சர்வதேச நகரத்தார் வர்த்தக சபை சென்ற வருடம்
துபாயை மையமாகக் கொண்டு இயங்கியபோது தொழில் வளர்ச்சியில்
முன்னணி வகிக்கும் தொழில் அதிபர்களை இனம் காட்டியதோடு இளம் தொழில் முனைவோரையும்
உருவாக்கத் திட்டமிட்டது.
இளம் தொழில் முனைவோருக்கு என்னென்ன குணாதிசயங்கள்
தேவை , என்னென்ன திறமைகளைக் கைக்கொள்ள வேண்டும் என வழிகாட்டத் திட்டமிட்டது.
இதற்கென ஒரு குழு உருவாக்கப்பட்டது.
அக்குழு அதன் முதல் படியாக அமீரகம் மற்றும் வெளிநாடுகளில் வசித்துவந்த செட்டிநாட்டுக் குழந்தைகளுக்கு நம் வேர்
பற்றியும், கலாச்சாரப் பாரம்பரியப் பெருமைகள்
பற்றியும், முக்கியமாக நம் சமூகக் கட்டமைப்பு & வியாபாரத் திறமைகள்
பற்றியும் கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டது.