எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 4 மே, 2020

பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.

2581. எவை பற்றியும் கருத்துக் கூறாமலிருப்பது அறியாமையால் அல்ல. அவை பற்றிய சர்ச்சைகளையும், பயங்களையும் அநாவசியமாக உண்டாக்க வேண்டாம் என்றுதான். மௌனத்துக்கும் மொழி உண்டு. அதன் பெயர் கருணை.

2582. திருப்பூட்டும் தாம்பாளம்.


2583. பதினைஞ்சு லட்சம் வரப்போகுதுங்க..

அப்பிடியா.. எங்க ?

என் ப்லாகுலங்க. பேஜஸ் வியூ.

ஏதோ உன் புக்கு ஏதும் பரிசு வாங்கிருச்சோன்னு நினைச்சேன்.

ஙே !!!


2584. வெளியே போயிட்டு வந்தாலே மூக்கெல்லாம் கொணகொணங்குது. தொண்டையெல்லாம் கரகரங்குது. உடம்பெல்லாம் கணகணங்குது. கொரோனா ஃபோபியா ஓவரா தாக்கிருச்சோ

2585. மிளகு சூப்னாங்க. இப்ப இஞ்சி ஜூஸ்ங்கிறாங்க. வியாதிக்குக் கூட விதம் விதமா மருந்து கொடு(குடி)ப்போமாக்கும்

2586. thanks to yogeswaran ramanathan

2587. thanks to panneerselvam sumathi 


2588. எங்க வீட்டு ஓலைச்சுவடிகள். 


2589. எனது பன்னிரெண்டாவது, பதிமூன்றாவது நூல்கள். கிடைக்குமிடம் டிஸ்கவரி புக் பேலஸ், 6, மஹாவீர் காம்ப்ளெக்ஸ், முனுசாமி சாலை, கே. கே. நகர், சென்னை. விலைரூ 60 & 40 /-


2590. Coronavirus is a carnivorous.


Fb , whats app, TV - it occupies everything like a lawnmower man.

2591. துண்டிக்கத் துண்டிக்கத்
துளிர்த்துக் கொண்டே இருக்கின்றன
பயத்தின் மொக்குகள்.

2592. கழுவி துடைத்து கழுவி துடைத்து
ஈரப்பதத்தை இழந்து கொண்டிருக்கிறது
மனிதம்

2593. சொற்கள் சோர்வை உண்டாக்குகின்றன. இருப்பின் கசகசப்பு அயர்த்துகிறது. உருவமற்ற உன் வரவை வடிகட்டிக் கொண்டிருக்கிறேன் கோடியில் ஒன்றாக..

2594. யாரோ இருந்தார்கள்
பின்னும் யாரோ இருப்பார்கள்
நானும் இருந்திருக்கிறேன் இங்கு.

2595. விடுதிகளில் தங்கிச் செல்வது மகிழ்வளிக்கிறது. வீடுகளில் தங்கிச் செல்வதுதான் துயரமளிக்கிறது.

2596. புகை பொறுக்காத என் சுவாஸத்தின் மேல் உனக்குப் பகை ஏன் வைரஸே..

2597. இணைய இணைப்பில் கைகோர்க்கிறேன்.
தீட்டுமில்லை.. தொற்றும் இல்லை.

2598. விரலெனும் எழுதுகோலின் வழி வழுவிக் கொண்டிருக்கின்றன சொற்கள். காங்கை பரவிக் கிடக்கிறது கைபேசித் திரை.

2599. Scent, body spray pota kandukirathey illa. Aana intha tiger balm, Vicks, iodex, axe oil, R.S pathy, eucalyptus oil, Eau de Cologne pota mattum nalla vasanaiya irukkungurarey. enna oru rasanai :)


2600. நாகநாதர் கோவிலில் ( செஞ்சை பெருமாள் கோவில் பக்கத்தில் இருப்பது ) வருடா வருடம் ஏழாம் நாள் மண்டகப்படி. ஒரு முறை அப்பா வெளியூரில் இருக்க என் சின்ன மகனுக்குப் பரிவட்டம் கட்டினார்கள். மேளதாளத்துடன் சுவாமி உலா செல்லப் பின் தொடர்ந்து பிரகாரம் வந்தோம்.சுவாமிகள் அனைவரும் கொள்ளை அழகு. அப்பா அங்கே திருவாசகம் படிக்கிறார்

டிஸ்கி :-



4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும். 

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும். 

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  











































74. கொப்பித்தட்டும் சிதம்பர விலாஸும்.

75. பிக் பாஸும் சாட்சி பூதமும்.

76. இழிவரலும் வீரமரணமும்.  

77.பிக்பாஸ் கண்டெக்டர்ஸும் கூகுள் ஸ்மார்ட் காரும்


































121. டியட்ரோ டி மார்செல்லோவும் மெஹ்திப்பட்டினமும்.

122. தனிமைக்குப் பயப்படும் மனிதரும் மனங்களில் இடம்பிடித்த மாமனிதரும்.

123. கர்நாடகா விசித்திரங்களும் செகுலார் தேசமும்.

124. வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

125. மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

3 கருத்துகள்:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு
  2. எண்ணங்கள் இனிதானால் எல்லாமே இனிதாகும்

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...