எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 3 ஜனவரி, 2017

இளம் தொழில் முனைவோர் - ஐபிசிஎன் - 2017. ( SAY YES TO BUSINESS - YES IBCN - 2017 )

காரைக்குடியில் இன்று சிவானந்தா ஹாலில் நடந்த பிள்ளையார் நோன்பு விழாவில் இழை எடுத்த பின்பு இளம் தொழில் முனைவோருக்கான ஒரு அறிமுகக் கூட்டம் நடந்தது.

தேவகோட்டை ராமனாதன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். காரைக்குடியைச் சேர்ந்த முத்தாள் வெங்கடாசலம், மேனகா சொக்கலிங்கம், அண்ணாமலை, அழகப்பன், வள்ளியப்பன், ராமையா ஆகிய இளம்தலைமுறைத் தொழில் முனைவோர் ஐபிசின்னின் வழிகாட்டுதலுடன் தங்கள் தன்முனைப்பைச் செதுக்கிக்கொண்டதை அழகாகக் கூறினார்கள். இதன் காரணகர்த்தாக்களான துபாய் வாழ் நகரத்தார்களான சொக்கலிங்கம், ரமேஷ், மெய்யப்பன் ஆகியோரைப் பாராட்டினார்கள்.

இவர்கள் பாரம்பரிய உடையில் வந்திருந்ததோடு மட்டுமல்ல.  தயக்கம் இல்லாமல் துணிச்சலோடும் அழகாகவும் தமிழில் உரையாற்றினார்கள். !



இன்னுமுள்ள இளையவர்களையும் தொழில் துறையில் ஈடுபட அழைத்ததோடு குடும்பத்தாரின் ஒத்துழைப்பின் இன்றியமையாமையையும் வலியுறுத்தினார்கள்.

மிகச் சிறந்த கூட்டமாக அமைந்தது அது. இதற்கான ஒரு சின்ன அறிமுகம் ஒன்றை நேற்று என்னிடம் வாங்கி இன்று அந்த நிகழ்வில் வெளியிட்டு கௌரவப்படுத்தினார்கள்.  THANKS & HATS OFF TO IBCN & KARAIKUDI YOUNG ENTERPRENUERS. !


உப்பு வணிகத்திலிருந்து தனவணிகம்செய்து கொண்டுவிற்று ( ந்த இடத்ில் ப்ரிண்டிங் மிஸ்டேக் ஏற்பட்டு விட்ட.”கண்ுவிற்று” என்றால் ல் பம் கண்டு சென்று அத் ுமட்டிக்கு விட்டுப்ெருக்கி என்று அர்த்ம் ) வென்றவர்கள் நாம். 

வங்கித் தொழில், பங்கு வர்த்தகம், பத்ரிக்கை, திரைப்படத்துறை, பதிப்பகம், பல்கலைக்கழகம் என்று வெற்றிகரமாகக் கோலோச்சியவர்கள் நாம்.
 
நூற்றுக்கணக்கான நிறுவனங்களை நிர்வகித்த நாம் இன்று நுணுக்கங்கள் பல கற்றும் சுயநம்பிக்கையற்று அணுஅணுவாய்ச் சிதறிக் கிடக்கின்றோம்.

முதலாளிகளாக இருந்த நாம் இன்று ஏனோ தொழிலாளிகளாக ஆனோம்.

மூத்தோர் சொல் அமிர்தம் என்று முன்னோர்கள் துணைகொண்டு நம் ரத்தத்தில் உறங்கிக் கிடக்கும் வியாபாரத் திறமைகளைத் தட்டியெழுப்புவோம்.

இன்றும் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கும் குடும்ப நிறுவனங்கள்.
1. முருகப்பா க்ரூப்ஸ்             
2. MCTM க்ரூப்ஸ்
3. செட்டிநாடு சிமிண்ட்ஸ்

உத்யோகத்தில் ஒற்றை ஆளாய் இருக்கும் நாம் ஒருங்கிணைந்து ஏன் தொழில் செய்யக் கூடாது.? 

உலைந்துபோன நமது திறமைகளை மீட்டெடுப்போம். 

மாறி வரும் இன்றைய உலகுக்கேற்றவாறு நம்மைப் புதுப்பிப்போம்.

கூடி வாழ்தல் நமது ரத்தம்.

நெறிமுறைகள் கொண்ட வியாபாரம் நமது யுத்தம்.

ஒத்த சிந்தனையுடைய இளையவர்கள் கரம்கோர்ப்போம்.

ஒருங்கிணைந்து தொழில் செய்வோம். ஜெயிப்போம். 

-- கவிஞர் தேனம்மை லெக்ஷ்மணன். 

 

6 கருத்துகள்:

  1. ஒருங்கிணைந்தாலே உயர்வுதானே
    மகிழ்ந்தேன் சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  2. சுய தொழில் செய்ய ஆர்வத்துடன் முன்வருபவர்களுக்குச் சிறப்பான, பயனுள்ள தகவல் மற்றும் நல்ல கருத்துக்கள் சகோ/தோழி

    பதிலளிநீக்கு
  3. சிறப்பான தொடக்கம். இளம் தொழில் முனைவர்களுக்கு வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  4. Mika arumaiyana muyarchi. People associate themselves in some common grounds. All such associations and societies of people should come together and encourage this attitude shown by these youngsters.

    Mika Arumai.

    பதிலளிநீக்கு
  5. ஆம் ஜெயக்குமார் சகோ

    நன்றி துளசி சகோ

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி மெய்யார்

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    நன்றி அப்டெக் காரைக்குடி

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...