எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
BIOGAS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
BIOGAS லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 3 அக்டோபர், 2017

சாணத்தை இனி போஸ்டர்ல போடாதீங்க கம்போஸ்ட்டா போடுங்க.

சாணத்தை  இனி  போஸ்டர்ல  போடாதீங்க  கம்போஸ்ட்டா  போடுங்க.

சாணத்தை  இனி  சுவரொட்டியில் போடாதீங்க

  எங்காவது பிடிக்காத போஸ்டரைப் பார்த்தா உடனே சாணியை எடுத்து வீசாதீங்க. நீங்க கோபப்பட்டு சாணியை வீசுற அளவுக்குக் கூட அவங்க லாயக்கானவங்க இல்லீங்க . அந்த மதிப்பு மிக்க சாணிய உரக்குழியில் போடுங்க. அவ்வளவும் இயற்கை உரம்க.

  கென்யாவில் இயற்கைத் தொழு உரத்துக்கு மதிப்பு அதிகமாயிருக்கு. ஏன்னா இரசாயன உரம் விலை அதிகம் என்பதோடு நிலத்தையும் நீரையும் கெடுக்கும் தன்மை வாய்ந்தது. எனவே அவங்க இயற்கை த்தொழு உரத்தைப் பயன்படுத்தி விவசாயம் செய்றாங்க. தேர்ந்தெடுக்கப்பட்ட அளவுகள்ல வெட்டப்பட்ட குழிகளில் மக்கிய இலை தழைகள், வீட்டின் காய்கறிக் கழிவுகள், கரும்புச்  சக்கைகள், மிருகங்களின் கழிவுகள் முக்கியமா மாட்டுச்சாணம் ஆகியவற்றைக் கொட்டி மண்ணைப் போட்டு மூடி  நான்கைந்து மாதங்களுக்கு மக்கச்செய்றாங்க. அதில் மைக்ரோ ஆர்கனிஸம்ஸ் எனப்படும் நுண்ணுயிரிகளும் பாக்டீரியாக்களும் காளான்களும் வளர்ந்து அவற்றை நுண்துகள்களாக உடைக்கின்றன. இதை உரமாப் பயன்படுத்துறாங்க.