புக்கையோ படத்தையோ
இன்றைய நாளில் ப்ரமோஷன் செய்றதைப் பார்க்கிறோம். ஆனால் 1948லேயே ,கிட்டத்தட்ட 70 வருஷத்துக்கு
முன்னாடியே ஒரு மில்லியன் ரூபாய் விளம்பரத்துக்கு மட்டுமே செலவழிக்கப்பட்ட படம் சந்திரலேகா.
///To top it all, Vasan came out with a gigantic publicity campaign which
made the nation sit up and take notice. His budget was said to have
been nearly a million rupees, an incredible sum in those days.
Full-page ads,
huge multicoloured posters, glossily printed brochures, press books,
expensively printed songbooks, were to be seen everywhere... it was
all unheard of in India.////
5 வருடங்கள் நான்கைந்து
கதாசிரியர்கள், இரண்டு டைரக்டர்கள், முப்பது மில்லியன் செலவு. ஸ்டூடியோ முழுக்க வனம்
& சர்க்கஸ் போல் மிருகங்கள், 400 க்கும் மேற்பட்ட நடனமணிகள் அவர்களுக்குப் பயிற்றுவிக்க
ஜெர்மனி & சிலோன் நடன மாஸ்டர்கள், மாதச் சம்பளத்துக்கு நடிகர்கள், தன் சொத்து நகை
அனைத்தையும் பணயம் வைத்து ஜெமினி ஸ்டூடியோஸ் எஸ் எஸ் வாசன் அவர்கள் தயாரித்தபடம்தான்
சந்திரலேகா. முன் எடுத்த படங்களை விட மாபெரும் வெற்றியடைந்து அவருக்குப் பெரும் புகழையும்
பணத்தையும் ஈட்டித் தந்ததாம் இப்படம்.
தமிழ் இந்தி ஆகிய
இருமொழிகளிலும் மெகா வெற்றி.
இதில் நடித்த டி
ஆர் ராஜகுமாரி அடுத்துப் பெரும்படம் ஏதும் நடித்ததாகத் தெரியவில்லை. ஆனால் பானுமதியின்
கர்வமான அழகை ரசிப்பது போல இவரது கர்வமான பேரழகை ரசித்திருக்கிறேன்.
இன்றைக்கு விக்கிபீடியாபோல்
அன்றைய வழ வழத் தாளில் முழுக்கதை & பாடல்களுடன் ப்ரிண்ட் செய்யப்பட்ட சந்திரலேகா.
இது 1965 கள்,
1970 கள் வாக்கில் வெளியிடப்பட்டிருக்கலாம். அன்றைக்கு எல்லாம் படம் வந்தால் உடனே மாட்டுவண்டியில்
ஸ்பீக்கர் சகிதம் நோட்டீஸ் வீசியபடி பவனி வருவார்கள். முக்குக்கு முக்கு தண்டோரா போட்டும்
அறிவிப்பதுண்டு.
ஸ்டாம்பு, காயின்
கலெக்ஷன், சிகரெட் அட்டை, தீப்பெட்டி லேபிள், புக் லேபிள் சேர்ப்பது போல இந்த நோட்டீஸ்களையும்
படத்தின் போஸ்டர்களையும் மினி போஸ்டர்களையும் , புக்லெட்டுகளை சேர்ப்பது பல குழந்தைகளின்
பொழுது போக்கு. இதற்கு மிகப் பெரும் போட்டியே நடக்குமாம். ரங்க்ஸ் கொடுத்த தகவல்.
இது ஒரு பழைய ட்ரெங்குப்
பெட்டியில் கிடந்த சந்திரலேகா பட புக்லெட். அப்பவே காஸ்ட்லி வழ வழ பேப்பரில் ப்ரிண்ட்
செய்திருக்கிறார்கள். பூச்சி பொட்டு அரிக்காமல் இன்னும் நூறு வருஷம் கூட தாங்கும்.!