வியாழன், 29 அக்டோபர், 2015

தனிமை:-31.1.86.

தனிமை:-

பூமிக்கும்
வானுக்கும்
இடைப்பட்ட கறுப்பாய்.


கடிதங்கள் அனுப்பப்படுதலுக்கும்
கிடைத்தலுக்கும்
இடைவெளியாய்

இருத்தலும்
இழத்தலும்
இருந்து என்ன செய்ய ?

பயணங்கள்
யூகங்கள் நோக்கி
யுகங்களாய்,

தினம்
உடல் சுமந்து
நாற்காலி வேண்டும்
தனிமை
தனிமைகளைத்
தனுமைகளாக்கும்
உதிர்ந்துபோன
ஈசல் இறகுகள்.

மின்மினியின்
ஒளி உமிழ்தலாய்
நட்புகள் நெகிழ்ந்துகொள்ள
இறுதிப் பயணத்தின்
நீண்ட அந்தகாரமாய்

7 கருத்துகள் :

Nagendra Bharathi சொன்னது…

தனிமை வலிக்கிறது

Dr B Jambulingam சொன்னது…

தனிமையின் சுகம் அலாதியானது. தொடர்ந்து படிக்கிறேன். நன்றி.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

தனிமைக்கு இப்படியும் ஒரு கோணமா...அட!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி நாகேந்திர பாரதி

நன்றி ஜம்பு சார்

ஆம் துளசி சகோ & கீத்ஸ்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி வெங்கட் சகோ

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...