எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 16 பிப்ரவரி, 2022

என்னுடைய பதினெட்டாவது நூல் நாககுமார காவியம்

 என்னுடைய பதினெட்டாவது நூல் நாககுமாரகாவியம். இதைப் பாரதி பதிப்பகத்துக்காகப் புதினமாக எழுதி உள்ளேன். மிகச் சுவாரசியமான நூல். 
யசோதர காவியம், உதயணகுமார காவியம், நாககுமார காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐஞ்சிறு காப்பியங்களில் இதுவும் ஒன்று. இதன் ஆசிரியர் சமணம் சார்ந்த ஒரு பெண் துறவி. 5 சருக்கங்கள் கொண்டது இந்நூல். மொத்தம் 170 விருத்தப்பாக்கள் உள்ளன. இதன் காலம் பதினாறாம் நூற்றாண்டு. இந்நூலினை சமண அறிஞர் ஜீவபந்து ஸ்ரீபால் அவர்களின் உதவியால் மு. சண்முகம் பிள்ளை என்பவர் பதிப்பித்து உள்ளார். 

இருபத்தி ஆறாவது பாடலில்தான் நாககுமாரனின் சரிதம் தொடங்குகிறது. ஆனால் நாற்பத்தி ஒன்பதாவது பாடலில்தான் அவனது பிறப்பு நிகழ்கிறது. நூற்றி அறுபத்து நான்காவது பாடலில் அவன் சித்திபதம் அடைகிறான். வடமொழியில் இயற்றப்பட்ட இக்காவியத்தில் ஐந்து சருக்கங்களும் கிட்டத்தட்ட 498 பாடல்களும் உள்ளன.

இதில் சிரேணிக மன்னனின் வேண்டுகோளின் படி கௌதமர் என்ற முனிவர் நாகபஞ்சமியின் கதையைக் கூறுகின்ற முறையில் இந்நூல் அமைந்துள்ளது. அதிலேயே நாககுமாரனின் காவியமும் வருகிறது.

519 திருமணங்கள் முடிக்கும் நாயகனைப் பற்றிச் சொல்வதால் இது மணத்தையும் போகத்தையும் பேசும் நூல் எனப்படுகிறது. சென்ற இடமெல்லாம் சிறப்பு ஏற்படுகிறது நாககுமாரனுக்கு. நவநிதியம், பொற்குவியல், பல்வேறு ஆயுதங்கள் கிடைப்பது மட்டுமல்ல, அவனுக்குச் சேவகர்களாக நான்கு நண்பர்களும் கிடைக்கிறார்கள். செல்கின்ற தேசத்தில் எல்லாம் மன்னர்கள் மன்மதனைப் போன்ற அழகுடைய அவனுக்கு ரதியைப் போன்ற தங்கள் அழகிய இளவரசிகளை மணமுடித்துக் கொடுக்கிறார்கள்.

மகாபுராணத்தை இது பெருமளவில் தழுவிச் சென்றாலும் யசோதரகாவியத்துடன் அமைப்பில் இது ஒப்புமை கொண்டாலும் கதைப்போக்கில் பெருங்காவியமான சீவகசிந்தாமணியுடனும் சில ஒப்புமைகள் கொண்டது இக்காவியம். சீவகனைப் போலக் கலைகளில் தேர்ந்தவன் நாககுமாரன். சீவகனைப் போலவே பல்வேறு திருமணங்கள் செய்து இல்லறவாழ்வில் ஈடுபட்டு அதன் பின் துறவறமடைந்தவன். இருவருக்கும் கிடைத்த நண்பர்கள் உயிரையும் கொடுக்கக் கூடத் தயங்காதவர்கள். இரண்டிலும் எல்லா நாயகியரும் நாயகன் மேல் மீளாக் காதல் கொண்டவர்கள். அவர்களுக்குள் பிணக்கு என்பதே ஏற்படுவதில்லை. 


விலை ரூ. 110/-


கிடைக்குமிடம்:- பாரதி பதிப்பகம்,

புதிய எண் 4, பழைய எண் 37,

சி.ஆர்.ஆர்.புரம், முதல் தெரு,

L&T காலனி, விருகம்பாக்கம்,

சென்னை - 600092.

செல்: 93839 82930,

போன்: 044 2434 0205,

E-mail ID: bharathipathippagam@gmail.com

2 கருத்துகள்:

  1. இவ்வாறான பொருண்மையில் அரிய நூல்களே வருகின்றன. உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஜம்பு சார்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...