எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 17 ஜூன், 2015

நான் செய்த கைவினைப் பொருட்கள். - ENGRAVING.

வீடு விட்டு வீடு மாற்றிக் கொண்டிருக்கும் பொழுதில் இந்தப் பொருட்களை எல்லாம் பெரிய பெரிய அட்டைப் பெட்டிகளில் போட்டு பாக் செய்வதுண்டு. கிட்டத்தட்ட 25 வீடு மாறி இருப்போம். :) வீட்டிற்கேற்ப பொருட்களை அடுக்கி வைத்துக் கொள்வதுண்டு.

முன்பெல்லாம் சென்ற அன்றிலிருந்து சமையல் & சாப்பாடு செய்வதோடு ,  ஒரு வாரம் பத்து நாளில் செட் செய்துவிடுவேன். இப்போது எல்லாம் ஒவ்வொரு பெட்டியாகப் பிரித்து அடுக்க ஒரு மாதம் கூட எடுக்கிறது :) இத்தனைக்கும் அந்த அந்த ஊரிலேயே முடிந்தவற்றைப் போட்டு விடுவதும் உண்டு. சில கைவேலைப்பாடுகளை மட்டும் சுமந்து திரிகிறேன். {{இந்த பழைய சாமான்களில்  என்னுடைய பழைய டைரிகளும், கல்லூரிக்கால ஃபைல், படைப்புகள் வெளிவந்த புத்தகங்கள், வாசகர் கடித ஃபைல், ஃபோட்டோ ஆல்பங்கள், அலங்காரப் பொருட்கள் இன்னபிறவும் உண்டு. :) }}

என்க்ரேவிங்:-

இது நான் நெய்வேலியில் இருந்தபோது திருநாவுக்கரசு அண்ணனின் மனைவி அன்பு அண்ணியின் தோழியிடமிருந்து கற்றுக் கொண்டேன். நாவல்டீஸில் இதுக்கான அலுமினிய ஷீட் கிடைக்கும். அளவு சொல்லி வாங்கிக் கொள்ள வேண்டும். ஹாண்ட் என்க்ரேவிங் டூல்ஸ் என்று பம்பரம் சைஸில் இரண்டு வாங்கிக் கொண்டேன். ஒன்று ஓரம் செதுக்க இன்னொன்று உள்ளே செதுக்க.

படத்தை ட்ரேஸ் செய்து கொண்டு அதன் மேல் ஹாண்ட் என்க்ரேவிங் டூலை வைத்து வலமும் இடமும் மிக லேசாக அசைத்தபடி கார்பன் கோடுகளில் செதுக்க வேண்டும். ஓரத்துக்கு கொஞ்சம் பெரிய சைஸ் கார்னர் உள்ள டூல் என்பதால் கொஞ்சம் பெரிய பெரிய வி, வி யாக வரும். உள்ளே செதுக்க சின்ன சைஸ் கார்னர் உள்ள டூல் என்பதால் சரிகை வேலைப்பாடு போல வரும். மிக என் ஜாய் செய்து வரைந்த வெல்கம் லேடி இவள். அதன்பின் கறுப்பு சிவப்பு பெயிண்ட் அடித்தேன் :) ப்ளெயினாகவும் வைக்கலாம்.
ஹாஸ்டலில் இருக்கும்போது இந்த மேட்டித்துணியில் நடுவீட்டுக் கோலம் பின்னி இருக்கேன். இது எம்ப்ராய்டரி நூலாக க்ராஸ் க்ராஸா தைக்கணும். நாமே மாடல் வைச்சிக்கிட்டு எண்ணி எண்ணித் தைக்கணும். கொஞ்சம் ஃபினிஷ் பண்ணாம வைச்சிருந்தேன். அத அம்மா அப்புறம் ஃபினிஷ் பண்ணி தடுக்கா தச்சிட்டாங்க. :) கீழே பிரம்புத் தடுக்கு. அதுக்கு விளிம்புல நீலக்கலர் துணி எல்லாம் தைச்சவுடனே ஜோரா இருக்குல்ல :)


இது ஒரு ஹாண்ட் பேக். ப்ளாஸ்டிக் மேட்டில் ( இதிலேயே ஓட்டைகள் இருக்கும் ) டிஸ்கோ  ஒயர் கொண்டு பின்னுவது. நாமே பிடித்த டிசைன்களின் பின்னலாம். ஒரு பக்கம் எனது பெயரும் இன்னொரு பக்கம் எனது கணவரின் பெயரும் பின்னி இருக்கிறேன். அதன்பின் டெய்லரிடம் கொடுத்தால் உள்ளே துணி வைத்து சைடில் லெதர் வைத்து ஜிப் தைத்து கைப்பிடியும் போட்டு கைப்பையாகத் தந்துவிடுவார். ( பேக் தைக்கும் கடைகள் என்றே காரைக்குடியில் உண்டு. )இது பழைய குக்கர் கேஸ்கட்டில் செய்தது. உல்லன் நூல் கொண்டு க்ரோஷா ஊசியால் பின்னி அதனை உல்லன் நூல் சுற்றிய குக்கர் காஸ்கட்டில் இணைக்க வேண்டும் அவ்வளவே. {{முதலில் ஒரு ரோஜா. அதன் பின் இலைகள் அதன் பின் சுற்றுப் பின்னல். }}
இன்னொன்றும் வேறொரு கலர் காம்பினேஷனில்.திருப்பி வைத்து புகைப்படம் எடுத்துவிட்டேன் :)
இதுவும் ப்ளாஸ்டிக் மேட்டில் உல்லன் நூல் கொண்டு பின்னியதுதான். வரவேற்பாக வாசலின் இருபுறமும் தொங்க விடுவது. பெரிய சைஸ் ஊசியில் ஈஸியாகப் பின்னலாம். அதன் பின் கண்ணாடியை மத்தியில் ஃபெவிகால் கொண்டு ஒட்டவேண்டியதுதான்.
இது ஒரு ஒயர் மூலம் செய்யப்பட்ட அன்னாசிப்பழ டிசைன். கீழே பாராசூட்  ப்ளாஸ்டிக் பாட்டில் அதன் மேல் ஒயர் கொண்டு ஜம்கி வைத்து குண்டூசியால் குத்தி அடுக்கடுக்காக உருவாக்கி மேலே கொத்தாக பாசி செருகிய ஒயர்களை வைக்கவேண்டும். மேலே இருந்த க்ளஸ்டர் காணாமல் போய்விட்டது :) {{ ஒயரை ரெண்டு இஞ்சுக்கு வெட்டி அதையும் நீளவாக்கில் இரண்டாக வெட்ட வேண்டும் .}}
 அதே ஒயரினால் பின்னப்பட்ட வால் ஹாங்கிங். மூன்று அட்டைகள் வெவ்வேறு சைஸில் வெட்டி ஸ்டாப்ளர் மூலம் பின் செய்து நடுவில் பொம்மைகள் ஏதும் ஒட்டலாம். :)


இது அந்த ஒயரிலேயே செய்த மாலை. இரண்டு இஞ்ச் கட் செய்து நரம்பில் ஊசி வைத்துக் கோர்க்க வேண்டும்.

டிஸ்கி. :- இதுல ஏதும் நீங்களும் செய்துபார்த்துட்டு சொல்லுங்க. :)

டிஸ்கி :- இதையும் பாருங்க.

டைனிங் டேபிள் மேட்டுகளும் டெலிஃபோன் மேட்டுகளும். 

இன்னும் ஸ்வெட்டர்கள், கார்டிகன் , ஸ்கார்ஃப், ஃபர் கரடி பொம்மைகளும் செய்திருக்கிறேன். அவற்றை இன்னொரு இடுகையில் பகிர்வேன். :) 14 கருத்துகள்:

 1. வணக்கம் சகோதரி.

  நல்ல நல்ல கைவினைப் பொருட்களை செய்து அமர்க்களப் படுத்தியிருக்கிறீர்கள். பார்க்க பார்க்க ஒவ்வொன்றும் கண்ணுக்கு விருந்தாய் இருக்கிறது. இதில் பாரசூட் பாட்டிலில் சம்கி வைத்து குண்டூசி குத்தியதை நானும் செய்துள்ளேன். நீங்கள் சொல்வது போல் வீடுகள் மாறும் போது அதையும் விடாமல் இனம் புரியாத பாசத்தில் எடுத்துச் செல்வதுண்டு. அதே ஒயரில் நீங்கள் செய்துள்ள மாலை வெகு அழகாய் உள்ளது. மேலும் பல பொருட்களை அடுத்தப் பகிர்வில் காணும் ஆவலில் உள்ளேன். பகிர்வுக்கு நன்றி.

  என் தளம் வந்து கருத்திட்டமைக்கு மனமார்ந்த நன்றிகள்.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.


  பதிலளிநீக்கு
 2. அடடா...! ஒவ்வொன்றும் தான் எத்தனை அழகு...!

  பாராட்டுகள் சகோதரி...

  பதிலளிநீக்கு
 3. அழகான கைவினைப் பொருட்கள்! அருமை! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 4. தங்களுக்குள்தான் எவ்வளவு ஒரு பொறுமை + தனித்திறமைகள்.

  எனக்கு மிகவும் பொறாமையாக உள்ளது :)

  அனைத்தையும் ரசித்து மகிழ்ந்தேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.

  முதல் படத்துக்கும் கடைசி படத்துக்கும் 100க்கு 100 மார்க்குகள் அளித்துள்ளேன். ))))))))

  மற்றவற்றிற்கு ஒவ்வொன்றுக்கும் 99.99 % கொடுத்துள்ளேனாக்கும். :)))))))

  பதிலளிநீக்கு
 5. தேனின் கைத்திறமைகள் பற்றி என் மகள் சொல்லியிருக்கிறாள்,,அதை இன்றுதான் பார்த்தேன் ரசித்தேன்,மலைத்தேன் எப்பொழுதும் டைம் லைனில் இருப்பது எப்படி என்பது இப்பொழுது புரிகிறது சகலகலா வல்லி யே நீவாழி உன் கலை வாழி ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல அந்த மாலை ஒன்றே போதும் உன் திறமைக்கு,,சூப்பர் சூப்பர் பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 6. பார்த்தேன் ரசித்தேன் மலைத்தேன் மல்டி டேலண்ட் லேடியை பார்த்து அருமை அருமை அதிலும் அந்த மாலை ஓ சூப்பர்தேனு
  சரஸ்வதிராசேந்திரன்

  பதிலளிநீக்கு
 7. கைத்திறன்கள் அனைத்தும் முக்கியமாய் அந்த‌ 'வெல்கம் படமும்' அன்னாசிப்பழமும் மாலையும் மிக அழகு! நேரில் சந்திக்கும்போது உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள‌ வேண்டும் இவைகளை!

  பதிலளிநீக்கு
 8. நன்றி கமலா மேம்

  நன்றி டிடி சகோ

  நன்றி தளிர் சுரேஷ்

  நன்றி விஜிகே சார். செண்டம் கிடைத்ததில் மகிழ்ச்சி :)

  நன்றி அருண் ப்ரசாத்

  நன்றி சரஸ் மேம் !!!!!!! அஹா சந்தோஷ மழையில் நனைகிறேன் :)

  நன்றி மனோ மேம். நிச்சயம் சந்திப்போம் .

  பதிலளிநீக்கு
 9. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 10. அது ஒரு காலமல்லவா...? நானும் நிறைய செய்து இருக்கிறேன்...மலரும் நினைவுகள் சகோ நன்றி.

  பதிலளிநீக்கு
 11. வாவ் !எல்லாமே சூப்பர்க்கா .. நானா உங்க சமையல் தளத்தை மட்டும் தொடர்வதால் இதெல்லாம் மிஸ் பண்ணிட்டேன்..அந்த clutch purse அழகுக்கா ..எனக்கு செய்ய ஆசைதான் ஆனா ஊசிக்கும் எனக்கும் அடிக்கடி வாய்க்கால் தகராறு எப்பபார்த்தாலும் கையை பதம் பார்த்திடும் அதனால் ஊசி ஐட்டம்ஸ் கிராப்ட்ஸ் செய்ய யோசிப்பேன் :)

  பதிலளிநீக்கு
 12. வாவ்! தேனு சூப்பர் போங்க அந்தத் தட்டு தவிர மற்ற அனைத்தும் செய்திருக்கிறேன்...ஆனால் தூசி அடைகிறது என்று வீட்டில் சொன்னதால் அவ்வப்போது யாருக்காவது கொடுத்துவிட்டேன். இப்போது நோ கைவினைப் பொருள்....ஒன்லி மௌஸ் அன்ட் கீ ஹிஹிஹி...

  கீதா

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...