எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
REVIEW லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
REVIEW லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 5 பிப்ரவரி, 2019
திங்கள், 3 ஜூலை, 2017
சந்திரலேகாவின் வெற்றிக் கதை.
புக்கையோ படத்தையோ
இன்றைய நாளில் ப்ரமோஷன் செய்றதைப் பார்க்கிறோம். ஆனால் 1948லேயே ,கிட்டத்தட்ட 70 வருஷத்துக்கு
முன்னாடியே ஒரு மில்லியன் ரூபாய் விளம்பரத்துக்கு மட்டுமே செலவழிக்கப்பட்ட படம் சந்திரலேகா.
huge multicoloured posters, glossily printed brochures, press books, expensively printed songbooks, were to be seen everywhere... it was all unheard of in India.////
5 வருடங்கள் நான்கைந்து
கதாசிரியர்கள், இரண்டு டைரக்டர்கள், முப்பது மில்லியன் செலவு. ஸ்டூடியோ முழுக்க வனம்
& சர்க்கஸ் போல் மிருகங்கள், 400 க்கும் மேற்பட்ட நடனமணிகள் அவர்களுக்குப் பயிற்றுவிக்க
ஜெர்மனி & சிலோன் நடன மாஸ்டர்கள், மாதச் சம்பளத்துக்கு நடிகர்கள், தன் சொத்து நகை
அனைத்தையும் பணயம் வைத்து ஜெமினி ஸ்டூடியோஸ் எஸ் எஸ் வாசன் அவர்கள் தயாரித்தபடம்தான்
சந்திரலேகா. முன் எடுத்த படங்களை விட மாபெரும் வெற்றியடைந்து அவருக்குப் பெரும் புகழையும்
பணத்தையும் ஈட்டித் தந்ததாம் இப்படம்.
தமிழ் இந்தி ஆகிய
இருமொழிகளிலும் மெகா வெற்றி.
இதில் நடித்த டி
ஆர் ராஜகுமாரி அடுத்துப் பெரும்படம் ஏதும் நடித்ததாகத் தெரியவில்லை. ஆனால் பானுமதியின்
கர்வமான அழகை ரசிப்பது போல இவரது கர்வமான பேரழகை ரசித்திருக்கிறேன்.
இன்றைக்கு விக்கிபீடியாபோல்
அன்றைய வழ வழத் தாளில் முழுக்கதை & பாடல்களுடன் ப்ரிண்ட் செய்யப்பட்ட சந்திரலேகா.
இது 1965 கள்,
1970 கள் வாக்கில் வெளியிடப்பட்டிருக்கலாம். அன்றைக்கு எல்லாம் படம் வந்தால் உடனே மாட்டுவண்டியில்
ஸ்பீக்கர் சகிதம் நோட்டீஸ் வீசியபடி பவனி வருவார்கள். முக்குக்கு முக்கு தண்டோரா போட்டும்
அறிவிப்பதுண்டு.
ஸ்டாம்பு, காயின்
கலெக்ஷன், சிகரெட் அட்டை, தீப்பெட்டி லேபிள், புக் லேபிள் சேர்ப்பது போல இந்த நோட்டீஸ்களையும்
படத்தின் போஸ்டர்களையும் மினி போஸ்டர்களையும் , புக்லெட்டுகளை சேர்ப்பது பல குழந்தைகளின்
பொழுது போக்கு. இதற்கு மிகப் பெரும் போட்டியே நடக்குமாம். ரங்க்ஸ் கொடுத்த தகவல்.
டாம் க்ரூஸின் த மம்மி 2017. – THE MUMMY 2017- REVIEW.
மம்மி & மம்மி ரிட்டர்ன்ஸ்
மிகச் சிறப்பான படங்கள். மிஷின் இம்பாஸிபிள் தொடர் படங்கள் அதில் நடித்த டாம்
க்ரூஸ் அதி சிறப்பு. இந்த மம்மியும் டாம் க்ரூஸும் இணைந்தால் எப்படி இருக்கும்.
இதுதான் த மம்மி திரைப்படம்.
கதை ஓரளவு சுவாரசியமானதுதான். ஆனா
இதுக்கு டாம் தேவையா. யார் வேணாலும் நடிக்கலாம். ஆனா இவரைப் போட்டு வேஸ்ட்
பண்ணனுமா. மிஷின் இம்பாஸிபிள்ல செம ஆக்ஷன்ல பார்த்துட்டு இந்த மம்மி பேய் பிசாசு
கதையில் இவரைப் பார்ப்பது எல்லாம் எரிச்சலா இருக்கு.
திங்கள், 15 மே, 2017
பாகுபலி – 2 BAHUBALI – 2 REVIEW. இது ’இராஜ’ மௌலியின் காலம்.
பாகுபலி – 2 BAHUBALI – 2 REVIEW.
ரொம்ப ரொம்ப அழகான
காதல் கதை என முதல் பகுதியின் ஒரு பாட்டை எதேச்சையா பார்த்துட்டுப் போனா திரை பூரா
ஒரே அரசியல் நெடி. அதுதான் பாகுபலி -2.
இராஜமாதா சிவகாமியும் தேவசேனாவும் மனசுல நிரம்பி
இருக்காங்க. யப்பா என்னா கம்பீரம். சான்ஸே இல்லை. முன்னே எல்லாம் எனக்குக் கம்பீரமான
பெண்கள் என்றால் முதலில் பானுமதிதான் தோன்றுவார். இந்தப் படம் பார்த்த பின்னாடி ரம்யாகிருஷ்ணனும்,
அனுஷ்காவும் அந்த இடத்துக்குப் போட்டி போடுறாங்க!
செவ்வாய், 10 ஜனவரி, 2017
தங்கல் - குஸ்தி யுத்தம் - ஒரு பார்வை. (REVIEW OF DANGAL )
காரைக்குடி போன்ற ஊர்களில் ஜேம்ஸ்பாண்ட் போன்ற ஆங்கிலம் >தமிழ் மொழிமாற்றப் படங்களே வருவது அரிது. அதில் ஒரு ஹிந்திப்படம் செகண்ட்ஷோவில் கூட ஹவுஸ்ஃபுல்லாக சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது. ( படம் பார்த்துப் பத்து நாளாச்சு. புதியமாதவியின் பதிவு பார்த்ததும் எழுதத் தோன்றியது :) :) :)
ஐந்து தியேட்டர்களே உள்ள மாபெரும் நகரமான காரைக்குடியில் ( சத்யம், சிவம், பாண்டியன், நடராஜா, இராமவிலாசம் - இதில் இராமவிலாசம் மூடிக் கிடக்கு ) சத்தியமும் நடராஜாவும் நவீனமயமாக்கப்பட்டிருக்கின்றன. சீட்டிங் எல்லாம் வசதியா இருக்கு. மினி தியேட்டர் கெட்டப்புக்கு மாறிடுச்சு. ஆனா டிக்கெட் விலைதான் 100 ரூ. குடும்பத்தாரோடு குதூகலமா போனா ஆயிரக்கணக்குல டிக்கெட்டுக்கு குடுக்கணும். இந்தப் படத்துக்கு தமிழ்நாட்டுலயும் வரிவிலக்கு கொடுக்கலாம்.

வெள்ளி, 25 நவம்பர், 2016
செவ்வாய், 6 அக்டோபர், 2015
ட்ரான்ஸ்போர்ட்டர் - 4. TRANSPORTER - 4 REFUELED - REVIEW.
விர்ர்ரூரூம்ம்ம் விர்ர்ர்ரூரூரூம்ம்ம்ம் என்று கார் அதிரும்போதெல்லாம் ஜேசன் ஸ்டேதம் ( JASON STATHAM ) போல ஒரு விறுவிறுப்பை எதிர்பார்த்து இந்தப் படத்துக்குப் போயிருந்தீங்கன்னா உங்களுக்கு ஏமாற்றம்தான் . பொன் வைக்கும் இடத்தில் பூ வைக்கிறோம் என்பார்களே அதைப் போல ஜேசன் ஸ்டேதம் இடத்தில் எட் ஸ்க்ரைன்.( ED SKREIN )
போதாக்குறைக்கு ஹீரோயின் அன்னா ( லோன் செபனால்- LOAN CHABANOL ) வேறு எட் ஸ்க்ரைனை பச்சா மாதிரி ட்ரீட் செய்கிறார். மிக வசீகரமாக இருந்தாலும் எட் ஸ்க்ரைன் சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளை மாதிரி எடுக்கப்பட்டிருப்பது இந்தப் பட தொடர் அணிவகுப்பில் கொஞ்சம் பின்னடைவுதான். ஆனா லோன் செபனால் கொள்ளை அழகு. அதுவும் அவர் வில்லனால் முதன் முதலில் தொழிலுக்கு நிற்கவைக்கப்படும் இடத்தில் நடிப்பிலும் அழகிலும் பிரமிப்பூட்டுவார்.

சனி, 17 ஜனவரி, 2015
திங்கள், 5 ஜனவரி, 2015
தெய்வீகப் “பிசாசு ” ( PISASU )
தன்னைக் கெடுத்தவனை மணந்து வாழ்வது புதிய பாதை. தன்னைக் கொன்றவனுடன் வாழ்வது பிசாசு. மிஷ்கினின் இந்தப் படத்தைப் பார்த்ததும் பல்வேறுபட்ட உணர்வுகள் ஏற்பட்டன.சீனுக்கு சீன் இன்சுக்கு இன்ச் இது ஒரு நல்ல பிசாசுப் படம்.
நல்வழியில் நடந்தாலும் அடுத்தவருக்கு எந்தத் துன்பமும் தரக்கூடாது என்று எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும் ,நமக்குத் தெரியாமலே நாம் மாபெரும் குற்றமும் செய்திருக்கக்கூடும் என்ற அச்சத்தைக் கிளப்பியது படம். ஒரு சின்ன காட்சிப் பிழைதான். அதற்கு மூலகாரணம் ஹீரோதான். ஆனால் அந்த இடத்திலும் அவர் காரில் ஒலிக்கும் செல்ஃபோனைக் காரை விட்டிறங்கித்தான் பேசுகிறார். அதற்குள்ளே ஒரு சின்ன ஸ்லிப். அதனால் ஒற்றைக் கால் ஸ்லிப்பருடன் இறக்கிறார் நாயகி ப்ரயாகா.நாயகன் நாகா காப்பாற்ற ஓடி வருகிறார். ஆட்டோவில் ஏற்றிப் பறக்கிறார்கள். வழியில் சிவப்பு பச்சை தகறாறு. கடைசியில் சிவப்புத்தான் மூலகாரணம் என்று தெரிய ஹீரோ தற்கொலைக்கு முயல தெய்வீகப் பிசாசு முடிவை நிர்ணயிக்கிறது.

வெள்ளி, 10 ஜனவரி, 2014
THE WOLF OF WALL STREET. REVIEW . த வுல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட். சினிமா எனது பார்வையில்.
அமெரிக்கப் பங்குச் சந்தையைப் புரட்டிப் போட்ட ஒரு ஸ்டாக் புரோக்கரின் -- ஜோர்டான் பெல்ஃபோர்ட்டின் - கதை என்று ஒரே வரியில் சொல்லி விடலாம்.
ஒரு பங்குத் தரகர் எப்படி என்னென்ன தகிடுதத்தங்கள் செய்து வாழ்வில் உயர்ந்தார். பணக்காரரானர் . பின் வழக்கம் போல சட்டத்தின் பிடியில் அகப்பட்டு சிறைக்குச் செல்கிறார் என்பதே கதை.
புதன், 21 ஆகஸ்ட், 2013
சென்னை எக்ஸ்ப்ரஸ்ஸா.. தென்னக எக்ஸ்ப்ரஸ்ஸா.. (CHENNAI EXPRESS - REVIEW )
BISCUIT ஐ நாம் பிஸ்கட் என்போம். டெல்லிக்காரர்கள் பிஸ்குட் என்பார்கள். FRIDGE ஐ நாம் ஃப்ரிட்ஜ் என்போம். அவர்கள் ஃப்ரீஈட்ஸ் என்பார்கள். என் சொத்தைப் பல்லை டெல்லியில் டாக்டர் பாலியிடம் எடுக்கச் சென்ற போது அவரும் அவர் மனைவியும் தமிழர்களின் ஹிந்தி உச்சரிப்பைக் கிண்டலடிக்கும் விதமாக ஹிந்தி பேச இந்த டிஸ்கஷனில் நான் அவரிடம் என் கருத்தை வலிய சொன்னேன். ( தேவையா பல்லைப் பிடுங்கினோமா வந்தோமா என்றில்லாமல் என்கிறீர்களா.. :) அவர்களோ அசால்டான புன்னகையுடன் என் பதில் கேலியை எதிர் கொண்டார்கள்.
புதன், 27 பிப்ரவரி, 2013
வெள்ளி, 15 பிப்ரவரி, 2013
விஸ்வரூபம்.. எனது பார்வையில்
விஸ்வரூபம்..
ஒரு பெரியவர் புறாக்களுக்கு தீவனம் அளித்தபடி தோன்றுகிறார். ஒரு புறாவை மட்டும் எடுத்துப் பறக்க விடுகிறார். பின்னால் அமர்ந்திருந்த இருவரில் ஒருவர் “ இவர் கமலஹாசனா.. ? “ இன்னொருவர் “ இவர் கமலஹாசனாவும் இருக்கலாம். அவர் எந்த ரோலும் பண்ணுவார்.” என்கிறார்.
பயங்கர எதிர்ப்பார்ப்போடு படம் பார்க்கத் துவங்குகிறோம். விஸ்வநாதனின் மனைவி பூஜா குமார் தனக்கு ஏற்படும் சமீப அனுபவங்களை ஒரு டாக்டரிடம் பகிர்கிறார். அதே நேரம் ஒரு டிடக்டிவை ஏற்பாடு செய்து தன் கணவரைப் பின் தொடரச் செய்கிறார். அவர் புகைப்படம் எடுத்து பூஜாவின் கணவர் ஒரு முஸ்லீம் என்பதை பதிவு செய்கிறார். கண்ணாடிச் சுவர்களுடன் மாஸ்க் என்பது வெளிநாடுகளில் இருக்குமோ.. # டவுட் நம். 1.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)