எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 18 அக்டோபர், 2015

நான் காகிதமானபோது.




2.5.86.

20. நான் காகிதமானபோது.

பேனாக்கள்
என் முன்னே
அணிவகுத்துப் பேனாக்கள்
காகிதமாய் நான்.


பேனாக்கள் என்னை
எழுத்துக்களால்
அலங்கோலப்படுத்தும்.

கவிதைச் சகதிகளை
அள்ளித்தெளிக்க
நீலமாய்ச் சுருளும்
என் நாவு.

என் மேல் விஷம்
பாய்ச்சும் பாம்புகளாய்ப்
பேனாவின் நாவுகள்

பேனாக்கடல்
விஷம் கொப்பளித்து வெளித்தள்ள
விழுங்கும்
நீலகண்டக் காகிதமாய் நான்.


5 கருத்துகள்:

  1. 'நீலகண்டக் காகிதம்'! அருமை.

    படிப்பவர்களுக்குப் பரவாதா?

    பதிலளிநீக்கு
  2. அதுதான் தெரியல ஸ்ரீராம். :) கண்ணில் நுழைந்து கண்டத்திலேயே நின்றுவிட்டதா என்ன.. :)

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...