எனது நூல்கள்.

வியாழன், 15 அக்டோபர், 2015

சிகரம் தொட்டாலும்..'சிகரம் தொட்டாலும்
சிறகாய் நீ வேண்டும்..
சிறகாய்ப் பறந்தாலும்
காற்றாய் நீ வேண்டும்
காற்றாய் இருந்தாலும்
கனலாய் நீ வேண்டும்
கனலாய் நான் ஒளிரப்
பெருமழையாய் நீ வேண்டும்
மழையாய் நானணைய
தாய் மடியாய் நீ வேண்டும்
மடிந்தே போனாலும்
மலராய் நீ வேண்டும்.
இதழால் இதழ் தொட்டு
எனை நீ உயிர்ப்பிப்பாய்..
இதழ் தாண்டும் புன்னகையை
எதை கொண்டு தடுத்தாலும்..!'


5 கருத்துகள் :

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமை அருமை
அவ்வை இனியது கொடியது என
இரு வேறு நிலைகளைப் பாடியதைப் போல
வேண்டாமெனவும் அடுத்து
வேண்டுமெனவும் பாடிய விதம்
மிக மிக அருமை

ஆம் இப்படி எனக்கும் வேண்டும்
வாழ்த்துக்களுடன்...

Nagendra Bharathi சொன்னது…

அருமை. நன்றி

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருமை அருமை சகோ! அழகியலுடன் கூடிய இனிய கவிதை!!!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ரமணி சார்

நன்றி நாகேந்திர பாரதி

நன்றி துளசி சகோ & கீத்ஸ் :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...