எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 22 அக்டோபர், 2017

இளம் தொழில் முனைவோருக்கு சில ஆலோசனைகள்.

சர்வதேச நகரத்தார் வர்த்தக சபை சென்ற வருடம் துபாயை மையமாகக் கொண்டு இயங்கியபோது  தொழில் வளர்ச்சியில் முன்னணி வகிக்கும் தொழில் அதிபர்களை இனம் காட்டியதோடு இளம் தொழில் முனைவோரையும் உருவாக்கத் திட்டமிட்டது.
இளம் தொழில் முனைவோருக்கு என்னென்ன குணாதிசயங்கள் தேவை , என்னென்ன திறமைகளைக் கைக்கொள்ள வேண்டும் என வழிகாட்டத் திட்டமிட்டது. இதற்கென ஒரு குழு உருவாக்கப்பட்டது.

அக்குழு அதன் முதல் படியாக  அமீரகம் மற்றும் வெளிநாடுகளில் வசித்துவந்த செட்டிநாட்டுக்  குழந்தைகளுக்கு நம் வேர் பற்றியும், கலாச்சாரப்  பாரம்பரியப் பெருமைகள் பற்றியும், முக்கியமாக நம் சமூகக் கட்டமைப்பு & வியாபாரத் திறமைகள் பற்றியும் கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டது.

அத்தோடு தன்னம்பிக்கை, தைரியம், அனுபவம், நிதி ,நிர்வாகம், காப்பீடு , முதலீடு, வாங்கிக் கடன், வியாபார நுணுக்கங்கள், நெறியாள்கை, தன்னிறைவு, ஆளுமைத்தன்மை, வழிநடத்துதல்,  புதுமைக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளுதல், அனைவரிடமிருந்தும் தகவல்களை அங்கீகரித்தல், குழு தகவல் பரிமாற்றம் , குழுவாக இணைந்து செயல்படுதல் , கொள்முதல், வியாபார நிலவரத்தை ஆராய்தல், வெற்றிகரமான தொழில் எது என தேர்ந்தெடுத்தல்.  வாடிக்கையாளரைக்  கையாளுதல், எதிர்பாராத பிரச்னைகளைக் கையாளுதல், பணப்பிரச்னைகளைக் கையாளுதல், வெற்றிகரமாகத்  தொழில் செய்யத் தேவையானவை என்னென்ன என்பதைக் கற்பிக்க ஒரு பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது.

NBIG (Nagarathar Business Initiative Group ) துபாயின் ஏற்பாட்டில்  IBCN-2017,  செயலாளரான திரு. ரமேஷ் ராமனாதன் அவர்களின் சோழபுரம் இல்லத்தில் (பங்களா ) வெளிநாடுகளில் வசிக்கும்நகரத்தார் குழந்தைகளுக்கு  நம் கலாச்சாரத்தைப் பயிற்றுவிக்கும் முகம், முகாம் ஒன்று ஆகஸ்ட்  7,8,9,10 ஆகிய தினங்களில் நடைபெற்றது. முதல்நாள் திரு ப்ளாஸம் அழகப்பன் அவர்களும்இரண்டாம் நாள் பேராசிரியர் திரு அய்க்கண் அவர்களும், மூன்றாம் நாள் திரு எம் சி எம் மாணிக்கம் அவர்களும் வள்ளி அண்ணாமலை அவர்களும், நான்காம் நாள் திரு முத்துராமன் அவர்களும்குழந்தைகளுடன் உரையாற்றினார்கள்.

திரு சிங்காரம் அவர்களும், மதுரையைச் சேர்ந்த டாக்டர் அங்கையற்கண்ணி அவர்களும், நாட்டரசன்கோட்டை அரசுப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற வெற்றியூர்திரு அரு சுந்தரம் அவர்களும் கரம் கோர்த்தார்கள்.இவர்களுடன் வலைப்பதிவர்கள் திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களும் அவர்களின் தாயார் திருமதி முத்து சபாரெத்தினம் அவர்களும்இணைந்துகொண்டார்கள்.

பெருகி
 வரும் முதியோர் இல்லம், அதிகரித்து வரும் கலப்புத் திருமணங்கள், பெற்றோரை நிராகரிப்பது, நாம் யார், எங்கிருந்து வந்தோம், நம்முடைய தொன்மையான கலைகள், சமையல்,தெய்வ வழிபாடு, கலாச்சாரம் என்ன என்பன பற்றிய போதிய விழிப்புணர்வினை இளைய தலைமுறையினரிடம் எடுத்துச் சொல்லவே இந்த முகாம் நடைபெற்றுள்ளது. 

தனவணிகம்,
 அரசியல், பொருளாதாரம், பங்குச் சந்தை, வங்கிகள், பல்கலைக் கழகங்கள், பசு மடங்கள், அறப்பணிகள், சமூகப் பணிகள்,சத்திரங்கள், துறவறம், தீட்சை,  பத்ரிக்கைப் பணி,திரைப்படங்கள் தயாரித்தல் எனப் பன்முகம்  கொண்ட கெழுமிய பின்னடையாளங்களைப் பெற்றுள்ள நாம் பெற்றுள்ள சரிவை முன்வரும் காலங்களில் இம்மாதிரி முகாம்கள்தான் மீட்டுத்தரவேண்டும். 

ஐக்கிய அரபு நாடுகளிலில் இருந்து 19 குழந்தைகளும், இங்கிலாந்திலிருந்து 6 குழந்தைகளும் இதில் பங்கேற்றுள்ளனர். இவர்கள் 5 வயதிலிருந்து 20 வயதிற்குட்பட்டவர்கள். இந்தக் குழந்தைகளில்முதல் வருடம் டாக்டருக்கும், ஆடிட்டிங்கும் படிக்கும் மாணாக்கர்களும் உண்டு.

தினமும்இறைவணக்கமும் , யோகாவும் தியானமும் நடைபெற்று அதன் பின் காலை உணவும் கலந்துரையாடலும் நடந்தது. 

9 நகரத்தார் திருக்கோயில்கள்,ஆத்தங்குடி டைல்ஸ்  மேக்கிங் , தறியில் புடவைகள் நெய்யப்படுவது,  கடியாப்பட்டியில் உள்ள  சிதம்பரவிலாஸ் ஹெரிட்டேஜ் ஹோமில்  பொம்மைக் கொட்டகை, கல்யாணக் கொட்டகை ,நகரத்தார் வீடுகளின் கட்டிடக்கலை அமைப்புகள்,  கானாடு காத்தான் அரண்மனை ஆகியவற்றைக் கண்டு களித்திருக்கின்றார்கள்.

கோயிலூர் மடத்தின்அருங்காட்சியகத்தில் செட்டிநாட்டின் பாரம்பர்யப் பொருட்கள், விவரங்கள், வலசை வந்தது, அதன் மடாதிபதிகள் பற்றிய விவரங்கள் அறிந்தனர். கோயிலூர் மடத்தின் PROதிரு சேதுராமன் குமரப்பன் அவர்கள் குழந்தைகளிடம் உரையாற்றினார். துலாவூர் மடம், பாதரக்குடி மடம் பற்றியும் தீட்சை பெறுதல் பற்றியும் நகரத்தார் உறையும் 76 ஊர்கள் பற்றியும்கேட்டறிந்தனர். இங்கே ப்ரஸ் மீட் நடைபெற்றது. 

அன்று
 மாலை சோழபுரத்தில் திருமதி. வள்ளி அண்ணாமலை அவர்களும் , திரு.எம்.சி.என் மாணிக்கம் அவர்களும், திரு. வைத்தியநாதன் அவர்களும் உரையாற்றினார்கள்.  திரு முத்துராமன்வால்யூ எஜுகேஷன் எடுத்தார்கள். ஒருவருக்குப் படிப்பும் பண்பும் இன்றையமையாதது. ஒன்றிருந்து ஒன்றில்லாவிட்டால் பயனில்லை என்பதை வலியுறுத்தினார்கள்.

மாட்டு வண்டி சவாரி, நடுவீட்டுக் கோலமிடக் கற்றல், கூடை & கொட்டான் முடையக் கற்றல், தென்னங்குருத்தைக் கொண்டு தோரணம் தயாரித்தல், ( கூந்தல் என்றும் சொல்வார்கள் )., கழுத்துரு கோர்த்தல், சங்கு ஊதுதல், தும்புபிடித்தல், பொங்கலிடுதல், செட்டிநாட்டுச் சமையல் செய்யக் கற்றார்கள். 

தேவாரம்
 திருவாசகம் மற்றும் செட்டிநாட்டுப் ப்ரபலங்கள் பற்றிய வினாடிவினா அறிவுப் போட்டியைத் திருமதி மங்கையர்க்கரசியார் நடத்தினார்கள்.  குழந்தைகள் சீரும் சிறப்புமாகஉறவினருடன் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் வரும்போது ஒவ்வொருவராக வந்தவர்கள் மனதளவில் நம் கலாச்சாரத்தால் கெட்டிப்பட்ட செட்டிமக்கள் இருபத்திஐன்மராகக் கைகோர்த்ததுச்சென்றார்கள். இதுவே இந்நிகழ்வின் வெற்றி !!! 

இதன் படிநிலைகளாக காரைக்குடியில் பிள்ளையார் நோன்பு சமயத்தில்இளம் தொழில் முனைவோருக்கான ஒரு அறிமுகக் கூட்டம் நடந்தது. இளம்தலைமுறைத் தொழில் முனைவோர்ஐபிசின்னின் வழிகாட்டுதலுடன் தங்கள் தன்முனைப்பைச் செதுக்கிக்கொண்டதை அழகாகக் கூறினார்கள். இதன் காரணகர்த்தாக்களான துபாய் வாழ் நகரத்தார்களான சொக்கலிங்கம், ரமேஷ், மெய்யப்பன் ஆகியோரைப் பாராட்டினார்கள். இவர்கள் பாரம்பரிய உடையில் வந்திருந்ததோடு மட்டுமல்ல.  தயக்கம் இல்லாமல் துணிச்சலோடும் அழகாகவும் தமிழில் உரையாற்றினார்கள். !

இன்னுமுள்ள இளையவர்களையும் தொழில் துறையில் ஈடுபட அழைத்ததோடு குடும்பத்தாரின் ஒத்துழைப்பின் இன்றியமையாமையையும் வலியுறுத்தினார்கள்.

உப்பு வணிகத்திலிருந்து தனவணிகம்செய்து கொண்டுவிற்று (.”கொண்டுவிற்று” என்றால் முதல் பணம் கொண்டு சென்று அதைத் தருமவட்டிக்கு விட்டுப் பெருக்கி என்று அர்த்தம் ) வென்றவர்கள் நாம். 

இதன் மூன்றாம் படிநிலையாக அமீரகக் குழந்தைகளுக்கும் இளம் தொழில் முனைவோராக விரும்பிய குழந்தைகளும் குழுவாக அமைக்கப்பட்டு குழு செயல்பாடுகள் கற்பிக்கப்பட்டன. குழுப்போட்டிகள் நடத்தப்பட்டன. நான்கு பேர் இணைந்து செயல்படுவதை குழந்தைகள் கற்றுக் கொண்டார்கள். ஒருவரிடமிருந்து ஒருவர் வெவ்வேறு திறமைகளை அறிந்துகொண்டார். லாபம்ஈட்டிட வியாபாரத் திறமை மட்டும் போதாது. தள்ளிப் போடாமை, குறிப்பிட்ட நேரத்தில் செயல்படுதல்( நேரத்தின் முக்கியத்துவம் ), குடும்பத்தார் ஒத்துழைப்பு, வியாபார பங்குதாரர்களின்ஒத்துழைப்பைப் பெறுதல் போன்ற சின்னச்சின்ன விஷயங்களையும் கவனித்துச் செயலாற்றவேண்டும் என்பதைத் தெரிந்தார்கள். 

நான்காம் படிநிலையாக பணம் என்றால் என்ன, சேமிப்பு  என்றால் என்ன  , வியாபாரம் என்றால் என்ன, வர்த்தகக் கடன், முதலீட்டுக் காப்பீடு, பங்குச்சந்தை, வங்கிச்செயல்பாடு, ரிஸ்க், சொத்து, கடன், டாலர் பரிமாற்றங்கள், அந்நிய செலாவணி, ஆகியன பற்றி திரு. கே எல் ரவீந்திரன் பயிற்சி அளித்தார். திரு. குணா அவர்கள் ஸ்டீவன் கோவே என்ற புகழ்பெற்ற எழுத்தாளரின் நூலில்இடம் பெற்ற வெற்றிபெற்ற மனிதர்களின் ஏழு பழக்க வழக்கங்களை பட்டியலிட்டார்.

அதன்பின் ஐந்தாம் படிநிலையாக இண்டர்ன்ஷிப் வழங்கப்பட்டது. பின்னால் சந்திக்கப்போகும் உலகை ஒரு மாதிரி உலகமாக வைத்து எதிர்கொள்ள வேண்டியதை எல்லாம் பரிசோதனை முயற்சியாகஅன்றே எல்லாம் கற்பிக்கப்பட்டன. இந்தக் களப் பயிற்சியில் துபாய், அஜ்மான், ஷார்ஜா,அபுதாபிஆகியமாகாணங்களில்இருந்துஎல்லாம்குழந்தைகள்வந்துபங்கெடுத்தார்கள்.  வியாபாரம் செய்யும்போது தங்களை விட சின்னக் குழந்தைகளுக்கும் பணத்தைக் கையாள்வது பற்றியும் வியாபாரம் பற்றியும்  வகுப்பெடுத்துக் கற்பித்தார்கள் அதன்படிபனியன் விற்பது போன்ற நிஜமான சிறு வியாபாரங்களை  மாதிரி முறையில் சிறப்பாக நடத்திக்காட்டினார்கள் குழந்தைகள். இவர்கள் இணைந்து ஒரு மாதிரி சந்தையையே ( ஹோம்மேட், ஹாண்ட்மேட் , செல்ஃப்மேட்) கைப்பொருட்கள் கொண்டு உருவாக்கி வெற்றிகரமாக வியாபாரம் செய்ததும் வியப்புக்குரியது. 

இது தவிர வர்த்தக நிறுவனங்கள், தகவல் தொடர்பு நிறுவனங்கள், வங்கிகள், சில்லறை வணிகங்கள், பயண அலுவலகங்கள், உணவகங்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றில்தற்காலிமாக பணிப் பயிற்சி ஏற்று சிறப்பாகச்செய்தார்கள்..

இவ்வாறு கற்றுக் கொண்ட குழந்தைகள் வாடிக்கையாரைக்  கையாள்வது மட்டுமல்ல. எந்த இடத்தில் என்ன தொழில் துவங்கலாம். எது சிறப்பான தொழில்., என்னென்னவற்றுக்கு எங்கெங்கேதேவை உள்ளது என்ற புதுத்தகவல்களோடும் வந்தது சிறப்பு. 

ஆறாம் படிநிலையாக இளம் தொழில் முனைவோருக்கான பிசினஸ் பிளான் காம்பெட்டிஷன் என்ற போட்டி நிகழ்த்தியது ஐபிசிஎன்.  தங்கள் தொழில் திறமையை வீடியோவாக எடுத்து அதைஅவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். இதில் மொத்தம் 500 பேர் கலந்துகொண்டார்கள்.50 பேராக ஒருங்கிணைந்து நான்கு காம்பெட்டிஷன்கள் செய்தார்கள். யூத் ஆண்டர்ப்ரினியூவர்ஷிப்க்குக்கானபோட்டி இது. 

இதில் தொழில் முறையைப் பரப்புதல், பேச்சுப்போட்டி, வியாபாரத்திறமை, இந்த சமூகத்துக்கு அவர்களின் பங்களிப்பு, ஆகியன கணக்கில் கொள்ளப்பட்டு  ஒரு லட்ச ரூபாய் பரிசளிக்கப்பட்டது.  இதில் வென்ற குழுக்களுக்கு ஸ்பான்ஸர்ஷிப் மூலம் விமானப் போக்குவரத்துச் செலவு வழங்கப்பட்டது.

இவர்கள் 2017 இல் துபாயில் நடைபெற்ற நகரத்தார் வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டு இரண்டரை நாள் அந்நிகழ்வுகளை முழுமையாகப் பார்த்து அறிந்ததோடு ஐபிசிஎன்னால்கௌரவிக்கவும் பட்டார்கள். 

இத்துடன் விடாமல் இன்னும் ஒரு வருடத்துக்கும் இவர்கள் ஐபிசிஎன்னின் வழிகாட்டுதலில் இருப்பார்கள்.

 2017 நவம்பரில் ஒரு இளம் தொழில் முனைவோருக்கான மாநாடு நடத்தமுடிவாகியுள்ளது. அதன்முலம் வியாபாரத்தின் ரிஸ்க்கை குறிப்பிட்ட அளவு ஏற்று  பின்புலமாக ஐபிசிஎன் இருப்பதாக வாக்களித்திருப்பதால் இளம் தொழில் முனைவோர் தன்னம்பிக்கையுடன்தொழில் தொடங்கி வெற்றிகரமாகச் செயல்படத் துவங்குவார்கள். ஐபிசிஎன் சார்பாக அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

மூத்தோர் சொல் அமிர்தம் என்று முன்னோர்கள் துணைகொண்டு நம் ரத்தத்தில் உறங்கிக் கிடக்கும் வியாபாரத் திறமைகளைத் தட்டியெழுப்புங்கள். உலைந்துபோன நமது திறமைகளை மீட்டெடுங்கள். மாறி வரும் இன்றைய உலகுக்கேற்றவாறு நம்மைப் புதுப்பியுங்கள்.

கூடி வாழ்தல் நமது ரத்தம்.நெறிமுறைகள் கொண்ட வியாபாரம் நமது யுத்தம். ஒத்த சிந்தனையுடைய இளையவர்கள் கரம்கோர்த்து  ஒருங்கிணைந்து தொழில் புரியுங்கள். ஜெயிப்பீர்கள்.


1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...