எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

என்னுடைய பதினேழாவது நூல் வளையாபதி & குண்டலகேசி

என்னுடைய பதினேழாவது நூல் வளையாபதி &  குண்டலகேசி - மூலமும் உரையும். 




ஐம்பெரும் காப்பியங்களுள் முழுமையாகக் கிட்டாதவை வளையாபதியும் குண்டலகேசியும். வளையாபதியில் மொத்தமே 72 பாடல்களும், குண்டலகேசியில் மொத்தமே 19 பாடல்களும் கிடைத்துள்ளன. குண்டலகேசியை இயற்றியவர் நாதகுத்தனார். இதன் காலம் பத்தாம் நூற்றாண்டாக இருக்கலாம்.

இவை இரண்டும் காணாமல் போன காப்பியங்கள் என்று குறிக்கப்படுகின்றன. கிடைத்த பாடல்களிலும் வளையாபதி, குண்டலகேசிக்குச் சொல்லப்படும் கதையின் குறிப்பாக இவற்றில் ஒரு பாடல் கூட இல்லை. குண்டலகேசி தன் வரலாற்றைக் கூறுவதாகச் சில பாடல்களும் இடம்பெற்றுள்ளன.

சமண மதத்தின் குறிப்புகள் வளையாபதியிலும் , பௌத்த மதத்தின் குறிப்புகள் குண்டலகேசியிலும் காணப்படுகின்றன. அறிவன் அடி - அருகக்கடவுள் அடி போற்றி என்ற இறைவணக்கப்பாடல் சமணத்தைக் குறிப்பதாகவும், இறைவன் அவன் தாள் சரண் நாங்களே - புத்தபகவான் திருவடி சரணம் என்பதாக வரும் பாடல் பௌத்தத்தைக் குறிப்பதாகவும் சுட்டுகிறார்கள். 

வளையாபதி:- இந்நூல் மனிதர்கள் வாழ்வியல் தவறுகள் புரியாமலிருக்கக் கடிந்து சொல்லி,  பேராண்மை மிக்க ஆண்மகனாகவும் பெருந்தன்மை மிக்க கற்பரசியாகவும் வாழ மெய்நெறியில் வழிகாட்டுகிறது.

குண்டலகேசி:- ஊழையும் விதிப்பயனையும் நம் அல்லல்களுக்குக் காரணமாகச் சுட்டுகின்றன இப்பாடல்கள். வாழ்வின் நிலையாமையையும் உணர்த்துகின்றன. இதைப் படித்தவுடன் உயிர்க்கொலையும் உணர்வுக்கொலையும் தவிர்ப்பீர்கள், மேலும் என்பு தோல் போர்த்த இவ்வுடல் மீதும் பற்றற்றுப்போம். இது உண்மை. சத்தியம்.


விலை ரூ. 150/- 


கிடைக்குமிடம்:- பாரதி பதிப்பகம்,

புதிய எண் 4, பழைய எண் 37,

சி.ஆர்.ஆர்.புரம், முதல் தெரு,

L&T காலனி, விருகம்பாக்கம்,

சென்னை - 600092.

செல்: 93839 82930,

போன்: 044 2434 0205,

E-mail ID: bharathipathippagam@gmail.com 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...