எனது நூல்கள்.

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

வீடு எரிகிறது.:-26. 4. 86.

17. வீடு எரிகிறது.:-

எரியூட்டப்படுகின்றன
நமது சுயங்கள்

பற்றியெரியும்
சட்டங்களாய்
நமது கனவுகள்


நிகழ்வில் உடையும்
ஓடுகளாய்
நமது இறந்தகாலம்.

ஊரெல்லாம்
வேடிக்கை பார்க்க
சிதறிச் சரியும்
நமது கோட்டைகள்.

நீரூற்றி
அவிக்கப்பட்டுக் கிடக்கும்
கரிக்கட்டைகளாய்
மனசுச்சவம் பொதித்த
மயானங்களாய்
சிறுத்துக் கிடக்கும்
நமது சுயங்கள்.4 கருத்துகள் :

Ramani S சொன்னது…

வெளியேறிப் பார்க்க
அவிந்த சுயமும்
பிணம் போலத்தானே
அற்புதமான கவிதை

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை சகோதரியாரே

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ரமணி சகோ

நன்றி ஜெயக்குமார் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...