எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
'விழுதல் என்பது எழுகையே' லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
'விழுதல் என்பது எழுகையே' லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 22 மே, 2021

விழுதல் என்பது எழுகையே - வெளியீடு.

 நாங்கள் 26 பேர் எழுதிய ”விழுதல் என்பது எழுகையே என்ற நூல்” வெளியீட்டு விழா 15.5.2021 சனி மதியம் 14.00 மணி ஐரோப்பிய நேரம் , இந்திய நேரம் சனிக்கிழமை மாலை 6 மணி. 


இயன்றவர்கள் கலந்து கொள்ளுங்கள். நூலாக்கம் செய்த அனைவருக்கும் அன்பும் நன்றியும். 


திங்கள், 22 பிப்ரவரி, 2021

”விழுதல் என்பது எழுகையே” நூலாக்கம்.

 நாங்கள் 26 பேர் எழுதிய ( சர்வதேச எழுத்தாளர்கள் - பன்னாட்டுப் புலம்பெயர் எழுத்தாளர்கள் பங்களிப்புச் செய்தது.  ) “விழுதல் என்பது எழுகையே “ என்ற புதினம் நூலாக்கம் பெற்றுள்ளது என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 


இந்தியா, இலங்கை, ஐரோப்பா ( ஜெர்மனி, சுவிட்ஜர்லாந்து, ஃப்ரான்ஸ், இத்தாலி ) கனடா, அமெரிக்கா, லண்டன் ஆகிய ஊர்களில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர்களை ஒருங்கிணைத்துத் ”தமிழ் எழுத்தாளர் இணைய அகத்தின்” திரு கந்தையா முருகதாசன் அவர்களும், ஊடக வித்தகர் திரு பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி அவர்களும் - ஒரு வருடக் கடின உழைப்பின் மூலம் உருவாக்கிய கதைக்கருவைக் கொண்டு  - ஜெர்மனியிலிருந்து இந்நூலைக் கொண்டு வந்துள்ளார்கள். 

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

”விழுதல் என்பது எழுகையே.” நிறைவுப்பகுதி.


பெண் என்று பூமிதனில் பிறந்துவிட்டால் மிகப்பீழை இருக்குதடி தங்கமே. என்று பாரதியார் பாடியது சும்மாவா.

பத்மகலாவின் வருகைக்காக சீலன் பிராங்போர்ட் ஏர்போர்ட்டில் வெளியேறுவார் கதவிற்கு முன்னால்  படபடப்புடன் காத்திருந்தான். விமானத்தை விட்டிறங்கி பாஸ்போட் பரிசோதனை முடிந்து வெளியே வரும் கதவுக்கூடாக  ஒவ்வொரு பயணியும் வரும் போதும் கதவு திறப்பதும் வருவது பத்மகலாவா என ஆவலுடன் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

சில விநாடி இடைவெளிகளுக்குள் மூடித்திறக்கும் கதவிடுக்குள் ஊடாக பத்மகலாவின் உருவம் தெரிகிறதா என அவனின் கண்கள் தேடின.

இதோ ப்ராங்க்ஃபர்ட் ஏர்ப்போர்ட்டில் பீடு நடைபோட்டு தன்னருகே வரும் பத்மகலாவைப் பார்த்துப் பெருமிதமாக இருந்தது சீலனுக்கு. 

சீலன் தனக்காக ஒற்றைச் சிவப்பு ரோஜாவுடன் கண்களில் ஆவலும் பரசவமும் மின்ன காத்திருப்பதைக் கண்டதும் அவனை நோக்கி வேகமாக நடந்து வர அவனும் அவளை நோக்கி நடந்தான்.

சில விநாடிகள்தான், தாயிடம் சேய் பாய்ந்து சென்று அணைத்துக் கொள்வது போல் இருவரும் ஒருவரை அணைத்துக் கொண்டனர்.

திங்கள், 16 மார்ச், 2015

’விழுதல் என்பது எழுகையே.’ ( உலகத் தமிழ் எழுத்தாளர்கள் எழுதும் தொடரில் என் பங்களிப்பு ) - பண்ணாகம்.


விழுதல் என்பது எழுகையே. :-


க்ளிக் கிளிக் என்று ஒரு சத்தம். பக்கத்திலிருந்த பெண் செல்ஃபோனால் பஞ்சுப் பொதியாய்க் குவிந்திருக்கும் மேகங்களை விமானத்தின் கண்ணாடி வழி சுட்டுக்கொண்டிருந்தாள். லேசாகக் கண்ணயர்ந்த மங்கையர்க்கரசிக்கு இந்தச் சத்தம் விழிப்பைக் கொடுக்கவே திரும்பிப் பார்த்தார். அவள் திரும்பிப் புன்னகைத்து  ஃபேஸ்புக்கில் போஸ்ட் பண்ணுவதற்காகப் புகைப்படம் பிடிப்பதாகக் கூறினாள். வாழ்க்கை வாழ்வதற்கே என்று எண்ணும் இளையதலைமுறையினர். 

ங்கையர்க்கரசி மதுரைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியை.  ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களின் அழைப்பின் பேரில் அங்கே உரையாற்றச் செல்வதற்காக இந்தப் பயணம் மேற்கொண்டிருந்தார். முதல்நாள் கனடாவில் சந்தித்து விட்டு வந்த பத்மகலாவின் சாயல் இவளிடம் லேசாக இருந்தது. பத்மகலாவை முதன் முதலாக யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு சிறப்பு அழைப்பாளராகப் பேசச் சென்றபோது சந்தித்தது நினைவுக்கு வந்தது. ”தமிழரும் மூலிகை மருத்துவமும்” என்ற தலைப்பில் உரையாற்றச் சென்ற அவரை விமான நிலையத்திலிருந்து வரவேற்று பின் வழியனுப்பும் பொறுப்பை நிகழ்ச்சிப் பொறுப்பாளர்கள் பத்மகலாவும் தரும சீலனும் ஏற்றுக்கொண்டிருந்தார்கள்.

ஈழத்தின் பெரும்பாலான உணவுகளில் கருவாடு சேர்க்கப்பட்டிருந்ததால் அங்கே தங்கியிருந்த ஒரு வாரத்துக்கு உணவு ஒத்துக்கொள்ளாமையால் பத்மகலாதான் தன் வீட்டிலிருந்து தங்குமிடத்துக்கு தினம் அவள் அம்மாவின் கைப்பக்குவத்தில் செய்யப்பட்ட ஆப்பம் , போல் சம்பல், போல் ரொட்டி, பிட்டு சம்பல், இடியாப்பம், கிரிபத், மரக்கறிக்காய் குழம்பு மசியல் எல்லாம் கொண்டுவந்து கொடுத்து பேராசிரியையின் உடல் நலம் கெடாமல் பார்த்துக்கொண்டாள்.

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

'விழுதல் என்பது எழுகையே' ( அறிமுகம் )

ஐரோப்பா அவுஸ்திரேலியா கனடா ஆகிய நாடுகளின் எழுத்தாளர்கள் ஒருங்கிணைந்து எழுதும் 'விழுதல் என்பது எழுகையே'என்ற நெடுந்தொடர் தமிழகம்,இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களையும் இணைத்துக் கொண்டு தனது பயணத்தைத் தொடர்கிறது.

சென்னையை வதிவிடமாகக் கொண்டவரும் தற்போது ஹைதராபாத்தில் வசிப்பவருமாகிய இளங்கலை வேதியல் பட்டதாரியும்,அரசியல் விஞ்ஞானத்தில் முதுநிலை பட்டதாரியுமான திருமதி.தேனம்மை லகஸ்மணன் அவர்களும் இந்நெடுந்தொடரில் இணைந்து எழுதுகிறார் என்பதை மகிழ்வுடன் பதிவு செய்கிறோம்.

திருமதி.தேனம்மை லக்ஸ்மணன் அவர்களைப்பற்றிய கல்வியியல்,கலை,இலக்கிய செயல்பாடுகள் பற்றிய விபரத்தை வெகுவரைவில் வெளியிடுவோம் என்பதை அறியத்தருகிறோம்.

Related Posts Plugin for WordPress, Blogger...