புதன், 2 நவம்பர், 2016

துள்ளுவதோ இளமை - எலும்பு - மூட்டு : A - Z பெட்டகம்.

துள்ளுவதோ இளமை - இது ஒரு நூல் அறிமுகம் &  பார்வை மட்டுமே. 305 எலும்போட பிறக்கும் நாம் பதின்பருவத்தை எட்டும்போது 206 எலும்புகளோட உறுதியாயிடுறோம். போன் மாஸ் டென்சிட்டி, ஆஸ்டியோ போராசிஸ், ஆர்த்தரைட்டீஸ், பேக் பெயின் , ஜாயிண்ட் பெயின், வயசானா குட்டையாறது, கால்சியம் குறைபாடு, எலும்பு முறிவு  இதெல்லாம் ஏன்னு  எலும்பு பத்தி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு கையேடுன்னே இந்தப் புத்தகத்தைச் சொல்லலாம்.

எங்கே போனாலும் சிறிது நேரம் உக்கார்ந்திருந்து எழுந்து சென்றாலே பொத் பொத் என்று விழுந்து வைக்கும் நம்மைப் போன்றோருக்கு இந்த நூல் ஒரு எலும்பு பைபிள் எனலாம். :)  (உடல் எடையைக் கால் தாங்குவதில்லை. )

சௌந்தர பாண்டியன் போன் & ஜாயிண்ட் ஹாஸ்பிட்டலைச் சேர்ந்த டாக்டர்கள் சிவமுருகன், ரவி சுப்பிரமணியன், பார்த்திபன், பிரகாஷ் செல்வம், சரவணன், மிலின் ஜெய்ஸ்வால், கௌதம் ராஜ் ஆகியோர் அனுபவங்களை சாருகேசி எழுத்தாக்கம் செய்திருக்கிறார். இது மங்கையர் மலரில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு. பயனடைந்தவர்கள் பாராட்டும் அப்படியே பதிவு செய்யப்பட்டிருக்கு.

42 பகுதிகளா சொல்லப்பட்டிருக்கும் இக்கட்டுரைகளில் தலைமுதல் கால் வரை உள்ள எலும்புகளில் விபத்தாலோ பிறவிக் குறைபாடாலோ வயதாவதாலோ , வேறு மருத்துவத்துக்காக எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரைகளாலோ எலும்பில் ஏற்படும் பிரச்சனைகளும் அவற்றைத் தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டு அதைத் தீர்க்கத் தேவையான மருத்துவப் பரிந்துரைகளும் சொல்லப்பட்டிருக்கு.

முக்கியமா க்ரையோதெரஃபி என்ற சிகிச்சை முறை இங்கே கொடுக்கப்படுது. இந்த சிகிச்சை முறை மாபெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெற்றுள்ளதா சொல்றாங்க. ஸ்பாண்டிலிட்டீஸ், சோரியாஸிஸ், நியுரோடெர்மடைடிஸ் ஆகியவற்றை இது குணப்படுத்துதாம்.குழந்தைகள், மகளிர், அலுவலகம் செல்லும் இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், முதியவர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் உள்ள எலும்பு மூட்டு பிரச்சனையைச் சொல்லுது இந்நூல்.

ஹிப் ரிப்ளேஸ்மெண்ட், முழங்கால் மூட்டு, தோள்பட்டை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, முதுகு தண்டுவட சிகிச்சை ஆகியன செய்யப்படுதாம். இதுக்காக நால்வர் கொண்ட அணி ( நான்கு துறை மருத்துவர்கள் ) சேர்ந்து செயல்பட்டு சரி செய்றாங்களாம். கீ ஹோல் சர்ஜரி மூலமாவும் குணப்படுத்துறாங்களாம். ஸ்போர்ட்ஸ் இஞ்சுரி, கீழே விழுந்து காயங்கள் பட்டாலும் பெரும் விபத்து உண்டானபோதும் முதலுதவி எப்பிடி செய்றதுண்ணு சொல்லிருக்காங்க.

பிறக்கும்போது ஏற்படும் குறைபாடுகள் - ஜீனு வேல்கம், வே பேக், ரிக்கெட், செரிப்ரல் பால்சி, ஃப்ளாட் ஃபுட், ரிஜிட், ஹாலக்ஸ் வேல்கஸ், ஆர்த்தரைட்டீஸ் ஆஃப் த ஹிப்,விபத்தினால் முறிவு ஏற்படுவது. முட்டி தேய்மானம், எலும்பு தேய்மானம், கார்ட்டிலேஜ் குறைதல், முதுகுவலி, கழுத்துவலி, தோள்பட்டை வலி, குதிகால் வலி,டிண்டான் பாதிப்பு, லிகமெண்ட் கிழிதல், டயபடிக் பாதம், பந்துக் கிண்ண மூட்டு பாதிப்பு , மணிக்கட்டு நீர்க்கட்டு, டிஸ்க் விலகுதல்.ஒன்றிற்கொன்று குறையுள்ள கை காலை சரிப்படுத்த நீட்டுதல், எலும்புக் காசநோய்  போன்ற சிலவற்றுக்கு அறுவை சிகிச்சைகளும், சிலவற்றுக்கு மருந்து மாத்திரைகளும் பிஸியோதெரஃபி பயிற்சிகளும் கொடுக்கப்படுகின்றன. 

ஒபீஸ் குழந்தைகள் உடல் பருமனைக் குறைக்கணும்.எடையை சீரா வைச்சுக்கணும்.எந்த வயதிலும் எக்சர்ஸைஸ் முக்கியம். வயசானா கொஞ்சமாவது மூவ்மெண்ட்ஸ் முக்கியம். வெய்யிலில் அரை மணி நேரம் உடம்பைக் காட்டினா எலும்பு உறுதியாகும். விட்டமின் டி முக்கியம். வாக்கிங் அவசியம். சரியான முறையில் அமரணும்.

முறையான உணவுப் பழக்கமும் இன்றியமையாதது.காஃபி,கோலா , புகையிலை, மதுவை குறைக்கணுமாம். பச்சைக் காய்கறி, வேர்க்கடலை, வால்நட், பிஸ்தா, பாதாம் மற்றும் அனைத்துப் பழங்களிலும் தானியங்களிலும் விட்டமின் டி இருக்காம். பால் கூட அவசியமில்லையாம். எனவே காய்கறி நிறைய எடுத்து தினம் வெய்யில்ல எக்ஸர்சைஸ் செய்தாலே போதும். உடலுக்குத் தேஎவையான கால்ஷியம் கிடைக்கும். என்ன எங்க கிளம்பிட்டீங்க. மார்க்கெட்டுக்கு காய் வாங்க வாக்கிங்கா:)

இந்த உபயோகமான நூலை கல்கி பவளவிழாவுக்குப் போனவங்களுக்கு எல்லாம் ஃப்ரீயா கொடுத்தாங்க. :)

நூல் :- துள்ளுவதோ இளமை
ஆசிரியர் :- சாருகேசி
பதிப்பகம் :- கல்கி பதிப்பகம்.
விலை :- ரூ. 40.
பதிப்பாளர் :- லக்ஷ்மி நடராஜன்
ஆசிரியர்:- ஆர்.வெங்கடேஷ்
பதிப்பாசிரியர் :- லதானந்த்.

3 கருத்துகள் :

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

மிகவும் பயனுள்ள நூலினை அறிமுகம் செய்துள்ளீர்கள்
அவசியம் வாங்கிப் படிப்பேன்
நன்றி சகோதரியாரே

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஜெயக்குமார் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...