எனது நூல்கள்.

வெள்ளி, 20 ஜனவரி, 2017

நம் மரபு நம் உரிமை.

சர்வதேச அரசியலில் சிக்கிக்கொண்டு நம் பாரம்பரிய விளையாட்டுகள், உணவு, விவசாயம், ஆகியன படும் சிக்கல்களைக் கண்டு நொந்துபோய் இருக்கிறேன்.

நம் உணவு, விவசாயம் ஆகியன நஞ்சாகி வருகின்றன. ஜெர்சி பசுவின் பால் டயபடிக் உண்டாக்கக் கூடியதாம். அதேபோல் வெள்ளைச் சீனி வயிற்றுக்கு நஞ்சு. கடலையையே ஒரு தலைமுறை மறக்கடிக்க வைத்துவிட்டார்கள். அது கொழுப்பு இது கொழுப்பு என்று நம் பாரம்பரிய உணவு வகைகளை வெறுக்க வைத்துவிட்டார்கள். சர்வதேச மருத்துவச் சந்தையில் இதனால் உண்டாகும் வியாதிகளுக்கான மருந்துகளுக்கு இந்தியாதான் முதல் கன்ஸ்யூமர். இனியாவது விழிப்போம்.

நம் மொழி நம் உணவு  நம் பாரம்பர்யம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்.


உணவுக்காக, உடைக்காக, உபயோகப் பொருட்களுக்காக, மருந்துப் பொருட்களுக்காக, பரிசோதனைக்காக என்று பல்வேறு பட்ட காரணங்களுக்காக மிருகங்களை உலகம் முழுமையும் உபயோகப்படுத்துவதை எங்கெங்கும் தடை செய்ய முடியாத போது , பாரம்பரியத்தையும் மரபையும் மரபணுக்களையும் காக்கும் வீரவிளையாட்டாக மஞ்சுவிரட்டு நடத்தப்படும் தமிழகத்தில் மட்டும் இந்தத் தடையை வன்மையாகப் புகுத்துவது கண்டிக்கத்தக்கது.

நம் பாரம்பர்யமும் தொன்மையும் தழைக்கவும் கலாச்சாரத்தின் வேர்கள் உறுதியுடனிருக்கவும் நானும் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறேன். 

7 கருத்துகள் :

Anuradha Premkumar சொன்னது…


வெல்லட்டும் உணர்வு போராட்டம்...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை சகோதரி...

G.M Balasubramaniam சொன்னது…

ஜல்லிக்காட்டுக்கான போராட்டம் தான் இதனை பேரையும் ஒன்று சேர்க்கிறதா எங்கேயோ உதைக்கிறதே . தமிழர் பாரம் பரியம் பேசுபவர்களுக்கு பல விஷயங்களையும் சேர்த்துதான் போராடத்தெரியும் எதையோ நினைத்து எதையோ இடிப்பது போலா

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

நம் மரபு + நம் உரிமை எல்லோருக்கும் சாதகமாக அமைந்தால் மகிழ்ச்சியே.

வெல்லட்டும் வெல்லம் போன்ற இனிப்பான உணர்வு போராட்டம்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வெற்றி நமதே.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி அனுராதா. அழகாக வாழ்த்தி உள்ளீர்கள்.

நன்றி டிடி சகோ

ஒட்டகம் பாரம் தாங்காமல் ஓய்ந்து உட்கார ஒட்டகத்தின் மேல் வைக்கும் கடைசி பாரம் மட்டுமே காரணமல்லவே பாலா சார்.

நன்றி விஜிகே சார்

ஆம் வெங்கட் சகோ.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...