திங்கள், 14 நவம்பர், 2016

மரபும் அறிவியலும். - தண்டட்டியும் பாம்படமும் நாகபடமும் -- நமது மண்வாசத்துக்காக.

ாராவு அளந்துவிட்டால் ”சும்மா கு கத்ங்க” என்போம். ஆனால் நிஜானினைக் கத்ுவு பிகில் ன் க்ிய என்பு எத்ை பேருக்கத் ெரியும் ?

கர்ணனின் கவச குண்டலம், குண்டல கேசி போன்றவை காதணியின் புராதனத்தைச் சொல்லும். தோடு, கடுக்கன், காதோலை, செவிமலர், செவிப்பூ, ஒன்னப்பூ – கன்னப்பூ - கர்ணப்பூ, முருகு, வள்ளிகை, வாளி, ஜிமிக்கி, ஓலை, கம்மல், கற்பூ, குண்டலம், குதம்பை, குலை, கொப்பு, டோலாக்கு, லோலாக்கு, தண்டோட்டி, தாடங்கம், தொங்கட்டான், மகரகுண்டலம், மகுடம் என்று  காதணிகளில் பலவகை உண்டு என்றாலும் தண்டட்டி கொஞ்சம் ஸ்பெஷல். 

தமிழ்நாட்டுப் பெண்களுக்கே உரியது. காதை வளர்த்துத் தோடு போடுவதுதான் இது. இதைச் சில மாவட்டங்களில் பாம்படம் என்கிறார்கள். பாம்படம் அல்லது நாகபடம் என்பது பந்து, கனசதுரம், வட்டங்கள், மற்றும் எதிர் எதிர் பக்கங்களும் கோணங்களும் ஒன்றாக இருக்கும். இது ஒரு பறவை அல்லது பாம்புத் தோற்றத்தில் இருக்கும். தண்டட்டி என்பது செவ்வகங்கள், முக்கோண வடிவங்கள், அரைவட்டம், கோளங்கள் கொண்ட வடிவமைப்பியல் கொண்டது. இது முப்பரிமாண யந்திரத்தை ஒத்திருக்கும். இுபோன்று விவைக்கப்பட்ட ர் அணின் உலில் வேறு எங்கும் காணப்பில்லை. ஒவ்வொரு வையானிவங்கை உள்ளக்கியந்தப் பாம்ப்கும் ஒரு அறிவியல் பைப்பு என்றே சொல்ாம். 


ிட்டத்ட்ட 70 வானிராமப்புற ாட்டிகிடம்ான் இந்தாம்பம் நாகம் ஆகியற்றைப் பார்க்குடியும். இுவும் வக்கொழிந்தோனுகில் ஒன்று. இற்கு மில் கு கத்ி ப ஓலையைச் சுருட்டி குக்கு என்னும் கான ஈயக்குண்டத் ங்கிட்டுப் பெரிு பத்ார்கள். இற்குக் கு வர்த்ல் அல்லு வித்ல் என்று பர். இதே சமயம் காதில் பல இடங்களிும் துளையிட்டு வெவ்வேறு ஒன்னப்பூ முருகு, கொப்பு என வெவ்வேறு ஆபரணங்கள் அணிவார்கள்.

கி. பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்பாகவே தமிழரின் பண்பாட்டிற்குள் பௌத்தம் சமணம் ஆகிய இரு சமயங்களில் துறவிகள் காதினை வடித்தனர். இதனை சமணர் மலை, நாகமலை, கழுகுமலை, திருப்பரங்குன்றம், ஆனைமலை,  அழகர் மலை, ஆறு நாட்டான் மலை, சித்தன்ன வாசல் ஆகியவற்றில் காணப்படும் புடைப்புச் சிற்பங்கள் , தூண் சிற்பங்கள், எழில்மிகு ஓவியங்கள் மூலம் அறியலாம்,

கௌதமபுத்தர் கூட காது வடித்திருப்பதைச் சிலைகளில் காணலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் தென் திருப்பேரை மூலவர் மீனை அணிகலனாக அணிந்தமையால் மகரநெடுங்குழைக் காதர் என அழைக்கப்படுகிறார். பெண்களும் மகரக்குழையை அணிந்தனர் என ஒட்டக்கூத்தர் கூறுகிறார். பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் காது வடிதலைக் கொண்டிருந்தனர். தோடுடைய செவியன் என்று சிவனுக்குப் பெயர். பெரிய காதுகள் அழகு என்று அப்போது எண்ணினர் தமிழர்.

காதை மையமாக வைத்து அக்குபஞ்சர் முறையில் அளிக்கப்படும் சிகிச்சைக்கு அரிக்குலோதெரஃபி என்று பெயர். இன்றைய அறிவியலை அன்றே தமிழர் உணர்ந்திருந்தார்கள். இப்படி மருத்துவ ரீதியாக உடலுக்கு நலம் பயப்பதாகவும் கலை அம்சத்தில் ஒரு தனித்துவமும் கொண்டு விளங்கின நமது பாரம்பரியக் காதணிகளான பாம்படங்கள். இந்தக் காது வடித்தலைக் கண்டுபிடித்த நம் முன்னோர்களின் அறிவு வியக்கத்தக்கது.

காது குத்தித் தோடு போடுவதே ஹார்மோன்களை நன்கு செயல்படவைக்கத்தான். தீர்க்கமாகத் தீர்மானிக்கும் திறமை, புத்திசாலித்தனம், சிந்தனாசக்தி மேம்படுவதாகச் சொல்கிறார்கள். க்பார்வெளிவாகத் ெரியுமாம். திக்குவாயையும் குணப்படுத்துவதாகச் சொல்கிறார்கள்.அழுணர்ச்சிக்காகட்டுமல்ல, ஆரோக்கியத்ுக்காகும் கு கத்ங்கள். !!!


4 கருத்துகள் :

Dr B Jambulingam சொன்னது…

நம்மவர்கள் அனைத்தையும் அறிவியல் கோணத்தோடுதான் பார்த்துள்ளார்கள். நாகரிகம் என்ற பெயரில் பலவற்றை நாம் இப்போது தொலைத்துக்கொண்டிருக்கிறோம். நான்காம் வகுப்பு படிக்கும் வரை எனக்கு தோடு போட்டிருந்த நினைவு. என்னை அழைக்கும்போதே வெள்ளேரிவெரைத் தோட்டுக்காரா, இங்குவாடா என்பார் ஆசிரியர்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வாழ்த்துக்கள் சகோதரியாரே
எழுத்துக்கள் மாறியுள்ளன

Thenammai Lakshmanan சொன்னது…

அட ! உண்மைதான் ஜம்பு சார். அதில் மருத்துவக் காரணமும் அடங்கி இருக்கு. காதில் தோடு போட்டா அந்த அழுத்தப் புள்ளியினால் ஞாபக சக்தி மேம்படுமாம். மேலும் கண் நல்லா தெரியுமாம்.

நன்றி ஜெயக்குமார் சகோ.. ஃபாண்டை சொல்றீங்களா..??

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...