
தண்டட்டியும் பாம்படமும்
நாகபடமும்
யாராவது
அளந்துவிட்டால் ”சும்மா காது குத்தாதீங்க” என்போம். ஆனால் நிஜமான காதினைக் குத்துவது
பல வழிகளில் பயன் தரக் கூடியது என்பது எத்தனை பேருக்குத் தெரியும் ?
கர்ணனின் கவச குண்டலம், குண்டல கேசி போன்றவை
காதணியின் புராதனத்தைச் சொல்லும். தோடு, கடுக்கன், காதோலை, செவிமலர், செவிப்பூ, ஒன்னப்பூ
– கன்னப்பூ - கர்ணப்பூ, முருகு, வள்ளிகை, வாளி, ஜிமிக்கி, ஓலை, கம்மல், கற்பூ, குண்டலம்,
குதம்பை, குலை, கொப்பு, டோலாக்கு, லோலாக்கு, தண்டோட்டி, தாடங்கம், தொங்கட்டான், மகரகுண்டலம்,
மகுடம் என்று காதணிகளில் பலவகை உண்டு என்றாலும்
தண்டட்டி கொஞ்சம் ஸ்பெஷல்.
தமிழ்நாட்டுப் பெண்களுக்கே உரியது. காதை வளர்த்துத்
தோடு போடுவதுதான் இது. இதைச் சில மாவட்டங்களில் பாம்படம் என்கிறார்கள். பாம்படம் அல்லது
நாகபடம் என்பது பந்து, கனசதுரம், வட்டங்கள், மற்றும் எதிர் எதிர் பக்கங்களும் கோணங்களும்
ஒன்றாக இருக்கும். இது ஒரு பறவை அல்லது பாம்புத் தோற்றத்தில் இருக்கும். தண்டட்டி என்பது
செவ்வகங்கள், முக்கோண வடிவங்கள், அரைவட்டம், கோளங்கள் கொண்ட வடிவமைப்பியல் கொண்டது.
இது முப்பரிமாண யந்திரத்தை ஒத்திருக்கும். இதுபோன்று வடிவமைக்கப்பட்ட ஓர் அணிகலன் உலகில்
வேறு எங்கும் காணப்படவில்லை. ஒவ்வொரு வகையான வடிவங்களை உள்ளடக்கிய இந்தப் பாம்படங்களும்
ஒரு அறிவியல் படைப்பு என்றே சொல்லலாம்.
கிட்டத்தட்ட 70 வயதான கிராமப்புற மூதாட்டிகளிடம்தான்
இந்த பாம்படம் நாகபடம் ஆகியவற்றைப் பார்க்கமுடியும். இதுவும் வழக்கொழிந்து போன மரபுகளில்
ஒன்று. இதற்கு முதலில் காது குத்தி பனை ஓலையைச் சுருட்டி குனுக்கு என்னும் கனமான ஈயக்குண்டைத்
தொங்கவிட்டுப் பெரிது படுத்துவார்கள். இதற்குக் காது வளர்த்தல் அல்லது வடித்தல் என்று
பெயர்.
இதே சமயம் காதில் பல
இடங்களிலும் துளையிட்டு ஒன்னப்பூ முருகு, கொப்பு என வெவ்வேறு ஆபரணங்கள்
அணிவார்கள்.
கி. பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்பாகவே தமிழரின் பண்பாட்டிற்குள் பௌத்தம் சமணம் ஆகிய இரு சமயங்களில் துறவிகள் காதினை வடித்தனர். இதனை சமணர் மலை, நாகமலை, கழுகுமலை, திருப்பரங்குன்றம், ஆனைமலை, அழகர் மலை, ஆறு நாட்டான் மலை, சித்தன்ன வாசல் ஆகியவற்றில் காணப்படும் புடைப்புச் சிற்பங்கள் , தூண் சிற்பங்கள், எழில்மிகு ஓவியங்கள் மூலம் அறியலாம்,
கௌதமபுத்தர் கூட காது வடித்திருப்பதைச்
சிலைகளில் காணலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் தென் திருப்பேரை மூலவர் மீனை அணிகலனாக
அணிந்தமையால் மகரநெடுங்குழைக் காதர் என அழைக்கப்படுகிறார். பெண்களும் மகரக்குழையை
அணிந்தனர் என ஒட்டக்கூத்தர் கூறுகிறார். பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் காது வடிதலைக்
கொண்டிருந்தனர். தோடுடைய செவியன் என்று சிவனுக்குப் பெயர். பெரிய காதுகள் அழகு
என்று அப்போது எண்ணினர் தமிழர்.
இனி
அறிவியல் காரணம் :- காதை மையமாக வைத்து அக்குபஞ்சர் முறையில் அளிக்கப்படும்
சிகிச்சைக்கு அரிக்குலோதெரஃபி என்று பெயர். இன்றைய அறிவியலை அன்றே தமிழர்
உணர்ந்திருந்தார்கள். இப்படி மருத்துவ ரீதியாக உடலுக்கு நலம் பயப்பதாகவும் கலை
அம்சத்தில் ஒரு தனித்துவமும் கொண்டு விளங்கின நமது பாரம்பரியக் காதணிகளான
பாம்படங்கள். இந்தக் காது வடித்தலைக் கண்டுபிடித்த நம் முன்னோர்களின் அறிவு
வியக்கத்தக்கது.
காது குத்தித் தோடு போடுவதே ஹார்மோன்களை
நன்கு செயல்படவைக்கத்தான். தீர்க்கமாகத் தீர்மானிக்கும் திறமை, புத்திசாலித்தனம்,
சிந்தனாசக்தி மேம்படுவதாகச் சொல்கிறார்கள். கண்பார்வை தெளிவாகத் தெரியுமாம்.
திக்குவாயையும் குணப்படுத்துவதாகச் சொல்கிறார்கள்.அழகுணர்ச்சிக்காக மட்டுமல்ல,
ஆரோக்கியத்துக்காகவும் காது குத்துங்கள். !!!


நம்மவர்கள் அனைத்தையும் அறிவியல் கோணத்தோடுதான் பார்த்துள்ளார்கள். நாகரிகம் என்ற பெயரில் பலவற்றை நாம் இப்போது தொலைத்துக்கொண்டிருக்கிறோம். நான்காம் வகுப்பு படிக்கும் வரை எனக்கு தோடு போட்டிருந்த நினைவு. என்னை அழைக்கும்போதே வெள்ளேரிவெரைத் தோட்டுக்காரா, இங்குவாடா என்பார் ஆசிரியர்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோதரியாரே
பதிலளிநீக்குஎழுத்துக்கள் மாறியுள்ளன
அட ! உண்மைதான் ஜம்பு சார். அதில் மருத்துவக் காரணமும் அடங்கி இருக்கு. காதில் தோடு போட்டா அந்த அழுத்தப் புள்ளியினால் ஞாபக சக்தி மேம்படுமாம். மேலும் கண் நல்லா தெரியுமாம்.
பதிலளிநீக்குநன்றி ஜெயக்குமார் சகோ.. ஃபாண்டை சொல்றீங்களா..??
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!