எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 30 செப்டம்பர், 2017

சாட்டர்டே ஜாலி கார்னர். :- சஷிகா செய்த முதல் ரசம்


சஷிகா என்ற பெயரில் வலைப்பூவில் எழுதிவரும் எங்கள் அன்பு தங்கை மேனகா சத்யா மிக ருசியாக வகைவகையாக சமைப்பார். அது மட்டுமல்ல செக்ஷன் வாரியாகப் பிரித்து தொகுத்திருப்பார். தினம் ஒன்று ஜொள்ளு விட வைக்கும் அளவு இருக்கும். எந்த உணவுக்கு எது காம்பினேஷன் என்றும் கரெக்டாக ஜோடி சேர்த்து காம்போ வழங்குவதில் அவருக்கு இணை அவரே . 

சஷிகா என்ற பேரின் பின்னணியிலும் ஒரு தகவல் இருக்கு. மேனகாவின் கணவர் சத்யா. மகள் பெயர் ஷிவானி. சத்யாவிலிருந்து "ச " ஷிவானியிலிருந்து "ஷி" மேனகாவிலிருந்து "கா" என எடுத்து இணைத்து "சஷிகா" ஆகிவிட்டார்.   

அவரிடம் சாட்டர்டே போஸ்ட்டுக்காகக் கேட்டபோது அவர் முதல் முதலில் சமையல் செய்யும்போது என்னென்ன சொதப்பல்கள் செய்தார் எனக் கேட்டிருந்தேன். அதற்கு அவர் இதை அனுப்பினார். இரு குழந்தைகளுடன் வலைப்பூவிலும் அவர் எழுதிக் கொண்டிருப்பது பிரயத்தனமான செயல். அதற்காக அவருக்கு என் அன்பும் வாழ்த்தும்.

இனி அவர் சொன்னது இங்கே.
என்னை பற்றி

என் பெயர் மேனகா சத்யா...சஷிகா என்னும் வலைப்பூவில் சமையல் குறிப்புகளை எழுதி வருகிறேன்.சொந்த ஊர் புதுச்சேரி,இரண்டு குழந்தைகளுடன் வசிப்பது பிரான்சில்...

அன்றாடம் செய்யும் சமையல் குறிப்புகளையே வலைப்பூவில் விளக்கபடங்களுடன் எழுதுகிறேன்.

தற்போது ஆங்கில வலைப்பூவிலும் எழுதி வருகிறேன்..நீண்ட நாட்களாக தேனக்கா சாட்டர்டே ஜாலி கார்னரில் எழுத சொல்லி கேட்டபோது முடியவில்லை.இந்த மாதம் எழுதி தருகிறேன் என்று சொல்லி மறந்துவிட்டேன்.மீண்டும் அக்கா நினைவுபடுத்தி கேட்ட போது உடனடியாக எழுதி அனுப்பி விட்டேன்.

தாமதத்திற்கு மன்னிக்கவும் அக்கா..

நான் சமையல் செய்ய ஆரம்பித்ததே வேடிக்கையானது தான்.6ஆம் வகுப்பு படிக்கும் போது சமையல் செய்யும் ஆர்வத்தில் ரசம் வைத்தேன்.

எப்படி செய்யனும்னு கூட கேட்காமல் நானே என் இஷ்டபடி அஞ்சறைபெட்டியில் இருக்கும் அனைத்து சாமானும் போட்டு ரசம் வைத்து என் அப்பாவுக்கு தான் பரிமாறினேன்.

நானே செய்த ரசம் என சொன்னதும் அப்பாவும் ஆஹா நீ ரசம் வைத்தது நான் வேலை செய்யும் இடம் வரை செம வாசனை வந்தது என சொல்ல நானும் மகிழ்ச்சியில் இன்னும் சாப்பிடுங்கப்பா என ரசத்தை ஊற்ற அப்பா மெல்லவும் முடியாம முழங்கவும் முடியாம சாப்பிட்டார்.

பிறகு நான் சாப்பிடும்போது தான் தெரிந்தது ரசம் படுகேவலமா இருந்தது.அப்போழுதுதான் அப்பாவின் அன்பை இன்னும் அதிகமாக உணர்த்திய தருணம் அது.

அம்மா அப்பாவிடம் நல்லா இல்லாதபோது எதுக்கு சாப்பிட்டீங்கன்னு கேட்க,அதற்கு அப்பா பிள்ளை மனது கஷ்டபடும் என்றும் இப்போழுதே ஊக்கபடுத்தி செய்தால் இன்னும் நல்லா செய்வாங்கன்னு சொன்னார்..

அதற்கு பிறகு சமையல் நன்றாக செய்ய கற்றுக்கொண்டேன்.

தங்கள் வலைப்பூவில் எழுத வாய்ப்பு கொடுத்த உங்களுக்கு நன்றிக்கா !!
https://sashiga.blogspot.fr/
டிஸ்கி:- சமையல் செய்யும்போது எல்லாரும் செய்யும் எரர்தான் இது. இதை விட அதிகமாவே செய்திருக்கோமாக்கும். ( சப்பாத்தி மாவுன்னு நினைச்சு உளுந்து மாவைப் பிசைஞ்சு அப்புறம் அதை கட்டைல வைச்சு அமுக்கி அமுக்கிப் பிழிஞ்சு முறுக்கா சுட்டது., கடலெண்ணெய்னு  நினைச்சு நல்லெண்ணையில் பூரி சுட்டதுன்னு. ).

அப்பாக்களுக்கு பெண்கள் செய்தால் அது அமிர்தம்தான். அதுனாலதான் மகள் செய்த ரசத்தை ரசிச்சு சாப்பிட்டுருக்காரு. அப்பாக்கள் வாழ்க. :) உங்க வேலைகளுக்கிடையிலும் சேட்டை செய்யும் பிள்ளைகளை சமாளித்து பிலாக்கிலும்  எழுதிக்கொண்டு சாட்டர்டே ஜாலி கார்னருக்கும் எழுதி அனுப்பியமைக்கு அன்பும் நன்றியும்டா. 

11 கருத்துகள்:

 1. ஹஹஹா... ரசம்!!! ஊருக்கு போனா மதிய சாப்பாட்டுக்கு லேட்டாதான் போவேன்.. டைனிங் டேபிள் ல உட்கார்ந்து சாதம் எடுத்து தட்டுல போடும்போது, அக்கா ஏதாவது சொல்லிட்டே வந்து கூட்டு ,பொரியல்னு போடுற சாக்குல ரசம் இருக்கிற பாத்திரத்தை மட்டும் கொஞ்சம் தள்ளி வைப்பாங்க.. ஏன்னா, ஏதேச்சையா அதை பார்த்துட்டேன்னா, அது மட்டும் தான்...

  பதிலளிநீக்கு
 2. //சமையல் செய்யும்போது எல்லாரும் செய்யும் எரர்தான் இது. இதை விட அதிகமாவே செய்திருக்கோமாக்கும். ( சப்பாத்தி மாவுன்னு நினைச்சு உளுந்து மாவைப் பிசைஞ்சு அப்புறம் அதை கட்டைல வைச்சு அமுக்கி அமுக்கிப் பிழிஞ்சு முறுக்கா சுட்டது., கடலெண்ணெய்னு நினைச்சு நல்லெண்ணையில் பூரி சுட்டதுன்னு. ).// ஹா ஹா சிரிச்சுட்டு இருக்கேன் அக்கா.எல்லோருக்கும் இது போல அனுபவம் நிறைய இருக்கு போல...ஆமாம்கா அப்பாக்களுக்கு பொண்ணுங்க என்ன சமைத்தாலும் அமிர்தம் தான்..
  இப்போ என் பொண்ணு என்ன செய்தாலும் இவர் ஆஹா ஒஹோ ந்னு ஒரே புகழாரம் தான்..

  பகிந்தமைக்கு மிக்க அன்பு அக்கா...

  பதிலளிநீக்கு
 3. என் மருமகளும் கடலைப் பருப்பு போட்டு சாம்பார் செய்திருக்கிறார்

  பதிலளிநீக்கு
 4. வாழ்த்துக்கள் மேனகா.
  ஆரம்பத்தில் நானும் சொதப்பி தட்டுதடுமாறிதான் இன்று நன்றாக சமைக்கிறேன் என பெயர் எடுத்திருக்கேன். உண்மையில் அதற்கு இணையத்தில் இருக்கும் சமையல் ப்ளாக் தான் ரெம்ப உதவியாக இருந்தது. மேனகாவின் சமையல் குறிப்புக்கள் ரெம்ப உதவியாக இருந்தது என்றால் மிகையில்லை. அவங்க பக்கம் ஈசியா தேட வகைப்படுத்தியிருக்காங்க. பார்த்து ஈசியா செய்து அசத்திடலாம். மேலும் நல்ல குறிப்புகள் தர வேணும் மேனகா.கீப் இட் அப்.
  நன்றி தேனக்கா.

  பதிலளிநீக்கு
 5. சூப்பர்! தேனு!! நல்ல ஒரு வலைப்பூவையும் அதுவும் முக்கியமா சாப்பாட்டு விஷயம் பற்றி எழுதுபவரை அறிமுகப் படுத்தியமைக்கு ரொம்ப தேங்ஸ். இதோ போறேன்....ஸ்வாரஸ்யமான சாட்டர்டே கார்னர்..

  கீதா

  பதிலளிநீக்கு
 6. எங்கள் குடும்ப சமையல் அறைகளின் ருசிக்கு....மேனகாவின் வலைப்பதிவு ஒரு முக்கிய காரணம் !!!

  மேனகா சமையல் மெனு எது கேட்டாலும் வீட்டம்மா சளைக்காம பண்ணி தருவாங்க, சுவையாக இருக்கும் !

  பதிலளிநீக்கு
 7. @Kalyaan Kumarஹா ஹா...ரசம் இல்லாத சாப்பாடா,எனக்கெல்லாம் ரசம்/மோர் எதவாது இருக்கனும்

  @G.M .Balasubramaniam
  பருப்பு ரசம் போல இருக்கும்.கர்நாடாகவில் போளி ரசம்னு சொல்வாங்க..

  @Priyasakiமிக்க நன்றி ப்ரியா..இந்த உற்சாகமான கருத்துதான் இன்னும் நிறைய செய்ய தோனுது...

  @Thulasidharanமிக்க நன்றிங்க...

  @Nanjil Manp மிக்க நன்றி சகோ...என்னுடைய சமையலை உங்க வீட்டம்மா செய்றாங்கன்னு கேட்கும் போது சந்தோஷம்..என் அன்பு அவங்களுக்கு

  @ Vijiskitchencreations நன்றி விஜி !!

  பதிலளிநீக்கு
 8. மேனகா சத்யாவின் ரெசிபி ரசிகன் நான்.. பல வருடங்களாக இவர் வலைப்பதிவுகளால் சுவையான உணவு எனக்குக் கிடைத்திருக்கிறது.

  பதிலளிநீக்கு
 9. சிக்ஸ்த் ஸ்டாண்டார்ட் படிக்கும்போதே சமையல் செய்ய ஆரம்பிச்சீங்களா !!! ஆவ் கிரேட் மேனகா ..
  அப்பா அம்மாக்கு மகள் கையால் அவ்ளோ சின்ன வயசில் முதமுதலா சமைச்ச அந்த அன்புக்கு முன்னால் ரசம் சுவையெல்லாம் கண்ணுக்கே தெரிஞ்சிருக்காதுப்பா . கிரேட் அனுபவம் மேனகா !! . ஹி ஹீ சமையலில் சொதப்பாதோர் யார்தான் இல்லை :)
  நம்ம அனுபவம்லாம் கேட்டா மக்கள்ஸ் ஓடிருவாங்க :)
  வாழ்த்துக்கள் மென்மேலும் அழகிய குட்டி குட்டி சமையல் குறிப்புகளை அள்ளி வழங்கவும் ..

  உங்கள் குறிப்புகள் எங்க வீட்ல அடிக்கடி செய்வேன் :) என் மகளுக்கு உங்க இங்கிலிஷ் பிளாக் லிங்க் தரப்போறேன் :)
  அடிக்கடி ஏதாச்சும் SOUTH INDIAN ரெசிப்பீஸ் சொல்லித்தரச்சொல்றா :)  பதிலளிநீக்கு
 10. karuththukku nandri Kalyaan !

  welcome da Menaga

  karnadakavil appadithan vaikirangka Bala sir !

  karuththukku nandri da Priyasaki.

  thanks Geetha !

  ahaa super vishayam Mano. :)

  sariya soneengka Viji. agree with you

  karuththukku nandri Durai A

  karuththukku nandri da Angel a;0

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...