எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 21 ஜனவரி, 2017

மேட்டித் துணியில் பச்சைக்கிளியும் பட்டாம்பூச்சியும் பூக்கூடையும்..

பட்டு பருத்தி சில்க் போன்ற எல்லாத் துணிகளிலும் எம்பிராய்டரி செய்யலாம் என்றாலும் மேட்டித்துணி எம்பிராய்டரி கொஞ்சம் ஸ்பெஷல். இதைக் கண்ணுத்துணி என்றும் சொல்வார்கள். கண்ணியை எண்ணிப் பிரித்து இண்டு இண்டுவாகத் தைத்து டிசைன் செய்வது. அதாவது க்ராஸ் தையல்.

அம்மா பின்னிய பச்சைக்கிளி.
எனது பட்டுப் புடவையில் நானே டிசைன் செய்த கட்ச் எம்பிராய்டரி.



அந்தக்கால ஸ்கார்ஃப். பட்டாம்பூச்சியும் பூக்கூடையும்.
பிள்ளை எடுக்கும் துண்டு என்று சொல்வார்கள். பச்சைக் குழந்தையைப் தரையில் படுக்கப் போட இதை விரித்துப் போடுவார்கள். யாரும் வந்தால் பிள்ளையை எடுக்கி இந்தத் துணியைக் கீழே வைத்துக் கொடுப்பார்கள்.

இப்போது டிவி ,ஃப்ரிட்ஜ் , விசிடி, மிக்ஸி கவராக இது பல இடங்களில் உபயோகப்படுது.  :)
முக்கோண பார்டர் டிசைன். கெட்டியாக இருக்க நீலப் பட்டி வைத்துத் தைத்திருக்கிறது
பூக்களும் இலைகளும் தத்ரூபம். பூவா பட்டாம்பூச்சியா என்னும் மயக்கம் வருதுல்ல :) டெண்ட்ரில் க்ளைம்பர்ஸ் மாதிரி இலையில் ( பற்றுக் கொடிச் செடி மாதிரி ) ஸ்ப்ரிங் தொங்குது பாருங்க. !
மெல்லிய இலைகள் வேறு கிளைகள் வேறு பூக்கள்.
ரோசாப்பூவாம். :)குட்டிப்  பூக்களும்.
முழுமையா ஒரு க்ளிக்.

டிஸ்கி :- இதையும் பாருங்க.

நான் செய்த கைவினைப் பொருட்கள். - ENGRAVING.

டைனிங் டேபிள் மேட்டுகளும் டெலிஃபோன் மேட்டுகளும். 

 மேட்டித் துணியில் பச்சைக்கிளியும் பட்டாம்பூச்சியும் பூக்கூடையும்

11 கருத்துகள்:

  1. //எனது பட்டுப் புடவையில் நானே டிசைன் செய்த கட்ச் எம்பிராய்டரி.//

    சந்தேகமே இல்லாமல், தாங்கள் ஒரு சகலகலாவாணியே தான். அனைத்தும் அருமை.

    ஒரே நாளில் எத்தனைப்பதிவுகள் !!!! அதிலும் மிகப்பெரிய சாதனை அரசியே தான். :)

    //அம்மா பின்னிய பச்சைக்கிளி.//

    சூப்பரோ சூப்பர் :)

    பதிலளிநீக்கு
  2. ஆச்சிகளின் பொழுதுபோக்கு மற்றும் கைத்திறன் கற்பனைவளம் மிகச்சிறப்பானது .நானும் கொஞ்சம் கற்றுக்கொண்டேன் .....

    பதிலளிநீக்கு
  3. நம் Mr. DD Sir இடம் மட்டும், நீங்கள் Order வாங்கி விட்டீர்களானால், அதன்பிறகு பதிவுலகம் பக்கமோ, ஃபேஸ்புக் பக்கமோ, பத்திரிகை உலகுப் பக்கமோ வர உங்களுக்கு கொஞ்சம்கூட நேரமே இருக்காது. 24x7x365 பிஸியாகி விடுவீர்கள்.

    ஏற்கனவே கோடீஸ்வரியான நீங்கள், பல நூறு கோடிகளுக்கு அதிபதி ஆகிவிடுவீர்கள் என்பது சர்வ நிச்சயமாகும். :) அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். :)

    பதிலளிநீக்கு
  4. அவசரத்தில் நான் செய்துள்ளதோர் எழுத்துப் பிழைக்கு ஓர் சின்ன விளக்கம் இதோ:

    24x7x365 என்றால் தினமும் 24 மணி நேரம் வீதம், ஒவ்வொரு வருடத்தின் 365 நாட்கள் வீதம், அடுத்த ஏழே ஏழு வருடங்களுக்குள், பல நூறு கோடிகளுக்கு அதிபதி ஆகி விடுவீர்கள் என்று பொருள் கொள்ள வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன். :)

    பதிலளிநீக்கு
  5. உங்கள் கட்ச் வொர்க் அருமை தேனு!!! எப்படியப்பா இத்தனைக்கும் நடுவில் நேரம் உங்களுக்கு!!! பாராட்டுக்கள்! நானும் கட்ச் வொர்க் ஒன்று செய்திருக்கிறேன் முன்பே...இப்போது சமீபத்தில் ஆரம்பித்திருப்பது 4 உடன் நிற்கிறது...எம்ப்ராய்டரி நிறைய செய்ததுண்டு. க்ராஸ் லிருந்து ஹெர்ரிங்க் போன், சாட்டின் ஸ்டிச், கட்ச் வொர்க் ப்ரெசிலியன் ஃப்ரென்ச் நாட் வைத்து ரோஸ், ரிப்பன் எம்ப்ராய்டரி என்று எல்லாம் ஒரு 3 வருடங்களுக்கு முன்பு வரை..அப்புறம் இப்போது செய்வதில்லை...இடையில் பேப்பர் க்வில்லிங்க், முரல்...க்ளாஸ் பெயின்டிங்க்....விரும்பியவர்களுக்குக் கொடுத்துவிட்டேன்...மிக அழகாகச் செய்திருக்கிறீர்கள் அம்மாவின் கைவண்ணமும் அழகு!!!

    பதிலளிநீக்கு
  6. உங்கள் கட்ச் வொர்க் அருமை தேனு!!! எப்படியப்பா இத்தனைக்கும் நடுவில் நேரம் உங்களுக்கு!!! பாராட்டுக்கள்! நானும் கட்ச் வொர்க் ஒன்று செய்திருக்கிறேன் முன்பே...இப்போது சமீபத்தில் ஆரம்பித்திருப்பது 4 உடன் நிற்கிறது...எம்ப்ராய்டரி நிறைய செய்ததுண்டு. க்ராஸ் லிருந்து ஹெர்ரிங்க் போன், சாட்டின் ஸ்டிச், கட்ச் வொர்க் ப்ரெசிலியன் ஃப்ரென்ச் நாட் வைத்து ரோஸ், ரிப்பன் எம்ப்ராய்டரி என்று எல்லாம் ஒரு 3 வருடங்களுக்கு முன்பு வரை..அப்புறம் இப்போது செய்வதில்லை...இடையில் பேப்பர் க்வில்லிங்க், முரல்...க்ளாஸ் பெயின்டிங்க்....விரும்பியவர்களுக்குக் கொடுத்துவிட்டேன்...மிக அழகாகச் செய்திருக்கிறீர்கள் அம்மாவின் கைவண்ணமும் அழகு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. ஓவியம் கற்கத் துவங்கிய சமயம் நானும் என் பேரக் குழந்தைகளின் உள்ளாடைகளில் ஃபேப்ரிக் பெயிண்டிங் செய்து பார்த்ததுண்டு

    பதிலளிநீக்கு
  8. ஹாஹா நன்றி விஜிகே சார்

    நன்றி பழனி சாமி சார்

    ஆர்டர் வாங்கி பின்னும் அளவு எல்லாம் சுறுசுறுப்பு இல்லை டிடி சகோ :)

    விஜிகே சார் நான் சாதாரண பெண்மணி :)

    அஹா நன்றி & அருமை கீத்ஸ் !!!

    நன்றி வெங்கட் சகோ

    பாலா சார் ஏன் ஏன் வெளி ஆடைகளிலேயே வரைந்து பார்க்கலாமே :)

    பதிலளிநீக்கு
  9. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...