எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 14 அக்டோபர், 2017

சாட்டர்டே ஜாலி கார்னர். ராதிகா யோகேந்தரின் புத்தகப் பையோடு மறைந்த பாட்டி

என் அன்பிற்குரிய (முகநூல் ) தங்கை ராதிகா யோகேந்தர். அசப்பில் என் இன்னொரு தங்கை லல்லி மாதிரியே இருப்பார். குறும்பிலும் கூட. நிறைய வாசிப்பார். தினம் போடும் ஸ்டேட்டஸ்களில் நகைச்சுவை அள்ளும். அவ்வப்போது கணவரிடம் வாங்கிய பல்புகளையும் பகிர்ந்து சிரிக்க வைப்பார். மொத்தத்தில் உற்சாகப் பந்து. அன்பின் உருவம்.

இவரிடம் நான் சாட்டர்டே ஜாலிகார்னருக்காக அவங்க பள்ளிபருவ நினைவுகள் அல்லது கார் ஓட்ட கற்றுக்கொண்ட அனுபவங்கள் பத்திக்  கேட்டிருந்தேன். இந்த வாரம் கேட்டதுக்கு உடனே வரமளித்து விட்டார்ப்பா. அதிலும் புதன் இரவு கேட்டதுக்கு வியாழன் இரவே அனுப்பி விட்டார். நிறைய பேரிடம் கேட்டு எல்லாம் பெண்டிங்கில் இருக்கு. ( அவங்கள எல்லாம் பின்னாடி கவனிச்சுக்குறேன். கிர்ர்ர்ர் ) :) தாங்க்ஸ் டா ராதி உடனே அனுப்பிச்சதுக்கு
.


வணக்கம் நான் ராதிகா யோகேந்தர் ..நான் கோவைல வசிக்கிறேன் ..பிறப்பால் மலையாளி ஆனால் தமிழ் மேல் உள்ள ஆர்வத்துல தமிழ் லிட்ரேச்சர் முடிச்சு இருக்கேன்..அப்புறம் முகநூல், வாட்ஸ் ஆப்,இன்ஸ்டாகிராம் இதுல எல்லாம் களமாடிட்டு ,ஸ்முல் அப்டிங்கிற ஆப்ல பாட்டும் பாடிட்டே, வீட்டையும் கவனிச்சு,கணவர், குழந்தையை நல்லா பாத்துக்கிற ஒரு நல்ல குடும்பத்தலைவி..கணவர் அரசு பள்ளி ஆசிரியர், ஒரே மகள் சின்ன அளவான மகிழ்ச்சியான குடும்பம்.


நம்ம வாழ்க்கைல நிறைய சுவாரஸ்யமான சம்பவங்கள் நடக்கும் ஆனா ஒரு சிலது மனசுல தங்கிடும் மறக்காது அப்படி என் வகையில நடந்த ஒரு விஷயம் உங்க கூட பகிர்ந்துக்க போறேன்.


நான் அப்போ 11 த் படிச்சிட்டு இருந்தேன்..நான் அத்தை வீட்லதான் வளர்ந்தது எல்லாம் ..கேரளாக்காரங்க சாப்பிட மறந்தாலும் எல்லா விஷேசத்துக்கும் கண்டிப்பா போவாங்க அது அவங்க ரத்தத்திலேயே ஊறினது ஹி ஹி .. அத்தை அடிக்கடி நல்ல காரியம்,கெட்ட காரியம் எல்லாத்துக்கும் ஊருக்கு போவாங்க..அவங்க இல்லாட்டியும நானும் மாமாவும் இருந்து சமாளிச்சுக்குவோம்..அந்த முறை எனக்கு அரைப்பரிட்சை அவங்க ஒரு வாரம் போக வேண்டியதா ஆயிடுச்சு அதோட கூடவே மாமாவும் போக வேண்டிய சூழ்நிலை...அதுனால என்னை அம்மா வீட்ல கொண்டு போய் விட்டுட்டு அவங்க ஊருக்கு போய்ட்டாங்க .....

என் ஸ்கூலுக்கும், அம்மா வீட்டிற்கும் 45 நிமிடங்கள் ஆகும்..நான் ஒரே பேருந்துல தான் தினம் வரு வேன்..அன்னைக்கு 5 வது நாள் ..அந்த பேருந்துல எங்க ஸ்கூல்க்கு வர பொண்ணு ஒருத்தி பிரெண்ட ஆயிட்டா ..அந்த பொண்ணுகிட்ட தான் பேக் எப்போதும் குடுப்பேன் ..அன்னைக்கு ரெம்ப கூட்டம்..நான் உள்ள போக முடியாம படியில நின்னுட்டு இருந்தேன்..அந்த பொண்ணு உள்ள உக்கார்ந்து இருந்ததால என்னால அவகிட்ட பாக் தர முடியல..அப்போ முன்னாடி உக்கார்ந்து இருந்த ஒரு பாட்டிகிட்ட பேக் குடுத்திட்டு நான் நின்னுட்டேன் ..கூட்டம் ரெம்ப தள்ளிடுச்சு..என்னால சமாளிக்க முடியாம முன்னாடி போயிட்டேன் ..அப்பபோ பாட்டிய பாத்துகிட்டேன்..

கொஞ்ச தூரம் போனதும் திரும்பி பாக்கிறேன் பாட்டிய காணோம் ..பயங்கர அதிர்ச்சி எனக்கு..சரி பக்கத்தில எங்கேயும் இருப்பாங்கனு தேட்றேன் காணோம்..பாட்டி உக்கார்ந்து இருந்த இடத்துக்கு பக்கத்தில இருந்தவங்க கிட்ட பேக் ஏதும் குடுத்தாங்களானு கேக்கிறேன் யாரும் தெரியலைன்னு சொல்லிட்டாங்க..எனக்கு கண்ணுல தண்ணியே வந்திடுச்சு ..கொஞ்சம் கூட்டமும் கம்மி ஆச்சு ..அந்த பொன்னு கிட்ட சொல்ல அவளுக்கும் அதிர்ச்சி ...அப்போ தினம் அந்த பொண்ணு அந்த பேருந்துல வரதால டிரைவர், கண்டக்டர் எல்லாம் பழக்கம் ..அவ உடனே அவங்ககிட்ட சொல்ல பஸ் முழுவதும் தேடியும் எங்கேயும் பாட்டியும் இல்ல என்னோட பேகும் இல்ல ..

நான் அழுக அந்த பொண்ணு ஆறுதல் சொல்ல பள்ளியும் வந்திடுச்சு ..இறங்கித்தான ஆகணும்...அந்த கண்டக்டர் ஏதும் தகவல் கிடச்சா சொல்றேன்னு சொல்ல நானும் தோழியும் பள்ளிக்குள்ள சோகத்தோட நுழைந்தோம்..நான் கிளாஸ் குள்ள போனதும் எல்லாரும் பெக் எங்கனு கேக்க நான் அழுதிட்டே நடந்தை சொல்ல எல்லாருக்கும் அதிர்ச்சி..அந்த பொண்ணு வேற வகுப்பு அவ அங்க எல்லாம் சொல்ல அவங்களுக்கும் தெரிய எல்லாரும் வந்து கேக்க,நான் அழுக,அதில ஒருத்தி போய் வகுப்பு ஆசிரியர் கிட்ட சொல்ல,( நான் நல்லா படிப்பேன) அதனால உடனே ஆங்கில ஆசிரியை வந்து ஆறுதல் சொல்லி உனக்கு புத்தகம், நோட் எல்லாம் நான் வாங்கித்த தரேன்..எழுத எல்லாரும் உதவி பண்ணுவாங்கனு சொல்லிட்டு தைரியமா இருனு போய்ட்டாங்க...அப்புறம்எ ன்னை ஸ்டாப் ரூம் ல கூப்பிட்டு மத்த ஆசிரியர்களும் இதே போல சொல்ல கொஞ்சம் தைரியம் வந்துச்சு..

வகுப்புல எல்லாரும் உதவி பண்றதா சொன்னாங்க..அப்போ எல்லாம் நிறைய எழுத வேண்டி இருக்குமே அந்த பயம் எல்லாருடைய ஆறுதலாலும் கம்மி ஆச்சு ..பள்ளி தலைமை ஆசிரியரும் விசாரிச்சு ஆறுதல் சொல்ல ஒரே நாள்ல பள்ளில அனைவருக்கும் தெரிந்தவளா ஆகிட்டேன்..இப்டியே வீடும் வந்து சேர்ந்து வீட்ல சொல்ல அம்மாவும் அப்பாவும் அதிர்ச்சி ஆனாலும் சமாளிச்சு ஆறுதல் சொல்லி பேக் கிடைக்கும்னு நம்பிக்கையா சொன்னாங்க..

அப்டியே 2 நாள் போச்சு.. பேக் காணாம போய் 2 நாளைக்கு அப்புறம் 3 வது நாள் காலைல ஒரு 1 1 மணி இருக்கும் ஒரு பெரிய பையன் காலேஜ்ப டிக்கிற பையன் போல ஒருத்தர் கைல பேகோட தலைமை ஆசிரியர் அறைக்கு போறத நாங்க சன்னல் வழியா பார்த்தோம் .உன்னோடதா இருக்குமோ னு வகுப்புல எல்லாரும் சொல்ல,பதட்டத்தோட நான் இருக்க 10 நிமிடத்துல எனக்கு அழைப்பு வந்துச்சு ..

நான் தலைமை ஆசிரியர் அறைக்கு போக அங்க என்னோட பேக்..எனக்கு எதோ பொக்கிஷம் கிடச்ச உணர்வு ..நான் மகிழ்ச்சியோட ஆசிரியரை பார்க்க அவங்க சொன்னாங்க,அந்த பையனொட பக்கத்துக்கு வீட்டு பாட்டியாம் நான் பேக் குடுத்த பாட்டி ..அவங்க மறந்து பேகோட இறங்கிட்டாங்களாம் வீட்க்கு வந்த பிறகுதான் கைல பேக் இருகிறதே நினைவு வந்துச்சாம்..அப்போ இந்த பக்கத்துக்கு வீடு பையன கூப்பிட்டு சொல்ல அவன் பேக் முழுவதும் துழாவி எப்பிடியோ பள்ளி முகவரி கண்டு பிடிச்சு கொண்டு வந்து குடுத்து இருக்கான் 

..நான் மகிழ்சியில அந்த பையனுக்கு நன்றி சொல்லி ஆசிரியருக்கும் நன்றி சொல்லி என்னோட பே கோட வகுப்புக்குள் நுழைய எல்லாரும் கை தட்டி அவங்க மகிழ்சிய தெரிவிச்சாங்க..புத்தக பை காணாம போய் திரும்ப கிடைப்பது எல்லாம் படத்தில தான் பார்த்து இருப்போம்..எனக்கு நடந்த போது கலவையான உணர்வுதான்..ஆனா பள்ளியில ஒரு பேர் எனக்கு நிலைச்சிடுச்சு பேக் காணாம போன அக்கா ஹ ஹ .

டிஸ்கி:-  புத்தகப் பை கிடைக்குமோ கிடைக்காதோன்னு பக் பக் குன்னு இருந்துச்சு. அப்பாடா பை திரும்ப கிடைச்சிருச்சு. ஆறுதலா இருக்கு.  அது பாட்டியோட குத்தமாவும் இருக்காது. வயதின் காரணமா மறதி நோயா இருக்கலாம்னுதான் நினைச்சேன். கரெக்ட்டா சொல்லி இருக்கீங்க.

ஆமா அப்ப எல்லாம் நிறைய எழுதணும்ல. நோட்டுல தினம் எழுதி எழுதியே கை ஒடிஞ்சிரும். இப்ப மாதிரியா என்ன. லொட்டு லொட்டுன்னு லாப்டாப்புல தட்டிட்டு போறதுக்கு. :) :) :)

அப்புறம் ராதி டியர்.  அத்தையைப் பத்தின கிண்டலை ரசிச்சேன். சாப்பிடுறாங்களோ இல்லையோ எல்லா விசேஷத்துக்கு ஊருக்குப் போயிடுவாங்க. ஹாஹா செம லொள்ளு. ஆமா அத்தைக்கு இந்த போஸ்டை அனுப்பலியா :)

சூப்பர் & தாங்க்ஸ் டா. சாட்டர்டே ஜாலி கார்னரை ஜாலியா நிரப்புனதுக்கு. அன்பும் அணைப்பும் நன்றியும்.  

6 கருத்துகள்:

 1. எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி தேன் அக்கா 💜💜💜😇😇

  பதிலளிநீக்கு
 2. 👌👌 அக்கா
  ராதி அக்கா வரலாறு 😄😄

  பதிலளிநீக்கு
 3. நேர்மையான பாட்டியைப் போற்றத்தான் வேண்டும்
  போற்றுவோம்

  பதிலளிநீக்கு

 4. ரசிக்கும்படியான எழுத்தில் காணாமல் போன புத்தகப்பை...
  இருவருக்கும் வாழ்த்துக்கள் அக்கா.

  பதிலளிநீக்கு
 5. வெல்கம் ராதி :)

  நன்றி பெயரில்லா

  நன்றி ஜெயக்குமார் சகோ

  நன்றி குமார் சகோ

  நன்றி குட்டி :)

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...