எனது நூல்கள்.

திங்கள், 19 அக்டோபர், 2015

நான் கவிதையான போது2.5.86.

21. நான் கவிதையான போது
சில பத்ரிக்கைகள்
என்னை வாங்கிக்கொண்டன.


நான் காகிதங்களில்
படிந்த போது
சில பார்வைகள் என்னைத்
தெரிந்துகொண்டன.
சில மனசுகள்
புரிந்துகொண்டன.

நான் விலைக்குப் போடப்பட்டபோதும்
பொட்டலமாக்கப்பட்டபோதும்
சில பதார்த்தங்கள்
என்னோடு உறவாயிருந்தன.

நான் குப்பைத்தொட்டியில்
விழுந்த போதும்
எனக்காய்ச் சண்டையிட்டுச்
சில கழுதைகள்
காத்திருந்தன.


7 கருத்துகள் :

Dr B Jambulingam சொன்னது…

படித்த நாங்களும் கவிதையானோம்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

எந்நிலைக்குச் சென்றாலும்
யாருக்காவது பயனுள்ளதாய்

அருமை

பரிவை சே.குமார் சொன்னது…

நீங்கள் கவிதையான போது நாங்களும் கவிதை ஆனோம் அக்கா..

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஆஹா!!! கவிதையின் வாழ்வுக்கு ஒரு கவிதை!!! குப்பைக்குப் போனாலும் மனப்பெட்டகத்தில் இருக்குமே...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல கவிதை.... பாராட்டுகள்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஜம்பு சார்

நன்றி ஜெயக்குமார் சகோ

நன்றி குமார் தம்பி

நன்றி துளசி சகோ & கீத்ஸ்

நன்றி வெங்கட் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...