அவன் கனவுக்குள் கனவாகி
நினைவெல்லாம் நனவாக்கி
நறுமுகையாய் அவள் விரிந்தால்
காதல் இனிது.
காதல் இனிது.
உழைக்குமவன் உன்னதமும்
கணப்பொழுதின் சன்னதமும்
நொடிப்பொழுது நினைத்துவிட்டு
ஊடலைக் கைவிட்டால்
காதல் இனிது.
ஓராயிரம் பெண்ணுண்டு
ஒருவனுக்கு ஒருத்தியென்னும்
உயர்தர்மம் தழைத்திட்டால்
ஈருடலும் ஓருயிராயினிக்க என்றென்றும்
காதல் இனிது.டிஸ்கி :- இந்தக் கவிதை அமீரகத்தில் இருந்து வெளிவரும் தமிழ்த் தேர் தைமாத இதழில் ( 2015 ) பிரசுரமாகி உள்ளது. நன்றி தமிழ்த் தேர், காவிரி மைந்தன் சகோ. புகைப்படம் எடுத்துப் பகிர்ந்தமைக்கு நாகினி கருப்பசாமி.:)
.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!