வியாழன், 24 நவம்பர், 2016

ஃப்ரூட்ஸ் & நட்ஸ் ஸ்ப்ரிங் ரோல்:-

ஃப்ரூட்ஸ் & நட்ஸ் ஸ்ப்ரிங் ரோல்:-

தேவையானவை :-
மைதா – 2 கப், பாதாம் முந்திரி பிஸ்தா – தலா அரை கப் , கிஸ்மிஸ் – கால் கப் , டூட்டி ஃப்ரூட்டி – அரை கப், பேரீச்சை – 8. போரா – ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு – 1 சிட்டிகை, சீனி – ஒரு டீஸ்பூன். எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:-
மைதாவில் உப்பு சீனி சேர்த்து கெட்டியாகப் பிசைந்து எண்ணெயில் போட்டு இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். டூட்டி ஃப்ரூட்டி, பொடித்த பாதாம் பிஸ்தா முந்திரி, கிஸ்மிஸ், பொடியாக நறுக்கிய பேரீச்சையுடன் போராவும் போட்டு கலந்து வைக்கவும். மைதாவை மெல்லிய பூரிகளாக திரட்டி இந்தக் கலவையை உள்ளே பரப்பி உருட்டி ஓரங்களை ஒட்டி முறுக்கி விடவும். காயும் எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்துப் பரிமாறவும்


ட்ரைட் ஃப்ரூட்ஸ் & நட்ஸ் முதுமையைத் தடுக்கிறது. அசைவம் சாப்பிடாதவர்களுக்கு இந்தக் கொட்டைகள் மற்றும் உலர் பழங்கள் அசைவத்துக்கு ஈடான புரதத்தை அளிக்கின்றன..

பாதாமில் நல்ல கொழுப்பு இருக்கின்றது. இரும்புச் சத்தை உடல் கிரஹிக்க உதவுகின்றது. கலோரி அதிகமுள்ள ஆரோக்கியமான சமச்சீர் உணவாகவும் ஆகின்றது. பாதாமில் உள்ள கால்சியம் குழந்தைகளின் பல் எலும்பு நரம்பு மற்றும் தசை வளர்ச்சிக்கும் உதவுகின்றது. பாதாமில் இருக்கும் மாங்கனீஸ் தைராய்டு செயல்பாட்டை சீராக்குது. உறுதியான எலும்பு வளர்ச்சியையும் உருவாக்குது. குடலில் உணவு எளிதில் ஜீரணமாக உதவுது.

முந்திரி மற்றும் பிஸ்தாவில் உள்ள காப்பர் சத்து உடலுறுப்புகள் இலகுவாக செயல்பட உதவுகின்றது. முந்திரியில் இருக்கும் பாஸ்பரஸ் காயம் பட்டு ரத்தம் வெளியேறும்போது அதிகம் ரத்தம் வெளியேறாமல் உறையவைக்க உதவுது.

பேரீச்சை குழந்தைகளுக்கு உடல் ஊட்டத்தை அளிக்கக் கூடியது. இரத்தசோகையையும் போக்குது. கிஸ்மிஸ் மலச்சிக்கலைப் போக்குகின்றது. இவை அனைத்தும் சேர்த்து குழந்தைகளுக்கு எனர்ஜி அளிப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் அளித்து மூளை வளர்ச்சிக்கும் உதவுது. 


1 கருத்து :

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...