எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
KAMBAR VIZHA லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
KAMBAR VIZHA லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 2 மே, 2017

முனைவர் சிங்கை எம் எஸ் லெக்ஷ்மியின் பார்வையில் செட்டிநாட்டுப் பெண் படைப்பாளிகள்.

முனைவர் திருமதி எம் எஸ் லெக்ஷ்மி சிங்கையைச் சார்ந்த இலக்கியவாதி. அவர் நிறைய கருத்தரங்களில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார்.

9.4.2017 அன்று நடைபெற்ற கம்பர் விழாவின் மூன்றாம் நாளன்று உலகத் தமிழ் நான்காம் கருத்தரங்கில் அவர் இரு ஆய்வுக் கட்டுரைகளை வாசித்தார்.


அதில் ஒன்று முருகு என்னும் படைப்பாளி. இன்னொன்று செட்டிநாட்டுப் பெண் எழுத்தாளர்கள் பற்றியது. அதில் சிங்கை எழுத்தாளர்கள்  மீனா முத்து, சௌந்திர நாயகி,  அமெரிக்க எழுத்தாளர் சீதா லெக்ஷ்மி ஆகியோரோடு இன்பாவையும் என்னையும் குறிப்பிட்டு அதிகம் எழுதி இருந்தார்.

அக்கட்டுரையை இங்கே பகிர்வதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.

அன்பும் நன்றியும் லெக்ஷ்மி மேம்.

திங்கள், 10 ஏப்ரல், 2017

தர்மம் தலைமுறை காக்கும் - தஞ்சை மகாராஜா பாபாஜி ராஜா சாகேப் போன்ஸ்லே

நான்காம் உலகத் தமிழ் கருத்தரங்கம் கோட்டையூர் வள்ளல் அழகப்பரின் பேத்தி வள்ளி முத்தையாவின் இல்லத்தில் நடைபெற்றது. அதற்கு தகைமிகு தஞ்சாவூர் மூத்த இளவரசர் பாபாஜி ராஜாசாகேப் போன்ஸ்லே வந்திருந்து அருமையாகத் தலைமை தாங்கி சொற்பொழிவாற்றினார். அதைக் கடைசியில் கொடுத்துள்ளேன். திரு சொ சொ மீ அவர்களின் உரையையும் கொடுத்துள்ளேன்.
மதிய உணவு இடைவேளை முடிந்ததும் மதிய அமர்வு ஆரம்பமானது. அதில் சில கட்டுரைகள் முனைவர் திரு பழ முத்தப்பன் அவர்கள் தலைமையில் வாசிக்கப்பட்டன.

அதன் பின் தஞ்சை அரசர் வருகை நிகழ்ந்தது. பூரண கும்ப மரியாதையோடு அழைத்து வரப்பட்டார். பேராசிரியர் திரு மா சிதம்பரம் வரவேற்புரை நிகழ்த்தினார்.
புரவலர் திருமதி வள்ளி முத்தையா ராஜா அவர்களுக்கு ஒரு கவிதை எழுதிப் பரிசளித்தார்கள்.

வெள்ளி, 24 மார்ச், 2017

காரைக்குடி கம்பன் கழகத்தின் கம்பன் திருநாள் அழைப்பு

காரைக்குடிக் கம்பன் கழகத்தின் திருவிழாவில் கலந்து கொண்டு கம்பரசம் பருகி இன்புற வாருங்கள்.

///அன்புடையீர்
வணக்கம்
இதனுடன் காரைக்குடி கம்பன் கழகம்  கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் ஏப்ரல் 7,8,9,10 ஆகிய நாட்களில்  நடத்த உள்ள கம்பன் திருவிழா அழைப்பினை  இணைத்துள்ளோம். அனைவரும் முன்னதாக வந்திருந்து கம்பன் தமிழ் பருகி இன்புற வேண்டுகிறோம்.  

வெள்ளி, 17 ஜூன், 2016

பூரத் திருநாளும் உத்திரத் திருநாளும்.

காரைக்குடியில் நடைபெற்ற கம்பர் விழாவின் மகத் திருநாளை முன்பே பதிவு செய்திருக்கிறேன். பூரம் மற்றும் உத்திரத் திருநாட்களில் எடுத்த புகைப்படங்கள் பழைய லாப்டாப்பில் மாட்டி ( மடிக்கணினி வாங்கி 5 வருடம் கூட ஆகவில்லை . ஹ்ம்ம் ) ப்ளூ ஸ்க்ரீன் ஆகி லாக் ஆகிவிட்டது.எனவே கைபேசியின் காமிராவில் கிடைத்தவற்றைப் பகிர்ந்திருக்கிறேன்.

வழக்கம் போல் செல்வி கவிதாவின் இறைவணக்கத்தோடு தமிழமுதம் அருந்தினோம்.

அதன் பின் என் முகநூல் தோழியும் ப்ரபல கவிதாயினியுமான ராஜாத்தி சல்மா அந்த நிகழ்வுக்கு வருகை தந்திருந்தார்கள். அவர்களுடன் அளவளாவினேன்.

அவர்கள் தேர்தல் சுற்றுப்பயணத்தின் காரணமாக தன்னுடைய ஒரு சில கவிதைகளை மட்டுமே வாசித்துவிட்டு விடைபெற்றார்கள். ( கம்பனில் சுவை ஊற்று என்பது அவருக்கு அளிக்கப்பட்டிருந்த தலைப்பு.)

அதன் பின் கருத்துப் பொழிவு என்ற தலைப்பில் கம்பனில் மறக்க முடியாதது பற்றி  திரு த. இராமலிங்கமும், கம்பனில் மறக்கக் கூடாதது பற்றி திரு பழ கருப்பையாவும் உரை நிகழ்த்தினார்கள். மிகச் செறிவான உரை இரண்டுமே.

கம்பனில் மறக்க முடியாதது பற்றிக் கூறும் போது தன்னைக் கானகத்துக்கு அனுப்ப கைகேயி கட்டளையிட்டாலும் தாயின் கட்டளையைச் சிரமேற்று நிகழ்த்திய தனயனின் செயல்பாடு மறக்க முடியாதது  பற்றிப் புகழ்ந்தார்.

கம்பனில் கவிப் பொழிவு என்ற தலைப்பில் சொற்கடல் என்ற தலைப்பில் திருமதி ருக்மணி பன்னீர் செல்வம் மிகவும் ரசிக்கும்படி அற்புதமாகப் பேசினார். அன்றைய நிகழ்வும் கோட்டையூர் வள்ளியம்மை ஆச்சியின் விருந்தோம்பலோடு முடிவுற்றது.
மறுநாள் நாம் அனைவரும் எதிர்பார்த்த பட்டிமண்டபம்.  இதில் தொடக்க நிகழ்ச்சியாக எம் கவிதா தமிழமுதம் வழங்கினார்.

வியாழன், 16 ஜூன், 2016

நாட்டரசன் கோட்டையிலே.. எங்கள் பாட்டரசன் கோட்டையிலே..

2016 ஆம் ஆண்டு கம்பர் விழாவின் அத்தத் திருநாளன்று எங்கள் பாட்டரசன் கோயில் கொண்ட நாட்டரசன்கோட்டைக்குச் செல்லும் பெரும் பேறு கிட்டியது.


புதன், 23 மார்ச், 2016

கம்பர் திருவிழா - 2016 . மக நாள் மங்கல நிகழ்வுகள்.

கம்பன் அடிசூடி திரு பழ பழனியப்பன் மற்றும் அவரது இளவல்களின் பெருமுயற்சியால் காரைக்குடியில் கம்பர் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

முதல் நாளாம் மக நாளில் ஏகப்பட்ட கொண்டாட்டங்கள். கண்ணுக்கும் செவிக்கும் , மனதுக்கும் , சிந்தனைக்கும்  அதன்பின் வயிற்றுக்கும் மாபெரும் விருந்து படைத்தது சிறப்பு வாய்ந்த கம்பன் கழகம்.

காரைக்குடி கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு ஸ்ரீராமரும் சீதையும் எழுந்தருளி அருள் பாலித்தனர். கோட்டையூரைச் சார்ந்த புரவலர், வள்ளல் பெருமகள்,  திருமதி வள்ளி முத்தையா ( வள்ளல் அழகப்பரின் தமையனாரின் மகள் ) அவர்களின் இல்லத்திலிருந்து ஸ்ரீராமரும் சீதையும் தம்பதி சமேதராக திருச்சின்னங்கள் ஒளிர எழுந்தருளி கிருஷ்ணர் கோயிலில் இருந்து ஊர்வலமாக கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டனர்.
கோயிலில் தீப தூபத்துக்குப் பின் தேவகோட்டை கலைவாணி வித்யாலயா மாணாக்கியர் கொடி பிடித்து மலர் தூவி நடனமாடிப் போற்றித் துதித்து ஊர்வலத்தின் முன்னே வர , சங்கொலிக்க, நாதஸ்வரமும் மேளமும் இசைவெள்ளமாய்ப் பொங்க., தீவட்டி பிடித்தபடி இருவர் முன்னே கட்டியம் கூறிச் செல்ல, வேஷ்டி மற்றும் மஞ்சள் & பிங்க் நிறச் சட்டையணிந்த இளைஞர் பட்டாளம் தோளுக்கினியானில் ஸ்ரீராமர்சீதையைத் தாங்கிக் கவரி வீசி வந்தனர். 
நாட்டியத் தாரகைகள் முன்னே செல்ல கம்பீர அணிவகுப்பில் ஸ்ரீராமரும் சீதையும் கம்பருடன் சேவை சாதித்து அருளினார்கள். ( திரு.வீரப்பன் அவர்கள்  கம்பன் புகைப்படத்தைத் தாங்கி வருகின்றார்கள் )
மனம் கவர் தம்பதிகள் கொற்றக் குடையின் கீழ் உலா.

சனி, 19 மார்ச், 2016

கம்பர் விழா – 2016



கம்பர் விழா – 2016

கம்பன் கழகத்தார் வருடா வருடம் நிகழ்த்தும் கம்பர் விழா இந்த ஆண்டு (2016 ஆம் ஆண்டு) வரும் மார்ச் 21, 22, 23, 24 ஆகிய தேதிகளில் காரைக்குடி கிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடைபெறுகின்றது. அனைவரும் வருக. கம்பரசம் பருகுக.


ஞாயிறு, 6 மார்ச், 2016

கம்பன் நின்று நிலைப்பது அழகியல் பாடல்களிலா, அறவியல் பாடல்களிலா .

”ராமன் நான்கு கொலைகள் செய்திருக்கிறான். ஆனால் ராவணன் உயிர்க்கொலை செய்ததே இல்லை. “ என்று கம்பராமாயணப் பேச்சின் ஊடே ஒரு எதிர்பாரா செய்தியை கம்பனின் கோட்டையான காரைக்குடியில் கம்பன் கழகத்தில் நடைபெற்ற இசைப் பட்டிமண்டபத்தில் வழங்கிவிட்டுத் தப்பிச் சென்றிருக்கிறார் நண்பர் வளரும் கவிதை முத்து நிலவன் அவர்கள். !!!

விஷயம் இதுதான். மார்ச் மாத கம்பர் விழா - 5- 3- 2016. அன்று காரைக்குடி கிருஷ்ணா மண்டபத்தில் நடைபெற்றது. அதில் நண்பர் பதிவர் புதுக்கோட்டை முத்துநிலவன் தலைமையில் நடைபெற்ற இசைப் பட்டிமண்டபத்தில் கம்பன் நின்று நிலைப்பது அழகியல் பாடல்களிலே என்று மகா சுந்தர் அவர்களும், அறவியல் பாடல்களிலே என்று முனைவர் மு.பாலசுப்ரமணியன் அவர்களும் வாதாடினார்கள்.


மிக சுவாரசியமான இவ்விழாவுக்கு மகா சுந்தர் பேசி முடிக்கும்போதுதான் செல்ல இயன்றது. அடுத்து முத்துநிலவன் அவர்கள் செறிவார்ந்த உரையையும் மு பாலசுப்ரமணியன் அவர்களின் உரையையும் , கம்பன் அடி சூடி அவர்களின் நெகிழந்த உரையையும் கேட்கும் பாக்கியம் பெற்றேன்.