காரைக்குடியில் நடைபெற்ற கம்பர் விழாவின் மகத் திருநாளை முன்பே பதிவு செய்திருக்கிறேன். பூரம் மற்றும் உத்திரத் திருநாட்களில் எடுத்த புகைப்படங்கள் பழைய லாப்டாப்பில் மாட்டி ( மடிக்கணினி வாங்கி 5 வருடம் கூட ஆகவில்லை . ஹ்ம்ம் ) ப்ளூ ஸ்க்ரீன் ஆகி லாக் ஆகிவிட்டது.எனவே கைபேசியின் காமிராவில் கிடைத்தவற்றைப் பகிர்ந்திருக்கிறேன்.
வழக்கம் போல் செல்வி கவிதாவின் இறைவணக்கத்தோடு தமிழமுதம் அருந்தினோம்.
அதன் பின் என் முகநூல் தோழியும் ப்ரபல கவிதாயினியுமான ராஜாத்தி சல்மா அந்த நிகழ்வுக்கு வருகை தந்திருந்தார்கள். அவர்களுடன் அளவளாவினேன்.
அவர்கள் தேர்தல் சுற்றுப்பயணத்தின் காரணமாக தன்னுடைய ஒரு சில கவிதைகளை மட்டுமே வாசித்துவிட்டு விடைபெற்றார்கள். ( கம்பனில் சுவை ஊற்று என்பது அவருக்கு அளிக்கப்பட்டிருந்த தலைப்பு.)
அதன் பின் கருத்துப் பொழிவு என்ற தலைப்பில் கம்பனில் மறக்க முடியாதது பற்றி திரு த. இராமலிங்கமும், கம்பனில் மறக்கக் கூடாதது பற்றி திரு பழ கருப்பையாவும் உரை நிகழ்த்தினார்கள். மிகச் செறிவான உரை இரண்டுமே.
கம்பனில் மறக்க முடியாதது பற்றிக் கூறும் போது தன்னைக் கானகத்துக்கு அனுப்ப கைகேயி கட்டளையிட்டாலும் தாயின் கட்டளையைச் சிரமேற்று நிகழ்த்திய தனயனின் செயல்பாடு மறக்க முடியாதது பற்றிப் புகழ்ந்தார்.
கம்பனில் கவிப் பொழிவு என்ற தலைப்பில் சொற்கடல் என்ற தலைப்பில் திருமதி ருக்மணி பன்னீர் செல்வம் மிகவும் ரசிக்கும்படி அற்புதமாகப் பேசினார். அன்றைய நிகழ்வும் கோட்டையூர் வள்ளியம்மை ஆச்சியின் விருந்தோம்பலோடு முடிவுற்றது.
மறுநாள் நாம் அனைவரும் எதிர்பார்த்த பட்டிமண்டபம். இதில் தொடக்க நிகழ்ச்சியாக எம் கவிதா தமிழமுதம் வழங்கினார்.