எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
செல்ல கணபதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செல்ல கணபதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

கம்பன் கழகம் - சொ சொ மீ யின் பாராட்டுரை. மூன்று தாமரைகளும் பிள்ளையார்களும்.

எங்கள் கல்லூரியின் முத்தழிச் சங்கத்தில் கேட்டு ரசித்த சொ சொ மீ அவர்களின் உரையைப் பல்லாண்டுகளுக்குப் பின் கம்பன் கழகத்தில் கேட்டு ரசித்து மகிழ்ந்தேன். தழிழ்த் தேனை மாந்தி மகிழ்ந்தேன் என்பது சாலப் பொருந்தும் :)
குழந்தைக் கவிஞருக்கு கம்பன் அடிப்பொடி விருது வழங்கப்பட்ட நாளில் திருமந்திரச் சொல்மணி திரு சொ சொ மீயின் உரை மிகச் செறிவானதாக இருந்தது. மூன்று தாமரைகளையும் இரண்டு பிள்ளையார்களையும் அவர் ஒருங்கே உவமைப்படுத்திய விதம் சுவையானது.

கம்பன் அடி சூடியின் உரைக்குப் பின் தன்னுடைய உரை அமைந்ததால் அது இலக்கியமழைக்குப் பின்னே சிதறும் தூவானம் என்று குறிப்பிட்டார்.

புதன், 26 ஆகஸ்ட், 2015

குழந்தைக் கவிஞரும் மேனாள் நிதியமைச்சரும் மொழிக்கோயிலும்.



திரு.கம்பன் அடிசூடி அவர்களின் வரவேற்புரை. :-

குழந்தைக் கவிஞரும் மேனாள் நிதியமைச்சரும் மொழிக்கோயிலும்.:-

குழந்தைக் கவிஞருக்கு கம்பன் அடிப்பொடி விருது வழங்கும் விழாவில் கம்பன் அடிசூடி அவர்களின் உரையில் உற்சாகம் கரைபுரண்டோடியது. நிகழ்வுக்கு வந்திருந்த ஒவ்வொருவரையும் அவர் பொருத்திச் சொன்ன விதம் அருமை.

காரைக்குடி கம்பன் கழகத்தில் குழந்தைக் கவிஞருக்கு கம்பன் அடிப்பொடி விருது :-



காரைக்குடி கம்பன் கழகத்தின் 58 ஆவது கூட்டம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடந்தது. இந்தக் கூட்டத்தில் இந்த வருடம் சாகித்திய அகாதமியின் சிறந்த சிறுவர் இலக்கியப் படைப்புக்கான பால சாகித்திய புரஸ்கார் விருது பெற்ற கண்டனூர் குழந்தைக் கவிஞர் செல்ல கணபதி அவர்களைப் பாராட்டி கம்பனடிப்பொடி விருது வழங்கப்பட்டது.

அந்தக் கூட்டத்திற்கு கலந்து கொள்ள அழைப்பிதழ் கம்பனடிசூடி திரு பழனியப்பன் அவர்களிடமிருந்து வந்ததால் கலந்து கொண்டேன்.