எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 9 ஏப்ரல், 2020

”பெண் அறம்” நூல் வெளியீட்டில் சில கலை நிகழ்வுகள்.

சர்வதேச மகளிதின விழாவை ஒட்டி ( மார்ச் 8, 2020 ஆம் ஆண்டு ) ஞாயிறு அன்று மதுரை தானம் அறக்கட்டளையின் களஞ்சியம் அமைப்பினர் மகளிர் தினம் கொண்டாடினர். அதில் எனது பதினொன்றாவது நூலான பெண் அறம் வெளியிடப்பட்டது.

தானம் அறக்கட்டளையும் ரிப்ளெக்‌ஷன் பதிப்பகமும் நமது மண்வாசமும் வெளியிடும் எனது மூன்றாவது நூல் இது.

உன்னத வளர்ச்சியில் ஒன்றிணைந்த பெண்கள் சக்தி என்பது இதன் தீம்.


முதலில் அறவழிபாடு.

அதன்பின் களஞ்சியம் அறக்கட்டளையின் திட்டத்தலைவர் திருமதி த. இராஜலெக்ஷ்மி வரவேற்புரையாற்றினார்.

அதன் பின் பத்மஸ்ரீ.பெ. சின்னப்பிள்ளை தலைமையேற்க மக்கள் பரஸ்பரத்தின் முதன்மை நிர்வாகி, திருமதி அகிலாதேவி விழா குறித்து உரையாற்றினார்.


நிகழ்வு முழுவதையும் சாந்தி என்பவர் தொகுத்து வழங்கினார்.

அங்கே இரு குத்து விளக்குகள் வைக்கப்பட்டிருந்தன. விளக்கேற்றி நிகழ்வைத் தொடங்கி வைத்தோம். ஒருகுத்து விளக்கை திருமிகு. சின்னப்பிள்ளை, திருமிகு. பானுமதி, திருமிகு மகேஸ்வரி, திருமிகு நல்லினி அருள் ஆகியோருடன் நானும் ஏற்றினேன்.

இன்னொரு குத்துவிளக்கை களஞ்சியத்தின் இயக்கத் தலைவிகள் ஏற்றினார்கள்.


களஞ்சியத்தின் தற்போதைய தலைவி திருமிகு சாந்தி மதுரேசன் அவர்களும் நமது மண்வாசத்தின் முதன்மை நிர்வாகி திரு வீ . வெங்கடேசன் அவர்களும் உரை ஆற்றினார்கள்.


அவ்வப்போது குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன.


களஞ்சிய உறுப்பினரான அவரது தாயுடன் குழந்தையைப் பாராட்டுகிறார் சாந்தி.


ரமணா போன்ற புள்ளி விவரத்தோடு களஞ்சியத்தின் வளர்ச்சியையும் பெண்களின் எழுச்சியையும் குடும்பங்களின் தன்னிறைவையும் களஞ்சியத் திட்டச் சாதனைகளையும் பட்டியலிட்டார் திருமிகு உமாராணி. இவர் களஞ்சிய அறக்கட்டளையின் திட்டத் தலைவர்.


அவ்வப்போது களஞ்சியத்தின் தலைவிகள் உரையாற்றினர். இவர் திருமிகு. ஒச்சம்மா. தலைமைத்துவம் பற்றி அற்புதமாக உரையாற்றினார். அனுபவப் பகிர்வு.


களஞ்சியத்தின் மூலம் பண உதவி பெற்று டாக்டராக உயர்ந்த இவர் தன் தாயையும் களஞ்சியம் அமைப்பையும் தன் உரையால் பெருமைப்படுத்தினார். களஞ்சியத்தால் பயனடைந்தோரின் அனுபவப் பகிர்வு.


மூன்று பெண்கள் சிலம்பம் ஆடினர். ஒரு சிலம்பு  , இரண்டு சிலம்பு கொண்டு சிலம்பாட்டம் நிகழ்த்தி அதிசயிக்க வைத்தனர்.

இந்தப் பெண்களின் அத்தையே இவர்களுக்கு குரு. இவர் களஞ்சியப் பெண்களுக்கும் இந்தத் தற்காப்புக் கலையைக் கற்றுக் கொடுப்பதாகக் கூறினார். பல்வேறு சர்வதேச மெடல்களை இவர் சிலம்பத்துக்காகப் பெற்றுள்ளார்.


பெண்கள் முன்னேற்றத்தில் கல்வி பற்றி களஞ்சிய இயக்கத்தின் வட்டத் தலைவியான இவர் உரையாற்றினார். அனுபவப் பகிர்வு.


மகளிர் தின சிறப்புரை ஆற்றிய பெண் நந்தினி. மிக அருமையாகப் பேசினார்.


இவருக்கு நமது மண் வாசம் ஆசிரியர் திரு. ப திருமலை சார் அவர்கள் நினைவுப் பரிசு வழங்கினார்.


மருத்துவர் நல்லினி அருள் அவர்களுக்கு நமது மண்வாசத்தின் இயக்குநர்  திரு வாசிமலை சார் நினைவுப் பரிசு வழங்கினார்.

அடுத்து ஒரு கலை நிகழ்வு. மாணவிகளின் நடனம். சுகம் செவிலியர் கல்லூரி மாணவியர்.


டாஸ்மாக்குக்கு எதிராகப் போராடி மதுக்கடையைத் தங்களுடைய ஊரில் இருந்து நீக்கியது குறித்துப் பேசினார். அனுபவப் பகிர்வு.

பெண்கள் பெயரில் சொத்து , வயல் , நிலம் வாங்க வேண்டும் என்பது குறித்து இவர் பேசினார். அனுபவப் பகிர்வு. மேலும் இவர் களஞ்சியம் இயக்கத்தின் திட்டத்தலைவிகளில் ஒருவர். தான் தன்னுடைய பெரும் முயற்சியால் இப்போது வார்டு கவுன்சிலர் பதவிக்குத் தேர்தலில் போட்டியிட்டுப் பெரும்பான்மை வாக்குகள் பெற்றுத்  தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறினார்.


வளரிளம் பெண்கள் குழுவிலிருந்து ஒரு குட்டிப் பெண்ணின் நடனம். அதிகாலை இரண்டு மணிக்கு எழுந்ததால் இவர் தூக்கக் கலக்கத்துடன் இருந்தார். அத்துடனே மிக அழகாகவும் எளிமையாகவும் நடனமாடி அசத்தினார்.

வளரிளம் பெண்கள் குழுவிலிருந்து இரு பெண்களின் கரகாட்டம். வெகு அழகு.

மதுரை வணிக வரித்துறையின் துணை ஆணையாளர் திருமிகு மகேஸ்வரியின் மகளிர் தின சிறப்புரை. இவர் ஸ்வச்ச பாரத் திட்டம் மூலம் கழிப்பறை அமைத்து நகரை சீர்படுத்தி வரும் செல்வியின் சாதனைகள் குறித்துப் பேசினார்.

இவருக்கான நினைவுப் பரிசையும் திரு திருமலை அவர்கள் வழங்கினார்கள்.


கடைசியாக திருமிகு பானுமதியின் (சமூக ஆர்வலர், புனே ) வாழ்த்துரையோடு கிளம்பினேன். இவர் மகாராஷ்டிர வீராங்கனை கிர்க்கானி பற்றிப் பேசினார்.

அதன்பின் திரு வாசிமலை சார், திரு திருமலை சார் ஆகியோரின் உரையும் அதன் பின் திரு ரமேஷ் அவர்களின் நன்றியுரையும் இடம்பெற்றிருக்கும்.


களஞ்சியம் அலுவலர் திருமிகு பாண்டி மீனா அவர்களுடன்.


மகளிர் எழுச்சி. முன்னேற்றம்.

என் சிங்கப் பெண் நந்தினியுடன்.


சென்றவருடமும் இந்த வருடமும் எனக்குக் கிடைத்த காந்தியடிகள் சிறப்புத் தகவல் வால் ஹேங்கிக்.


ஒரு அம்மன் உருவமும் கூடக்கிடைத்தது. அதையும் விரைவில் இணைக்கிறேன். அன்பும் நன்றியும் நமது மண்வாசம் & திருமலை சார்.

3 கருத்துகள்:

 1. விழா நிகழ்வுப் பகிர்வு அருமை. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. உங்கள் பதிவை TamilBMதிரட்டியில் இணைக்க
  https://bookmarking.tamilbm.com/member/myurl

  பதிலளிநீக்கு
 3. நன்றி ஜம்பு சார்

  நன்றி தமிழ் பிஎம்.

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...