எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

கம்பராமாயணம் – இராமாவதாரம்


கம்பராமாயணம் – இராமாவதாரம்


 ம்பராமாயணம் பாடல்கள் அடங்கிய தொகுப்பு ஒன்றை சென்னைக் கம்பன் கழகம் 1983 இல் வெளியிட்டுள்ளது. பைபிள் போல், பகவத் கீதைபோல் 1825 பக்கங்களில் கம்பராமாயணம் பாடல்கள் அனைத்தும் கொண்ட நூல் இது. விலையோ 100 /- ரூபாய்தான்.


 ஆண்டுதோறும் ( காரைக்குடியில் மாதந்தோறும் ) கம்பன் விழா, கம்பராமாயண வகுப்புகள் இவற்றோடு கம்பராமாயணம் பற்றிய நூல்களையும் கம்பன் கழகத்தார் பதிப்பிக்கின்றார்கள். இது முழுக்க முழுக்க செய்யுள்களும் சிறு விளக்கங்களும் அடங்கிய அற்புதமான நூல்.

 கம்பன் இந்நூலுக்கு முதலில் இட்ட பெயர் இராமவதாரம் என்ற தகவலோடு மிகைப்பாடல்களையும் வகைப்படுத்தி வெளியிட்டிருக்கிறார்கள். இந்நூலின் சிறப்பு என்னவென்றால் எல்லா ஏடுகளையும் பதிப்பு நூல்களையும் சேர்த்துத் (பாடபேதங்களை எல்லாம் திரட்டித் ) தொகுத்த நூல் என்பதாகும்.

 இதற்கு முன்னே கம்பராமாயண செய்யுள்கள் முழுமையும் எஸ்.ராஜம் என்பவர் வெளியிட்டிருக்கிறார். 1975 இல் அடுத்து விளக்கங்களோடு இன்னொரு பதிப்பு போடலாம் என நினைத்துக் கம்பன் கழகத்தார் முடிவெடுத்து 1983 இல் மாபெரும் உழைப்பிற்குப் பின் இந்நூலைக் கொணர்ந்திருக்கிறார்கள்.

 மூல பாட அறிவியல் ( TEXTUAL CRITICISM) கொண்டு ஆய்ந்து எது மூலமாக இருந்திருக்கக் கூடும் எது மிகைப் பாடல் என்பதைக் கண்டறிந்து தொகுத்துக் கொடுத்துள்ளார்கள். இவையோடு எல்லாப் பிரதிகளிலும் பெரும்பான்மையாகக் காணப்படும் பாடல்களை * குறியிட்டும், பொருத்தமில்லாத பாடல்களை வாட்குறியிட்டும் போட்டிருக்கிறார்கள்.

 படல அடைவு, பொருள் மாலை, அரிய சொற்களுக்கு உரைக்குறிப்புகள், குறுந்தலைப்புகள், பாடல் முதற்குறிப்பு அகராதி, ஆறு காண்டங்கள், 118 படலங்கள், 11,800 பாடல்கள் என்று பிரம்மாண்ட உழைப்பைக் கோரியிருக்கிறது இந்நூல்.
 நீதிபதி திரு. மு மு இஸ்மாயில் அவர்களைத் தலைவராகக் கொண்டு இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. பதிப்பாசிரியர் குழுவின் தலைவர் டாக்டர் திரு. தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், பணியாற்றியோர் திரு. அ. ச. ஞானசம்பந்தன், திரு. மு. அருணாசலம், திரு. தெ. ஞானசுந்தரம், திரு. மு. சண்முகம் பிள்ளை, திரு. கா. பெ. ஞானசம்பந்தம். ஆகியோர்.

 கம்பராமாயண முழுநூலையும் படித்துச் சுவைக்க இந்த மூலநூலைத் தேர்ந்தெடுங்கள். உரைநடைகளில் இடைச்சொருகல் இருக்கும். இதில் நாமே படித்துத் தெளியலாம். ஒவ்வொருவர் இல்லத்திலும் இருக்க வேண்டிய நூல். இதை இன்னும் பல பதிப்புகள் கொணரவேண்டியது காலத்தின் கட்டாயம்.

நூல் :- கம்பராமாயணம்
இராமாவதாரம் ( பாடல்கள் )
பதிப்பு :- சென்னைக் கம்பன் கழகம்.
பக்கங்கள் :- 1825.
விலை :- ரூ .100/-

4 கருத்துகள்:

 1. சிறப்பான அறிமுகம்

  http://www.ypvnpubs.com/2020/04/unicode-voice-to-typing.html

  பதிலளிநீக்கு
 2. நன்றி வெங்கட் சகோ

  நன்றி டிடி சகோ

  நன்றி யாழ்பாவண்ணன் சகோ

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...