எனது பதிநான்கு நூல்கள்

திங்கள், 22 பிப்ரவரி, 2021

”விழுதல் என்பது எழுகையே” நூலாக்கம்.

 நாங்கள் 26 பேர் எழுதிய ( சர்வதேச எழுத்தாளர்கள் - பன்னாட்டுப் புலம்பெயர் எழுத்தாளர்கள் பங்களிப்புச் செய்தது.  ) “விழுதல் என்பது எழுகையே “ என்ற புதினம் நூலாக்கம் பெற்றுள்ளது என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 


இந்தியா, இலங்கை, ஐரோப்பா ( ஜெர்மனி, சுவிட்ஜர்லாந்து, ஃப்ரான்ஸ், இத்தாலி ) கனடா, அமெரிக்கா, லண்டன் ஆகிய ஊர்களில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர்களை ஒருங்கிணைத்துத் ”தமிழ் எழுத்தாளர் இணைய அகத்தின்” திரு கந்தையா முருகதாசன் அவர்களும், ஊடக வித்தகர் திரு பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி அவர்களும் - ஒரு வருடக் கடின உழைப்பின் மூலம் உருவாக்கிய கதைக்கருவைக் கொண்டு  - ஜெர்மனியிலிருந்து இந்நூலைக் கொண்டு வந்துள்ளார்கள். 

இருபத்தி ஆறு வாரம் தொடர்ந்து ஒவ்வொரு எழுத்தாளர்களாக இக்கதையைக் கொண்டு சென்றோம். நிறைவுரைப் பகுதியை நான்கு எழுத்தாளர்கள் எழுதி உள்ளார்கள் என்பது சிறப்பு. அதில் நானும் ஒருத்தியாகத் திரும்பப் பங்களிப்புச் செய்துள்ளேன் என்பது மகிழ்வு. அன்பும் நன்றியும் மகிழ்ச்சியும் அனைவருக்கும்.

நூலை இலங்கையில் பதிப்பிக்கிறார்கள். எனக்கு ஒரு பிரதி வந்ததும் அது பற்றி எழுதுகிறேன். இப்போது நூலின் அட்டைப்படத்தைப் பகிர்ந்துள்ளேன். திரும்பவும் அன்பும் நன்றியும் மக்காஸ். 

நூல் பற்றிய விபரம் வந்தாச்சு :)

ஜீவநதியின் 177 ஆவது வெளியீடாக 'விழுதல் என்பது எழுகையே...' (நாவல்) தமிழ் எழுத்தாளர் இணைய அகத்துடன் இணைந்து வெளியாகிறது.
விலை - 450/-
பக்கம் - 292
நூல் தேவைப்படுவோர்
விலை - 400.00
தொடர்புகளுக்கு - 0775991949 அல்லது முகப்புத்தக உள் பெட்டியில் தொடர்பு கொள்ளலாம்.
comercial bank - nelliady - a/c - 8108047197 பணத்தை வைப்பு செய்து மேற்குறித்த இலக்கத்துக்கு வைபர் மூலம் அல்லது முகப்புத்தக உள் பெட்டியில் வைப்பு செய்த receite ஐ அனுப்பினால் புத்தகம் அனுப்பப்படும். உங்கள் விலாசத்தையும் .
உள் நாட்டில் அஞ்சல் இலவசம்

2 கருத்துகள்:

  1. நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...