எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
நூல் வெளியீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நூல் வெளியீடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 28 ஜூலை, 2026

தேன்தீ.. தீந்தேன்.. எனது 30 ஆவது நூல்.

எனது 30 ஆவது நூல் " தேன்தீ.. தீந்தேன்" கவிதைத் தொகுப்பு இன்று காதலர்தினத்தில் சிநேகாவின் வெளியீடாக மலர்கிறது என்பதை மகிழ்வுடன் அறிவிக்கிறேன்.



***தேனம்மை லெக்ஷ்மணனின் தேன்தீ*

   இது, ஆசிரியர் - கவிஞர் - கட்டுரையாளர் - நகரத்தா ரியல் ஆய்வாளர் அவர்களின் முப்பதாவது நூல் (கவிதை) சிநேகா பதிப்பகத்தாரின் வெளியீடு.

திங்கள், 16 மே, 2022

பாரதி பதிப்பகத்தில் எனது நான்கு நூல்கள் வெளியீடு.

வளையாபதி குண்டலகேசி - மூலமும் உரையும். வெளியீடு. 

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ளது பாரதி பதிப்பகம். இந்நிறுவனம் 70 ஆண்டுகளாகச் சிறப்பாக நடந்து வரும் பெருமை உடையது. 

இதன் தற்போதைய நிர்வாக இயக்குநர் செல்வி நித்யா ராஜேந்திரன். துடிப்பான இளம்பெண். 




இந்த வருடம் புத்தகத்திருவிழாவிற்காகக் கிட்டத்தட்ட 50 புது நூல்களை புது ஆசிரியர்களைக் கொண்டு எழுத வைத்துப் பதிப்பித்து இருக்கிறார். அதில் நானும் ஒருத்தி எனச் சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகின்றேன்.

சனி, 22 மே, 2021

விழுதல் என்பது எழுகையே - வெளியீடு.

 நாங்கள் 26 பேர் எழுதிய ”விழுதல் என்பது எழுகையே என்ற நூல்” வெளியீட்டு விழா 15.5.2021 சனி மதியம் 14.00 மணி ஐரோப்பிய நேரம் , இந்திய நேரம் சனிக்கிழமை மாலை 6 மணி. 


இயன்றவர்கள் கலந்து கொள்ளுங்கள். நூலாக்கம் செய்த அனைவருக்கும் அன்பும் நன்றியும். 


வியாழன், 9 ஏப்ரல், 2020

”பெண் அறம்” நூல் வெளியீட்டில் சில கலை நிகழ்வுகள்.

சர்வதேச மகளிதின விழாவை ஒட்டி ( மார்ச் 8, 2020 ஆம் ஆண்டு ) ஞாயிறு அன்று மதுரை தானம் அறக்கட்டளையின் களஞ்சியம் அமைப்பினர் மகளிர் தினம் கொண்டாடினர். அதில் எனது பதினொன்றாவது நூலான பெண் அறம் வெளியிடப்பட்டது.

தானம் அறக்கட்டளையும் ரிப்ளெக்‌ஷன் பதிப்பகமும் நமது மண்வாசமும் வெளியிடும் எனது மூன்றாவது நூல் இது.

உன்னத வளர்ச்சியில் ஒன்றிணைந்த பெண்கள் சக்தி என்பது இதன் தீம்.


முதலில் அறவழிபாடு.

புதன், 1 ஏப்ரல், 2020

”பெண் அறம் “ எனது பதினொன்றாவது நூல் வெளியீடு.

இன்று மதுரை தானம் அறக்கட்டளை சார்பில் எனது பெண் அறம் நூல் வெளியிடப்பட்டது. எட்டரை லட்சம் பெண்கள் கொண்ட சுய உதவிக் குழுக்களுக்காக நடத்தப்படும் நமது மண்வாசம் இதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல்.

1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிற்பம். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ளது. இதை என் பதினொன்றாவது நூலின் அட்டைப்படமாகத் தேர்வு செய்த திரு ப. திருமலை சார் அவர்களுக்கும் நமது மண்வாசம் இதழுக்கும்,
பட்டறிவு பதிப்பகத்துக்கும் தானம் அறக்கட்டளைக்கும் நன்றி. இனிய பெண்கள் தின வாழ்த்துகள்.

திங்கள், 10 ஜூன், 2019

நமது மண்வாசம் ஐந்தாவது ஆண்டு தொடக்க விழாவில் மஞ்சளும் குங்குமமும் வெளியீடு.

எனது பத்தாவது நூலான ”மஞ்சளும் குங்குமமும் ” நமது மண்வாசம் இதழின் ஐந்தாவது ஆண்டுத் தொடக்க விழாவில் வெளியிடப்படுகிறது. மதுரையில் 10.6.2019, திங்கட்கிழமையன்று காலை 10 மணிக்கு பட்டறிவு பதிப்பகத்தின் வெளியீடாக எனது நூல் மலர்கிறது.

வியாழன், 21 பிப்ரவரி, 2019

காதலர் தினத்தில் ”காதல் வனம்” வெளியீடு.

எனது புது நாவலான காதல் வனம் காதலர் தினமான ஃபிப்ரவரி பதிநான்காம் தேதி சென்னை கே கே நகரில் உள்ள டிஸ்கவரி புத்தக நிலையத்தில் வெளியிடப்பட்டது.

அந்நிகழ்வுக்கு நம் வலைப்பதிவர்கள், முகநூல் நண்பர்கள் அனைவரும் வந்திருந்து சிறப்பித்தார்கள்.
 

திங்கள், 6 ஆகஸ்ட், 2018

நமது மண்வாசம் நான்காம் ஆண்டுவிழாவில் பெண்மொழி வெளியீடு.

நான்காம் ஆண்டில் வாசிப்பை நேசிக்கவைத்த நமது மண் வாசம்

நமது மண்வாசம் இதழின் நான்காம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது மதுரை தானம் அறக்கட்டளையின் நிர்வாகக் கட்டிடத்தில். மிக அருமையான அந்தக்கூட்டத்தில் கிட்டத்தட்ட 300 சுய உதவிக் குழுக்களின் தலைவிகளும், நமது மண்வாசம் இதழில் பங்களிப்புச் செய்துவரும் பேராசிரியர்களும், மருத்துவர்களும், இதழாளர்களும் எழுத்தாளர்களுமாக அரங்கை நிரக்கச் செய்திருந்தார்கள்.

திங்கள், 16 ஜூலை, 2018

கல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.

காரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா   பேர்ல் சங்கமம் ரோட்டரியின் தலைவர் திரு. நாவுக்கரசு அவர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் ஒரு அங்கமாக என்னுடைய ஏழாவது நூலான ( சிறார்களுக்கானது )  ”விடுதலை வேந்தர்கள்” வெளியிடப்பட்டது.  திரு பாகை கண்ணதாசன் அவர்கள் வெளியிட ரோட்டரியின் தலைவர் திரு. நாவுக்கரசு அவர்களும் ரோட்டரி கவர்னர் திரு. முத்துக்குமார் அவர்களும் பெற்றுக் கொண்டார்கள்.

இந்நிகழ்வில் ரோட்டரி சங்கத்தினரும்,  தலைவரும்,  பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் திரு சகாய அமலன் அவர்களும் வாழ்த்துரை நல்கினார்கள்.  பொற்கிழிக் கவிஞர் திரு நாகப்பன் அவர்களும், சுசேந்திரன் என்னும் மாணவன் ஒருவனும் கவிதையில்  வாழ்த்துரை நல்கினார்கள்.

தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரியின் பேராசிரியரும் பட்டிமன்ற நடுவருமான  திரு பாகை கண்ணதாசன் அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் பற்றி சிறப்புரை நல்கினார்கள். திரு பாகை கண்ணதாசன் அவர்களின் பேச்சும் கவிஞர் திரு நாகப்பன் அவர்களின் கவிதையும் வெகு சிறப்பு. நினைவில் இருத்தியவற்றைப் பகிர்ந்துள்ளேன்.

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பரிசு பெற்ற மாணாக்கருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. விடுதலை வேந்தர்கள் நூலின் 25 பிரதிகளை பேர்ல் ரோட்டரி சங்கத்தலைவர் திரு. நாவுக்கரசு அவர்கள் வாங்கி அங்கேயே மாணவர்க்குப் பரிசளித்தார்கள். !

இவை அனைத்தும் கீழேயும் விரிவாகக் கொடுத்துள்ளேன்.
கல்விக்கண் திறந்த காமராஜருக்கு மரியாதை. மாணவக் கண்மணிகள் பூத்தூவி வணங்குகிறார்கள்.

வரவேற்புரை கூறி இந்நிகழ்வை  ஆசிரியை திருமதி கோமதி ஜெயம் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.
ஆறாம், ஏழாம் வகுப்பு மாணவர்கள் கலந்து கொண்ட இக்கூட்டம் மிக அமைதியாகவும் கட்டுக்கோப்பாகவும் நடைபெற்றது.  பேச்சாளர்களின் உரையைக் கவனித்து சரியான தருணத்தில் கைதட்டினார்கள். ஊன்றிக் கேட்டதுமல்லாமல் கேட்டவற்றுக்குத் தக்க பதில் சொல்லி அசரடித்தார்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...