எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 16 ஜூன், 2016

நாட்டரசன் கோட்டையிலே.. எங்கள் பாட்டரசன் கோட்டையிலே..

2016 ஆம் ஆண்டு கம்பர் விழாவின் அத்தத் திருநாளன்று எங்கள் பாட்டரசன் கோயில் கொண்ட நாட்டரசன்கோட்டைக்குச் செல்லும் பெரும் பேறு கிட்டியது.


நாடாளுமன்ற  உறுப்பினர் தகைமிகு டாக்டர் ஈ. எம் . சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் கம்பன் அருட்கோயில் வழிபாடு நடைபெற்றது.

மலர் வணக்கத்தை திருமதி லெட்சுமி கிருஷ்ணமூர்த்தியும் திருமதி ராதா ஜானகிராமனும் செய்தார்கள்.

திருச்சிராப்பள்ளை கலைக்காவிரி நுண்களைக் கல்லூரி மாணாக்கர்கள் கம்பன் அருட்கவி ஐந்து ( கம்பன் பஞ்ச ரத்ன கீர்த்தனையைத் தக்க பின்னியங்களுடன் பாடினார்கள்.

செல்வி எம் கவிதா இறைவணக்கம் பாட திரு கண சுந்தர் வரவேற்புரை நிகழ்த்தினார்.

சுதர்சன நாச்சியப்பன் பாட்டரசன் கோட்டையில் பேசும்போது கம்பர் விழாக்குழுவினர் கேட்ட சில கோரிக்கைகளை நிறைவேற்ற முயல்வதாக வாக்கு அளித்தார். 


கம்பன் கலை - நகைச்சுவை என்ற தலைப்பில் முனைவர் இளசை சுந்தரம் அவர்கள் உரையாடி  நகைக்க வைத்தார். 

இளசை சுந்தரம் மிக இனிமையாகப் பேசினார். நாட்டரசன் கோட்டையைச் சார்ந்த வள்ளல் பெருமகள் ஒருவரின் குடும்பத்தார் அன்று அனைவருக்கும் விருந்து படைத்தார்கள்.

முனைவர் மு. பழனியப்பன் நன்றியுரை நிகழ்த்தினார்.


சோலை சூழ் பொழிலில் பூக்கள் பழங்கள் சூழ கோயில் கொண்டிருந்த கம்பனைத் துதித்து பூசையில் வைத்து வணங்க அவர் கோயில் மண்ணை எடுத்து வந்தோம். அவர் வீட்டுக் கட்டுத் தறியே கவிபாடும்போது அவர் இருக்கும் மண்ணைத் தொட்ட நாம் என்னாவோமோ என்று மகிழ்ந்தோம். தொடரட்டும் தமிழுக்கும் அவருக்கும் நமக்குமான தொந்தம். 

( 24.3. 2016 அன்று நடைபெற்ற இந்நிகழ்வை இன்றுதான் வலைப்பூவில் பகிர முடிந்தது )

வாழிய செந்தமிழ். !


5 கருத்துகள்:

 1. // அவர் வீட்டுக் கட்டுத் தறியே கவிபாடும்போது அவர் இருக்கும் மண்ணைத் தொட்ட நாம் என்னாவோமோ என்று மகிழ்ந்தோம். தொடரட்டும் தமிழுக்கும் அவருக்கும் நமக்குமான தொந்தம்.//

  மேலும் அருமையான கவிதை புனைவீர்கள்.
  வாழ்த்துக்கள்.
  கம்பர் விழாவில் கலந்து கொண்ட உணர்வு.

  பதிலளிநீக்கு
 2. காரைக்குடி கம்பன் விழா என்றாலே - எப்போதும் தமிழை மறக்காத விழா என்றுதான் சொல்ல வேண்டும். விழா எடுத்து சிறப்பித்த தமிழ் உணர்வாளர்கள் அனைவருக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 3. விழா பற்றிய தகவல்களும் படங்களும் நன்று. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. நன்றியும் அன்பும் கோமதி மேம் !!

  நன்றி இளங்கோ சார் !

  நன்றி வெங்கட் சகோ !

  பதிலளிநீக்கு

 5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...