எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கம்பன் கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கம்பன் கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 11 ஜனவரி, 2022

நகுலன் - ஒரு மாயவெளிச் சிற்பம்.

காரைக்குடி கம்பன் கழகத்தைச் சேர்ந்த கம்பன் அடிசூடி திரு பழ.பழனியப்பன் அவர்களும், திரு. முத்துப் பழனியப்பன் அவர்களும் நூற்றாண்டு காணும் அறிஞர்கள் பற்றிய காணொலிகளைத் தொகுத்து வெளியிட்டு வருகின்றார்கள். அதற்காக என்னிடம் நகுலன் பற்றி ஒரு காணொலி எடுத்து அனுப்பும்படிக் கேட்டிருந்தார்கள். அதற்காகத் தொகுத்த குறிப்புகளை இங்கே அளித்துள்ளேன். இதன் யூ ட்யூப் லிங்க். 

நகுலன் I ஒரு மாயவெளிச் சிற்பம் I தேனம்மை லெக்ஷ்மணன்




காரைக்குடி கம்பன் கழகம், வாழ்த்து, நகுலன் நூற்றாண்டு விழா. இதுபோல் பிற அறிஞர்களின் நூற்றாண்டு விழாவையும் கொண்டாடும் கம்பன் கழகம்.

Writers writer – எழுத்தாளர்களின் எழுத்தாளர். எழுத்தாளர்களால் கொண்டாடப்படும் எழுத்தாளர்.

ஞாயிறு, 5 ஏப்ரல், 2020

கம்பராமாயணம் – இராமாவதாரம்


கம்பராமாயணம் – இராமாவதாரம்


 ம்பராமாயணம் பாடல்கள் அடங்கிய தொகுப்பு ஒன்றை சென்னைக் கம்பன் கழகம் 1983 இல் வெளியிட்டுள்ளது. பைபிள் போல், பகவத் கீதைபோல் 1825 பக்கங்களில் கம்பராமாயணம் பாடல்கள் அனைத்தும் கொண்ட நூல் இது. விலையோ 100 /- ரூபாய்தான்.

புதன், 1 ஆகஸ்ட், 2018

கம்பன் அடிப்பொடி புகழ்த்திருநாளில் சாகித்ய விருதாளர்களுக்குப் பாராட்டு.


கம்பன் அடிப்பொடி புகழ்த்திருநாளில் சாஹித்ய விருதாளர்களுக்குப் பாராட்டு.

காரைக்குடி மலர் ஹோட்டலின் செண்பக அரங்கில் கடந்த 28. 7. 2018 ஞாயிறு மாலை கம்பன் அடிப்பொடியின் 37 ஆவது புகழ்த்திருநாள் நடைபெற்றது.  கம்பன் கழகத்தார் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் காரைக்குடியைச் சேர்ந்த இரு சாஹித்ய அகாதமி விருதாளர்களுக்கும் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

புதன், 2 ஆகஸ்ட், 2017

துறைதோறும் கம்பன் – ஒரு பார்வை.

துறைதோறும் கம்பன் – ஒரு பார்வை.


139 கட்டுரைகள் கொண்ட இந்நூல் காரைக்குடி கம்பன் கழகத்தின் பவளவிழாக் கொண்டாட்டத்தின்போது நல்லி குப்புசாமி செட்டியார் அவர்களால் வெளியிடப்பட்டது.

துறைதோறும் என்பதன் முழுப்பரிமாணத்தில் எழுதப்பட்ட விரிவான கட்டுரைகளின் தொகுப்பு இது. ஒப்பியல், அரசியல், ஆட்சியியல், கல்வியியல், உளவியல், அறவியல், ஆளுமையியல், பண்பியல்,மகளிரியல், கலையியல், இலக்கியவியல், அறிவியல், ஊடகவியல், சூழலிய, மெய்யியல், எதிர்காலவியல் ஆகிய பதினாறு துறைகளில் இந்நூல் கம்பராமாயணத்தை அலசுகிறது.

செவ்வாய், 4 ஜூலை, 2017

கம்பன் நேற்று-இன்று-நாளை – ஒரு பார்வை.



கம்பன் நேற்று-இன்று-நாளை – ஒரு பார்வை. 

சொல்வேந்தர் சுகி சிவத்தின் நூலைப் படிக்கும் பாக்கியம் கிடைத்தது. அண்டைவீட்டுக்காரர் கம்பர் நூல்களைக் கொடுத்தால் படிக்கக் கசக்கிறதா என்ன. எனது அண்டைவீட்டுக்காரர் திரு கம்பனடிசூடி அவர்கள். அவர்கள் தந்த நூலில் அவ்வப்போது கம்பரசம் மாந்தி மகிழ்வதுண்டு.

இந்நூல் தலைப்பே வித்யாசமாக இருந்ததால் இன்று படித்தேன். அமரர் ஏவிஎம் . அறக்கட்டளை நினைவுச் சொற்பொழிவு. சென்னைக் கம்பன் விழாவில் வெளியிடப்பட்டது. 

வெள்ளி, 24 மார்ச், 2017

காரைக்குடி கம்பன் கழகத்தின் கம்பன் திருநாள் அழைப்பு

காரைக்குடிக் கம்பன் கழகத்தின் திருவிழாவில் கலந்து கொண்டு கம்பரசம் பருகி இன்புற வாருங்கள்.

///அன்புடையீர்
வணக்கம்
இதனுடன் காரைக்குடி கம்பன் கழகம்  கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் ஏப்ரல் 7,8,9,10 ஆகிய நாட்களில்  நடத்த உள்ள கம்பன் திருவிழா அழைப்பினை  இணைத்துள்ளோம். அனைவரும் முன்னதாக வந்திருந்து கம்பன் தமிழ் பருகி இன்புற வேண்டுகிறோம்.  

வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

கைகேயி படைத்த கம்பன்.

 கம்பனல்லவா கைகேயியைப் படைத்தான். கைகேயி எங்கே கம்பனைப் படைத்தாள் எனக் குழம்புகிறதல்லவா. ஆம் அப்படித்தான் நானும் எண்ணி இருந்தேன். ஆனால் கைகேயி படைத்த கம்பனை நானும் அங்கே கண்டேன். அவ்வாறு கைகேயி படைத்த கம்பனை உருவாக்கி உலவவிட்டு கைகேயின்மேல் கழிவிரக்கத்தை உண்டு செய்தவர் கம்பனடி சூடி. திரு பழ பழனிப்பன் அவர்கள்.

/////காரைக்குடி கம்பன் கழகத்தின் பிப்ரவரி மாதக் கூட்டம் 04.02.2017 அன்று கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குக் கம்பன் அறநிலையின் தலைவர் திரு சக்தி திருநாவுக்கரசு அவர்கள் தலைமை வகித்தார். கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் அவர்கள் ‘‘கைகேயி படைத்த கம்பன்” என்ற தலைப்பில் மீனாட்சி பழனியப்பா நினைவு அறக்கட்டளைப் பொழிவை நிகழ்த்தினார்.////

இனி சொற்பொழிவில் என்னைக் கவர்ந்த சில விளக்கங்கள். நினைவில் இருத்தியவற்றைப் பகிர்கிறேன். பிழையிருப்பின் பொறுத்தருள்க.

கம்பன் அறநிலையின் தலைவர் திரு சக்தி திருநாவுக்கரசு அவர்கள் நட்பிற்காகத் தலைமை ஏற்க வந்ததாகக் கூறினார்.
வந்திருந்த அனைவரையும் அன்போடு வரவேற்று மிக நீண்ட முன்னுரைக்குப் பின் கைகேயி எப்படிக் கம்பனைப் படைத்தாள் என நிறுவினார் திரு கம்பனடி சூடி அவர்கள். அவர் ஒரு வழக்குரைஞர்/அறிஞர் என்பது இலட்சத்து ஓராவது தடவையும் நிரூபணமாயிற்று :)

வியாழன், 19 ஜனவரி, 2017

கம்பன் கழகத்தின் பன்னாட்டுக் கருத்தரங்கம்.

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் ‘செட்டிநாடும் செந்தமிழும்’ என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கம் (2017)


இந்த இணைப்பிலிருந்து எடுத்துப் பகிர்ந்திருக்கிறேன். முழுமையாகப் படித்து விருப்பமும் ஆர்வமும் உள்ளவர்கள் பங்குபெற வேண்டுகிறேன். ஆய்வுக் கட்டுரைகளும் அனுப்பலாம். அதன் விபரங்களும் உள்ளன.



          
/// காரைக்குடி கம்பன் கழகம்
நடத்தும்
‘செட்டிநாடும் செந்தமிழும்’
என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கம் (2017)
                      அறிவிப்புமடல்
கம்பனின் இராமாவதாரக் காப்பியத்தால் பெரிதும் ஈர்க்கப் பெற்று காரைக்குடியில் 1939 ஏப்பிரல் 2, 3 ஆகிய நாட்களில்  ரசிகமணி டி.கே.சிதம்பரநாதர் தலைமையில் கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் தம் வாழ்நாள் வேள்வியைத் தொடங்கினார் சா.கணேசன் எனும் காந்தியடிகளின் தொண்டர். அன்றிலிருந்தது தொடர்ந்து, காரைக்குடியிலிருந்து 30 கல் தொலைவில் உள்ள நாட்டரசன்கோட்டையில் உள்ள கம்பன்சமாதிக்கோயில் வளாகத்தில் கம்பன் கவியரங்கேற்றிய பங்குனி அத்தத்திருநாளிலும், அதற்கு முந்திய மூன்றுநாட்களான பங்குனி மகம், பூரம், உத்திரம் ஆகியநாட்களில் காரைக்குடியிலும் கம்பன்திருநாளைக் கொண்டாடினார்.
      கம்பன் பிறந்த நாளை நாம் அறிய சான்றுகள் ஏதும் கிடைக்காததால், அவன்  தன் இராமாவதாரக் காப்பியத்தை அரங்கேற்றியதாக தனிப்பாடல் ஒன்றின் துணையால் அறிய நேர்ந்த கிபி 886, பெப்ருவரி 23 பங்குனி அத்த  நாளையே கம்பன் கவிச்சக்கரவர்த்தியாக அவதரித்த நாளாகக் கொண்டு  அந்நாளிலேயே கம்பன் திருநாளைக் கொண்டாடிவந்தார். கம்பன் அடிப்பொடியார் ஆண்டு தவறாது 44 ஆண்டுகள் தொடர்ந்து தம் வாழ்நாள் வரை (1982) கொண்டாடினார். 1983 முதல் அவர் விரும்பியவண்ணமே அவர்தம் தலைமாணாக்கரான கம்பன்அடிசூடியைச் செயலாளாராகக் கொண்டு அதேமுறையில் தொடர்ந்து 33 ஆண்டுகளாக கம்பன் விழா சிறப்புடன் நடைபெற்றுவருகிறது.  

செவ்வாய், 10 மே, 2016

பாரடைஸ் லாஸ்ட் & பாரடைஸ் ரீகெயின் - கம்பனும் ஜான் மில்டனும். - இராமகிருஷ்ணானந்தா.

/////இன்று (7-5-2016) அன்று காரைக்குடி கம்பன் கழகத்தின் மே மாதக் கம்பன் திருவிழா மாலை ஆறுமணிக்கு காரைக்குடி கல்லுக்கட்டி கிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருமிகு கவிதா அவர்களின் இறைவணக்கத்துடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் காரைக்குடி கம்பன் கழகச் செயலர் கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். 

இவ்விழாவில் தவத்திரு ஊரன் அடிகள் தலைமை வகித்தார். கம்பன் கழகப் பணிகள் பற்றிச் சிறப்புடன் உரைத்தார். சந்திர மண்டலத்தில் மனிதன் செல்லும் காலம் வந்தால் அந்தக் காலத்தில் தமிழ் அமைப்பு ஒன்று அங்குத் தொடங்கப்பெற்றால் அது காரைக்குடி கம்பன் கழகத்தின் கிளைக் கழகமாகத் தான் இருக்கும் என்றார். அந்த அளவு இலக்கியப் பணிகளைக் காரைக்குடி கம்பன் கழகம் ஆற்றிவருகிறது. என்றார் அவர். ////

திரு வேதானந்தா ஓமெனும் பிரணவம் ஒலிக்கப் பேசியது இன்னும் கணீரென்று காதுக்குள் ஒலிக்கிறது. நவநீத கைவல்யம் என்னும் தலைப்பில் திருக்கோயிலூர் மடத்தில்  உரையாற்ற வந்திருந்த வேதானந்தா சுவாமிகள்,  தவத்திரு ஊரன் அடிகள், சின்மயா மிஷனின் துறவி திரு இராமகிருஷ்ணானந்தா சுவாமிகள் ஆகியோர் தங்கள் உரைகளால் நேற்றையப் பொழுதைச் சிறப்பித்திருந்தனர்.

செவ்வாய், 5 ஏப்ரல், 2016

அந்தமானில் கம்பராமாயணக் கருத்தரங்கு.

முகநூல் நண்பர் , கம்பன் கழக செயலாளர் , பேராசிரியர் பழனியப்பன் முத்தப்பன் அவர்களின் முகநூல் பக்கத்தில் இருந்து இதைப் பகிர்கின்றேன்.

 ////கம்பன் புகழ் பாடி கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி கம்பன் கழகத்தின்
சார்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி அந்தமான் நிக்கோபார் தீவுகளின்பெருநகரமான போர்ட்பிளேயரில் கம்பராமாயண மூன்றாம் உலகத்தமிழ்க் கருத்தரங்கு நிகழஉள்ளது.

புதன், 23 மார்ச், 2016

கம்பர் திருவிழா - 2016 . மக நாள் மங்கல நிகழ்வுகள்.

கம்பன் அடிசூடி திரு பழ பழனியப்பன் மற்றும் அவரது இளவல்களின் பெருமுயற்சியால் காரைக்குடியில் கம்பர் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

முதல் நாளாம் மக நாளில் ஏகப்பட்ட கொண்டாட்டங்கள். கண்ணுக்கும் செவிக்கும் , மனதுக்கும் , சிந்தனைக்கும்  அதன்பின் வயிற்றுக்கும் மாபெரும் விருந்து படைத்தது சிறப்பு வாய்ந்த கம்பன் கழகம்.

காரைக்குடி கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு ஸ்ரீராமரும் சீதையும் எழுந்தருளி அருள் பாலித்தனர். கோட்டையூரைச் சார்ந்த புரவலர், வள்ளல் பெருமகள்,  திருமதி வள்ளி முத்தையா ( வள்ளல் அழகப்பரின் தமையனாரின் மகள் ) அவர்களின் இல்லத்திலிருந்து ஸ்ரீராமரும் சீதையும் தம்பதி சமேதராக திருச்சின்னங்கள் ஒளிர எழுந்தருளி கிருஷ்ணர் கோயிலில் இருந்து ஊர்வலமாக கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டனர்.
கோயிலில் தீப தூபத்துக்குப் பின் தேவகோட்டை கலைவாணி வித்யாலயா மாணாக்கியர் கொடி பிடித்து மலர் தூவி நடனமாடிப் போற்றித் துதித்து ஊர்வலத்தின் முன்னே வர , சங்கொலிக்க, நாதஸ்வரமும் மேளமும் இசைவெள்ளமாய்ப் பொங்க., தீவட்டி பிடித்தபடி இருவர் முன்னே கட்டியம் கூறிச் செல்ல, வேஷ்டி மற்றும் மஞ்சள் & பிங்க் நிறச் சட்டையணிந்த இளைஞர் பட்டாளம் தோளுக்கினியானில் ஸ்ரீராமர்சீதையைத் தாங்கிக் கவரி வீசி வந்தனர். 
நாட்டியத் தாரகைகள் முன்னே செல்ல கம்பீர அணிவகுப்பில் ஸ்ரீராமரும் சீதையும் கம்பருடன் சேவை சாதித்து அருளினார்கள். ( திரு.வீரப்பன் அவர்கள்  கம்பன் புகைப்படத்தைத் தாங்கி வருகின்றார்கள் )
மனம் கவர் தம்பதிகள் கொற்றக் குடையின் கீழ் உலா.

ஞாயிறு, 6 மார்ச், 2016

கம்பன் நின்று நிலைப்பது அழகியல் பாடல்களிலா, அறவியல் பாடல்களிலா .

”ராமன் நான்கு கொலைகள் செய்திருக்கிறான். ஆனால் ராவணன் உயிர்க்கொலை செய்ததே இல்லை. “ என்று கம்பராமாயணப் பேச்சின் ஊடே ஒரு எதிர்பாரா செய்தியை கம்பனின் கோட்டையான காரைக்குடியில் கம்பன் கழகத்தில் நடைபெற்ற இசைப் பட்டிமண்டபத்தில் வழங்கிவிட்டுத் தப்பிச் சென்றிருக்கிறார் நண்பர் வளரும் கவிதை முத்து நிலவன் அவர்கள். !!!

விஷயம் இதுதான். மார்ச் மாத கம்பர் விழா - 5- 3- 2016. அன்று காரைக்குடி கிருஷ்ணா மண்டபத்தில் நடைபெற்றது. அதில் நண்பர் பதிவர் புதுக்கோட்டை முத்துநிலவன் தலைமையில் நடைபெற்ற இசைப் பட்டிமண்டபத்தில் கம்பன் நின்று நிலைப்பது அழகியல் பாடல்களிலே என்று மகா சுந்தர் அவர்களும், அறவியல் பாடல்களிலே என்று முனைவர் மு.பாலசுப்ரமணியன் அவர்களும் வாதாடினார்கள்.


மிக சுவாரசியமான இவ்விழாவுக்கு மகா சுந்தர் பேசி முடிக்கும்போதுதான் செல்ல இயன்றது. அடுத்து முத்துநிலவன் அவர்கள் செறிவார்ந்த உரையையும் மு பாலசுப்ரமணியன் அவர்களின் உரையையும் , கம்பன் அடி சூடி அவர்களின் நெகிழந்த உரையையும் கேட்கும் பாக்கியம் பெற்றேன். 

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

கம்பன் கழகம் - சொ சொ மீ யின் பாராட்டுரை. மூன்று தாமரைகளும் பிள்ளையார்களும்.

எங்கள் கல்லூரியின் முத்தழிச் சங்கத்தில் கேட்டு ரசித்த சொ சொ மீ அவர்களின் உரையைப் பல்லாண்டுகளுக்குப் பின் கம்பன் கழகத்தில் கேட்டு ரசித்து மகிழ்ந்தேன். தழிழ்த் தேனை மாந்தி மகிழ்ந்தேன் என்பது சாலப் பொருந்தும் :)
குழந்தைக் கவிஞருக்கு கம்பன் அடிப்பொடி விருது வழங்கப்பட்ட நாளில் திருமந்திரச் சொல்மணி திரு சொ சொ மீயின் உரை மிகச் செறிவானதாக இருந்தது. மூன்று தாமரைகளையும் இரண்டு பிள்ளையார்களையும் அவர் ஒருங்கே உவமைப்படுத்திய விதம் சுவையானது.

கம்பன் அடி சூடியின் உரைக்குப் பின் தன்னுடைய உரை அமைந்ததால் அது இலக்கியமழைக்குப் பின்னே சிதறும் தூவானம் என்று குறிப்பிட்டார்.

புதன், 26 ஆகஸ்ட், 2015

காரைக்குடி கம்பன் கழகத்தில் குழந்தைக் கவிஞருக்கு கம்பன் அடிப்பொடி விருது :-



காரைக்குடி கம்பன் கழகத்தின் 58 ஆவது கூட்டம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடந்தது. இந்தக் கூட்டத்தில் இந்த வருடம் சாகித்திய அகாதமியின் சிறந்த சிறுவர் இலக்கியப் படைப்புக்கான பால சாகித்திய புரஸ்கார் விருது பெற்ற கண்டனூர் குழந்தைக் கவிஞர் செல்ல கணபதி அவர்களைப் பாராட்டி கம்பனடிப்பொடி விருது வழங்கப்பட்டது.

அந்தக் கூட்டத்திற்கு கலந்து கொள்ள அழைப்பிதழ் கம்பனடிசூடி திரு பழனியப்பன் அவர்களிடமிருந்து வந்ததால் கலந்து கொண்டேன்.