புதன், 30 நவம்பர், 2016

பதின்பருவப்பெண்கள் எதிர்கொள்ளும் மனம் உடல் சார்ந்த பிரச்சனைகளும் தீர்வும் :-பதின்பருவப்பெண்கள் எதிர்கொள்ளும் மனம் உடல் சார்ந்த பிரச்சனைகளும் தீர்வும் :-
ை இந்த இணைப்பிலும் பிக்காம்.
HAPPY TO SHARE MY ARTICLE IN AVAL VIKATAN. !

பெண்கள் டீன் ஏஜ் பருவத்தைச் சிக்கலின்றி கடக்க... அவசியம் செய்ய வேண்டியவை!

பேதை பெதும்பை  மங்கை  மடந்தை  அரிவை  தெரிவை பேரிளம்பெண் என்று கூறப்படும் பருவங்களில் மங்கையும் மடந்தையும் பதின்பருவத்துக்குரியது. எது நல்லது எது கெட்டது என்று முழுமையாக உணரமுடியாத ரெண்டுங்கெட்டான் பருவம். ஆனாலும் தனக்கு எல்லாம் தெரியும் என நினைத்துக் கொள்ளும் பதின்பருவப் பெண் ஒரு பிரச்சனை என்றால் அம்மாவிடம்தான் தஞ்சம் புகுவார் .

பொதுவாக டீனெஜர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளும் அவற்றிற்கான தீர்வையும் பார்ப்போம். 

பதின் பருவத்தில்தான் அதிகமா வளர்சிதை மாற்றம் ஏற்படுது. உடல் வளர்ச்சி போல மூளை வளர்ச்சியும் இந்தப் பருவத்தில்தான் அதிகம். அதுக்காகப் பெண்கள் கார்போஹைட்ரேட், புரதம், விட்டமின், மினரல், நல்ல கொழுப்பு, இரும்புச்சத்து, கால்ஷியம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கணும். #மீல் ப்ளானிங் முக்கியம்.

முதன் முதலில் தனது உருவத் தோற்றம். ஹெல்த் கான்ஷியஸ் அதிகம் இருக்கும். பரு, மரு, தலையில் முடி உதிர்தல், முகத்தில் கை கால்களில் அதிகம் ரோமம் வளர்தல் அவங்களுக்கு கவலையை உண்டாக்கும். தங்கள் உடை, தோற்றம் பற்றி அதிக கவலை இருக்கும். ஹீல்ஸ் அணிதல், டாட்டு குத்திக் கொள்ளுதல், உடலில் துளையிட்டு வளையங்கள் அணிந்து கொள்ளுதல்னு அவங்க விருப்பங்கள் வேறாக இருக்கும். கட்டாயப்படுத்தாம ஓரளவு பிடிச்சத செய்ய விடுங்க #சரியான வழிகாட்டுதல் முக்கியம்.


உடலைப் பற்றிய கவலை இருக்கும். ஒல்லியாக இருக்கணும்னு நினைக்கும் பெண்கள்தான் அநேகம். அதுக்காக சாப்பிடாமக்கூட கொலைப்பட்டினியாகக் கிடப்பாங்க. இத அனரெக்சியா நெர்வோஸா அப்பிடிம்பாங்க.  சிலர் தைராய்டு போன்ற ஹார்மோனல் இம்பாலன்ஸினால நிறைய சாப்பிட்டு ஒபீஸ் ஆகிட்டே போவாங்க. இதுக்கு புலிமியா நெர்வோஸான்னு பேரு. # இதுக்கு ஒரே வழி ஈட் & பர்ன் தான்.

கல்வி கற்பதில் சிரமம், பரிட்சை, காரியர், நட்பு, காதல் போன்றவை தொடர்பான பயங்களும் அழுத்தங்களும் இருக்கும். இதுனால ஸ்ட்ரெஸ், டென்ஷன், டிப்ரஷன், தூக்கமின்மைல அவதிப்படுவாங்க. #சுவாசப் பயிற்சி , ரிலாக்ஸிங் டெக்னிக்கைக் கற்பிக்கணும்.

கூடா நட்பு ஏற்பட்டா செல்ஃபோன் அடிக்டாகுறது. அதிகமா இணையத்துல இருப்பது. ஆல்கஹால் அருந்துவது, பப், கிளப், போதைப் பொருள் உபயோகம், டேட் ரேப்புன்னு திசைமாற வாய்ப்பு இருக்கு. அப்போது நல்ல நட்பை ஏற்படுத்தலாம் & ஊக்குவிக்கலாம். கண்காணிப்பும் கட்டுப்பாடும் அவசியம். #டிஸ்கஸ் எவ்ரிதிங்.

மாதவிடாய் வலி, அதிகமான உதிரப் போக்கு, அடிவயிற்றில் விட்டு விட்டு வலி, சீரற்ற மாதவிடாய் அவதிப்படுவாங்க. அவங்க உடம்பை அவங்க அறியச் செய்ங்க. சுகாதாரம் பேணக் கற்றுக் கொடுங்க. #முறையான ஓய்வு, உடற்பயிற்சி, படி ஏறுதல், நடைப்பயிற்சி முக்கியம்

யாராவது செக்‌ஷுவல் மிஸ்யூஸ் செய்தாலோ, டார்ச்சர் செய்தாலோ உடைஞ்சு போயிடுவாங்க. அதை எதிர்க்கவும் எதிர்கொள்ளவும் கற்பிக்கணும். # கவுன்சிலிங் செய்யலாம். 

திறமை இருந்தும் பேச செயல்படத் தயக்கம், திக்குவாய், உடல் குறைபாடு, பயம், ஒளிதல், கோபப்படுதல், தனிமையில் இருத்தல், கூட்டத்தை எதிர்கொள்வதைத் தவிர்த்தல், சீரற்ற உணர்வுகள் கொள்ளுதல் இருக்கும். இது நடக்காது இது எனக்கு செய்ய வராது கஷ்டம் என்ற எதிர்மறை எண்ணங்கள் இருக்கும் அவற்றை நீக்கி நேர்மறையாக எதையும் அணுகச் சொல்லுதல் # பயம்/பிரச்சனைகளை தப்பிக்காமல் எதிர்கொள்ளக் கற்பித்தல்

டார்மிட்டரி போன்றவற்றில் சேர்ந்து வசிக்கும் பதின்பருவத்தினர் அனைத்தையும் சீக்கிரம் கற்றுக்கொண்டு விடுகிறார்கள்.பணத்தைக் கையாள்வது, டிக்கெட் புக்கிங், தனியே பயணம் செய்வது, உணவு தயார் செய்வது தன்னைக் கவனித்துக் கொள்வது பரிட்சைகளுக்குத் தயார் செய்து கொள்வது , உறவு நட்புகளைப் பேணுவது என்பது குழு மனப்பான்மையால் சாத்யமாகி விடுகிறது. #நல்ல ஒப்பீட்டில் சுயமதிப்பீடும் அதிகமாகிறது.

சோசியல் ஸ்டேடஸூம் முக்கியம் என நினைப்பார்கள். அடுத்தவர் முன்னால் தான் ஒரு வளர்ந்த பெண்மணி போல நடந்து கொள்ள குடும்பத்தார் குழந்தையாக நடத்தினால் பிடிக்காது. #பாசிட்டிவ் அப்ரோச் முக்கியம்.
.
பதின்பருவச் சிந்தனைகளால் கவனத்தை ஒருமுகப்படுத்துவது கடினமாக இருக்கும் அப்போது கல்வி தவிர ஸ்போர்ட்ஸ் கேம்ஸ் ஹேண்ட்வொர்க்ஸ், ஹாபீஸ் ஆகியவற்றில் ஈடுபடுத்தலாம். ஒரு கோல், மற்றும் ரோல்மாடல் உருவாக்கி அதை எட்டுவதைத் தனது குறிக்கோளாகக் கொள்ளலாம். அம்மா அப்பா ஃப்ரெண்ட் போல நேர்மறை அணுகுமுறையை செயல்படுத்தணும். அன்பு கவனம் செலுத்துதல் அவங்களுக்காக தாங்கள் எந்நேரமும் செவிகொடுக்கவும் உதவி செய்யவும் வழிகாட்டவும் தயாரா இருக்கோம்னு புரிய வைச்சா போதும் பதின்பருவப் பெண்கள் எதிர்பார்ப்பதும் அதைத்தான்.


4 கருத்துகள் :

Nat Chander சொன்னது…

Well you would have also written about ADOLESCENT INFATUATION...in this article...
.ji

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

மிகவும் பயனுள்ள பதிவு சகோதரியாரே

Thenammai Lakshmanan சொன்னது…

சுட்டிக் காண்பித்தமைக்கு நன்றி சந்தர். விட்டுப் போய்விட்டது. எங்க அடொலசண்டில் அதெல்லாம் தோன்றி இருந்தால்தானே ஞாபகம் வரும். :)

நன்றி ஜெயக்குமார் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...