எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 20 அக்டோபர், 2026

சில மொக்கைக் குறிப்புகள் - 11

 **ஒவ்வொரு வலையாக

அறுத்து அறுத்தும்
சுருங்கிக் கொண்டிருக்கிறேன்
மையத்தில்.

 

**வண்ணத்துப்பூச்சியின்
எண்ணத்துக்கேற்பவெல்லாம்
பூப்பதில்லை பூ.


**
நெருப்பை உறிஞ்சிக்
கொண்டிருக்கிறது வீடு
மெழுகில் மாட்டிய
விட்டிலாய் நான்


**உறைந்திருக்கின்றன எழுத்துக்கள்
சில கல்வெட்டுக்களில்.
சில கடல் மணலில்.


**கட்டைவிரல் கேட்கும்
முகநூல் துரோணர்
பின் முகநூல் என்னாகும்
என் கிறுக்கல் இல்லாமல்

 

**உன் வார்த்தைகளைக்
கொன்றுவிடுகின்றன
என் வார்த்தைகளெனில்
நீ காவு கேட்கவேண்டியது என் நாவை
விரலையல்ல.


**நீலி சூலி சிவப்பி கருப்பி
எத்தனை பேர் வேண்டுமானாலும்
சூட்டிக்கொள்.
கூப்பிடும்போது மட்டும்
கருவாச்சி எனவே கூப்பிடு. :)


**பேரரசி பேரழகு
உயர்வு நவிற்சியாகவே நவில்கிறாய்
என் தீவு எனக்குமட்டும்தானென
வஞ்சப் புகழ்ச்சியாக மாற்றிக் கொள்கிறேன்.
படகாகவோ பேரலையாகவோ சுற்றாதே
கடல்கோளுக்குள்ளோ கருந்துளைக்குள்ளோ வீழ்வேன்.

 

 

**முற்றத்தில் தெளிக்கும்
நீரெல்லாம் ஆவியாகிறது
வெளிவெப்பம் அதிகம்தான்.


**எவ்வளவு தெளித்தும்
குளிரவில்லை முற்றம்
கிணற்று நீரை விரயமாக்குவதாய்
பேரச்சப்படுகிறாய்.
சிலதுளி வார்த்தைகள் போதும்
சில்லிட்டு விடும் வீடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)