பட்டுகயிற்றை எப்பிடி இடுப்பை சுற்றி கட்டுகிறோமோ, அது மாதிரி
இந்த புத்தகமும் சமூகத்தை சுற்றி சகல இடத்திலும் சாமனியதளங்களில் இலகுவாக பயணிக்கிறது.அறுத்து
போடும் பட்டு கயிற்றில் உயிர் ஏற்றி ஆரம்பிக்கிறது இந்த சிறுகதை தொகுப்பு.
பச்சிளம் குழந்தையோடு சேர்த்து எட்டு
கட்டமான பெண்களின் வாழ்க்கை, சமூகத்தின் எல்லா தட்டுக்களிலும் அவர்கள் கடந்து செல்லும்
காட்சிகள், அவர்களை கனக்க வைக்கும் நிமிடங்கள்,சிரிக்க வைக்கும் சின்ன பொழுதுகள் என
எல்லாவற்றையும் கதையாய் காட்சி படுத்தியிருக்கிறார் தேனம்மை.
மிக இயல்பாக ,அதே சமயம்
மிக தத்ரூமாக கதைகளத்தை நம்மிடையே பதிவு செய்து, நம்மை பயணிக்க வைக்கிறார்.கதைகளின்
முடிவில் கதை மாந்தர்காய் உச்சு கொட்டுதலையும், பிராத்தணை செய்வதை தவிர்க்க முடியாது
போகிறது.
இந்த சிவப்பு பட்டு கயிற்றை பயணங்களில் உங்கள் கையோடு எடுத்து செல்லுங்கள்,நீங்கள்
இறங்கும் போது இது உங்களுக்கு நிறைய பேரின் வாழ்க்கையை அறிமுகபடுத்திவிட்டு செல்லும்.
சிவப்புப் பட்டுக் கயிறு, தேனம்மைலெக்ஷ்மணன், டிஸ்கவரி புக் பேலஸ், கே. கே. நகர், சென்னை - 78, ஃபோன்: 044 - 65157525, விலை ரூ. 80/-
சிவப்புப் பட்டுக் கயிறு, தேனம்மைலெக்ஷ்மணன், டிஸ்கவரி புக் பேலஸ், கே. கே. நகர், சென்னை - 78, ஃபோன்: 044 - 65157525, விலை ரூ. 80/-
வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு’நினைவடுக்குகளின் எதிரொலி’யில் இரத்தினச் சுருக்கமாக ஆனால் மிக அழகாக எழுதப்பட்டுள்ளது.
பதிலளிநீக்குஎழுதியவருக்கும், வெளியிட்டுள்ளவருக்கும், நூலாசிரியரான தங்களுக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
வாழ்த்துக்கள் சகோதரியாரே
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்
பதிலளிநீக்குநன்றி விஜிகே சார்
நன்றி ஜெயக்குமார் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!