எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
யூமா வாசுகி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யூமா வாசுகி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 9 மார்ச், 2020

குட்டி இளவரசன் – ஒரு பார்வை


குட்டி இளவரசன் – ஒரு பார்வை

குட்டி இளவரசன்

ஃப்ரெஞ்சிலிருந்து மலையாளத்திலும் ( ராமகிருஷ்ணன் குமரநல்லூர் ) மலையாளத்திலிருந்து தமிழுக்கும் வந்திருக்கும் நூல் இது. குழந்தைகளின் உலகம் எவ்வளவு எளிமையானது என்பதைப் பதிய வைத்தது.

ஒவ்வொரு விஷயத்தையும் பெரியவர்களாகிய நாம் எவ்வளவு சிக்கலாகப் புரிந்து கொள்கிறோம். அதே நம் குழந்தைப் பருவத்தில் அவற்றை எப்படி வியப்போடு நோக்கினோம் என்பது புரிந்தது. விஷயங்களை அறிய அறிய இன்னும் தீர்க்க இயலா முடிச்சுக்கள் நம்மைச் சுற்றிப் பிணைந்து கிடக்கின்றன.

வியாழன், 27 பிப்ரவரி, 2020

கசாக்கின் இதிகாசம் – ஒரு பார்வை.

கசாக்கின் இதிகாசம் – ஒரு பார்வை.

ரவி என்னும் பெயரை மலையாளிகள் ரெவி என்று அழைக்கக் கேட்டிருக்கிறேன். இதில் வரும் ரவியை இரு பெண்கள் ரவி என்றே விளிக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் தமிழ்ப் பெண்களாய் இருக்கலாம் ( சின்னம்மா, பத்மா ). இந்து, முஸ்லீம் மக்கள் இவர்களூடே நாத்திகம், கம்யூனிஸத்தின் தாக்கம், கல்வியின் முக்கியத்துவம் பற்றிய அறியாமை , மலை/கிராம மக்கள் அவர்களின் பாசிபடிந்த வாழ்க்கை, பெண்களின் நிலை, பெண்களைப் பயன்படுத்தும் நிலை, எந்த மனக்கிலேசமும் இல்லாமல் பெண்களுக்கும் பல்வேறு ஆண்களுடனான உறவுகள் ஆகியன சித்தரிக்கப்படுகின்றது இந்த நாவலில்