லை..

ஹாஹா காதல் நம்மளப் பொறுத்தவரை காதல் கசப்பதுமில்லை, இனிப்பதுமில்லை.. அது ஒரு உணர்வு.. எல்லா ஜீவராசிகள் மேலயும் பாரபட்சமில்லாம மழை மாதிரி பொழிஞ்சுகிட்டு இருக்கு.. 

அதுக்குன்னு நெசமாலுமே காதலிக்கிறவங்களுக்கு வாழ்த்து சொல்லாம போ மாட்டேன். காதலிங்க.. வாழ்க்கை வாழ்வதற்கே.. கட்டிக்கிட்டும் காதலிங்க.. அது தெய்வீகம்.! " காதலர் தின வாழ்த்துக்கள் !”9 கருத்துகள்:

 1. அப்படி இப்படி என்று அருமையாக, நன்றாகவே புரிந்து வைத்துள்ளீர்கள்-உணர்வு என்று...

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. //தனிப்பட்ட எதையும் யாரையும் எந்தப் பருவத்துலயும் காதலிச்சதாவோ, தொடர்ந்து ஒரு விஷயத்தைக்கூட காதலிக்காததாவோதான் இருக்கு வாழ்க்கை.//

  காதலிச்சு கலியாணம் பண்ணின்டவங்களைப்பாத்து பொறாமைப் படற அளவுக்கு ஒண்ணும் பிரமாதம் இல்லை.
  என்னடா அபத்தமா ஒரு முடிவு எடுத்துகிட்டு இப்படி படறோம் அப்படின்னு மனசுக்குள்ள பொருமிட்டு இருக்கறவங்க
  நிறையா பேரு இருக்காங்க...

  கலியாணம் பண்ணின்டு, பண்ணிண்டவனை காதல் செய்யருதான் சரி அப்படின்னு இந்த பெரிசு நினைக்குது.
  நீங்க கரெக்டா சொன்ன மாதிரி கலியாணத்துக்கு முன்னே காதல் ஒரு விதமான இன்ஃபாசுவேஷனிலே தான்
  துவங்குது.

  இன்னொண்ணும் சொல்லணும் அப்படின்னு ஆசை. காதல், எல்லாமே ஒரு சாய்ஸ் என்று நினைக்காதீர்கள்.
  அதுவும் சான்ஸ் அகரன்ஸ் தான். மனுச வாழ்க்கைலே சாய்ஸை விட சான்ஸ் அகரன்ஸுக்குத் தான் பிராபபிலிடி
  அதிகம்.

  முடிவா மனுசனுக்கு அல்லது மனுஷிக்கு லக் வேணும். அதுவும் நிறைய. காதல் திருமணமோ, அப்பா அம்மா தேடி வச்சு பாத்து முடிச்ச திருமணமோ, லக் இருக்கையிலே நல்லா வாழ்க்கை அமையும்.

  இந்த லக் வேணும்னா, நீங்க சொன்ன வாலன்டைன் தயவு வேணும். நம்ம வழக்கிலே சுக்கிரன் நல்ல பார்வை
  வேணும். சந்திரன் சுக்கிரனுக்கு நல்ல இடத்துலே இருக்கணும். நம்ம ஜாதகத்திலே... ஆமாம்.

  இந்த வாலன்டைன் டேலே எல்லா தம்பதியரும் மகிழ்ச்சியுடன் இருக்க வாலாம்பிகை அம்மன் அருள் எல்லோருக்கும் கிட்ட எங்கள் பிரார்த்தனை.

  மீனாட்சி பாட்டி.
  ஆமென். சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 3. காதலிக்க தெரியலன்னு காதல பத்தி அழகா எழுதி இருக்கீங்க..
  உண்மையில இதுதான் காதல்னு எந்த வரையறையும் இல்ல... புரிஞ்சிக்கிட்டு விட்டுகொடுத்து குடும்பம் நடத்தறதும் காதல் தானே!

  பதிலளிநீக்கு
 4. அருமைங்க!

  காதல் ஆரம்பத்தில் இனித்து, போகப் போக குழப்பி , போராட வைத்து, வாழ்க்கை முழுவதும் கமிட்மெண்ட் கேட்டு, கடைசியில் அன்பில் கொண்டு வந்து விடும்.

  ஜாக்கிரதை வேண்டும் தான்!

  பதிலளிநீக்கு
 5. அன்பின் ஆழமாக உங்களின் பதிவு இருந்தது....

  பதிலளிநீக்கு
 6. தெரியாது தெரியாதுன்னு சொல்லிக்கிட்டே இவ்ளோ விஷயங்கள் தெரிஞ்சு வெச்சிருக்கீங்க. ஜூப்பர் தேனக்கா :-)

  பதிலளிநீக்கு
 7. // லைலா மஜ்னுவா, ஷாஜகான் மும்தாஜா//

  இவங்களத் தெரியும்...

  //செல்வகுமார் ஜெயந்தியா.. //
  இவங்க யாருன்னு தெரியலையே...!

  பதிலளிநீக்கு
 8. மிக அருமையாக சொன்னிங்க....உங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி......

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  பதிலளிநீக்கு
 9. நன்றி தனபால்

  நன்றி சுப்புத்தாத்தா.. நன்றி மீனாக்ஷி பாட்டி.. அருமையா சொன்னீங்க..:)

  நன்றி சமீரா

  நன்றி பட்டுராஜ்

  நன்றி எழில்

  நன்றி சாந்தி

  நன்றி ஹுசைனம்மா.. இவங்க என் முகநூல் நட்புக்கள்.

  நன்றி மலர்.

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...