எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 20 ஏப்ரல், 2020

தமுஎசவின் மகளிர் தினத்தில் வாழ்த்துரை.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் காரைக்குடி கிளையில் மார்ச் 7 ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அதில் திருமதி கலைவாணி தலைமையேற்க செல்வி சோனிய வரவேற்புரை வழங்க கவிஞர் மு கற்பகம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். அந்நிகழ்வில் சிலர் வாழ்த்துரையும் சிலர் கவிதைச் சரமும் வழங்கினோம்.

கிட்டத்தட்ட பதினாறுபெண்களுக்கு மேல் அந்நிகழ்வில் பங்கேற்றது சிறப்பு.எனது வாழ்த்துரையில் தமுஎச காரைக்குடிக் கிளையின் தலைவர் திரு ஜீவசித்தன் சார் தமிழ்க்கல்லூரியில் பயிலும் சோனியா , சுகன்யா போன்ற இளம்பெண்களை ஊக்குவித்துப் பேச்சுத்துறைக்குக் கொண்டுவந்தமை குறித்துப் பாராட்டினேன். சபிதா போன்ற அறிவுஜீவிப் பெண்களே ஸ்ட்ரெஸ் ஸ்ட்ரெயின் காரணமாகத் தற்கொலையை நாடுவது குறித்தும் அதைத் தடுக்க வேண்டியதன் கட்டாயம் குறித்தும் கூறினேன்.


பெண்களும் சரிநிகர் சமமாகக் கலந்து கொண்ட நிகழ்ச்சி அது.

ஜீவசித்தன் சார் நிகழ்வைத் தொடங்கி வைக்க சோனியா வரவேற்புரை நிகழ்த்தினார்.

சபிதாபானுவின் கவிச்சரமும் வெகு அருமை. கலைவாணியின் தலைமையில் நிகழ்ச்சி கலகலப்பாகச் சென்று கொண்டிருந்தது. முரண்மலர் அவர்களும் வெகு சரளமாகப் பேசினார்.


பயணத்தின் பொருட்டு நான் வாழ்த்துரை வழங்கிவிட்டு உடனே கிளம்பினேன். கவிஞர் கற்பகம் அவர்களின் உரையைக் கேட்கும் வாய்ப்புக் கிட்டவில்லை. அடுத்த முறை கிட்டும் என எண்ணுகிறேன்.

நன்றி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம். இனிய பெண்கள்தின நல்வாழ்த்துகள். அன்பும் அணைப்பும் தோழியரே

2 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...