3.5.86.
11.30 a.m.
24.
* இந்தச் செடிகள்
என்
ஆன்மா
உடலும்
உயிருமாய்
கம்பிகளுக்குள்
நானும்
அதுவும்.
*இவைகள்
மனிதர்கள்
போல்
எனக்குக்
கட்டளையிடுவதில்லை.
*பரிட்சை
அதிகாரி போல்
கண்காணிப்பதில்லை.
*வண்ணான்கள்
போல்
என்னைப்
பொதிசுமக்க வைப்பதில்லை.
*மழைக்காலக்
கொட்டில்கள்போல்
நீர்
வழியவிட்டு
என்னை
அவஸ்தைப்படுத்துவதில்லை.
*அண்டத்தின்
அமைதியின்
பாஷையில் பேசி
நானும்
அதுவும்
வளர்ந்துகொண்டிருக்கிறோம்.
ஸ்நேகம்
வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.
அருமை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
பதிலளிநீக்குநன்றி வெங்கட் சகோ.:)
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!