எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 6 அக்டோபர், 2015

ட்ரான்ஸ்போர்ட்டர் - 4. TRANSPORTER - 4 REFUELED - REVIEW.

விர்ர்ரூரூம்ம்ம் விர்ர்ர்ரூரூரூம்ம்ம்ம் என்று கார் அதிரும்போதெல்லாம் ஜேசன் ஸ்டேதம் ( JASON STATHAM ) போல ஒரு விறுவிறுப்பை எதிர்பார்த்து இந்தப் படத்துக்குப் போயிருந்தீங்கன்னா உங்களுக்கு ஏமாற்றம்தான் . பொன் வைக்கும் இடத்தில் பூ வைக்கிறோம் என்பார்களே அதைப் போல ஜேசன் ஸ்டேதம் இடத்தில் எட் ஸ்க்ரைன்.( ED SKREIN )

போதாக்குறைக்கு ஹீரோயின் அன்னா  ( லோன் செபனால்- LOAN CHABANOL )  வேறு எட் ஸ்க்ரைனை பச்சா மாதிரி ட்ரீட் செய்கிறார்.  மிக வசீகரமாக இருந்தாலும் எட் ஸ்க்ரைன் சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளை மாதிரி எடுக்கப்பட்டிருப்பது இந்தப் பட தொடர் அணிவகுப்பில் கொஞ்சம் பின்னடைவுதான். ஆனா லோன் செபனால் கொள்ளை அழகு. அதுவும் அவர் வில்லனால் முதன் முதலில் தொழிலுக்கு  நிற்கவைக்கப்படும் இடத்தில் நடிப்பிலும் அழகிலும்  பிரமிப்பூட்டுவார். கேள்வி கேட்காமல் கொடுத்த பணத்துக்கு கொடுக்கப்பட்ட பொருளை  - பேக்கேஜ் ( அது மனிதர்களாக இருந்தாலும் சரி ) ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு பாதுகாப்பாக கடத்திச் செல்வதுதான் எட் ஸ்க்ரைனின் பணி. இதில் ஒரு பொருள் அல்லது ஒருவருக்கு பதிலாக தங்களையே கடத்தச் சொல்லி மூவர் வருகிறார்கள்.

எ குட் டே டு டை ஹார்ட் ( A GOOD DAY TO DIE HARD )  படம் போல தந்தை மகன் உறவுகள் இந்நாளில் ஹாலிவுட் படங்களில் அதிகம் பேசப்படுகின்றன. அதைப்  போல இந்தப் படத்திலும்  ஃப்ரான்க் மார்ட்டினின் - FRANK MARTIN ( எட் ஸ்க்ரைன் )  தந்தை ரே ஸ்டீவன்சனைக்  ( RAY STEVENSON ) கடத்தி மறைச்சு வைச்சுக்கிட்டு தங்களை ட்ரான்ஸ்போர்ட் செய்யும்படி கேட்குறாங்க மூன்று பெண்கள். இவங்க வில்லனால முன்னொரு காலத்துல கடத்தப்பட்டு விபசாரத் தொழில்ல ஈடுபடுத்தப்பட்டவங்க.

ஆல் ஃபார் ஒன் ( ALL FOR ONE )  என லோன் செபனாலுக்காக உயிரையும் கொடுக்க சித்தமாக இருக்கும் அவங்க ஜினா, மரியா, க்யாவ்  (GABRIELLA WRIGHT-  GINA, TATJANA PAJKOVIC - MARIA, WENXIA YU - QIAO, ) மூவரோட பின்னணியில் இன்னும் சிலரும் கைகோர்த்து செயல்படுறாங்க. ஆனா பக்கா தமிழ்ப்படங்கள் மாதிரி இவங்க கறுப்பு ட்ரெஸ்ல மஞ்சள் விக் வைச்சிக்கிட்டு வர்றதைப் பார்த்தும் வில்லன் க்ரூப்புக்கு ( ராடிவோகே பக்விக் - RADIVOJE BUKVIC  ) ஆர்கேடி கரசோவ் -  ( ARKADY KARASOV) தெரியாம போறது ஆச்சர்யம்தான். கொஞ்சம் டேகன் படம் பார்க்குறோமோன்னு கூட  ஃபீலிங்க் கூட வந்திருச்சு. :)

தமிழ்ப்படங்கள்ல மலையாள, தெலுங்கு ஹிந்தி வில்லன்கள்னா, ஹாலிவுட் படங்கள்ல ரஷிய வில்லன்கள். தங்களை இதில் ஈடுபடுத்தின் வில்லன்களைப் பழிவாங்குறதோட மட்டுமில்ல. அவங்க தங்களை வைச்சு வித்து சம்பாதிச்ச பணத்தையும் தங்களோட அக்கவுண்டுக்கு மாத்திக்கிற புத்திசாலி ஹீரோயினி  அன்னா - லோன் செபனால் . அதிலும் க்ளைமாக்ஸுக்கு அப்புறம் இவர் ஜினா, மரியா, க்யாவ், எட், ரே இவங்க பேர்ல எல்லாம் ஆன்லைனிலேயே அவங்க பங்குக்கான பணத்தை மாற்றி விடுறார். அவங்க அவங்க வீட்டிலும் எல்லாரும் ஆனந்த அதிர்ச்சியாகிடுறாங்க. நீதியை நிலை நாட்டின திருப்தியோட படம் முடியுது.

எல்லாம் சரிதான். ரசிக்க முடிந்தது .ஆனா இதுல ஜேசன் ஸ்டேதம் இல்லாததும் அதுக்கான வலுவான கதையா இது இல்லாததும் கொஞ்சம் மைனஸ்தான். எட் ஸ்க்ரைனை ஜேசன் ஸ்டேதம் லெவலுக்கு உயர விடலையா அல்லது தேவதையா காட்டப்படும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்தத் திரைக்கதை தெரிஞ்சே ஜேசன் ஸ்டேதம் நடிக்க மறுத்துட்டாரான்னு தெரில.

ஆடம் கூப்பர், லுக் பெஸன், பில் கொலேஜ் ( ADAM COOPER, LUC BESSON, BILL COLLAGE ) என்று மூன்று பேர் திரைக்கதை எழுதி இருக்காங்க. சில இடங்களில் நெகிழ்வு ஏற்படுகிறது. பெண்களின் மொழியில் பெண்களின் நிலையை முன்னிலைப்படுத்தி அழகான வசனங்கள் இடம் பெறுகின்றன. ஆல் ஃபார் ஒன் என்று சொல்லும் இடத்திலும் எட் க்ஸ்ரைனிடம் தான் இத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டது குறித்தும் அன்னா சொல்லும்போது மனம் கசிகிறது.

எட் ஸ்க்ரைனின் தந்தையைக் கடத்திய மரியா தோழியாக நடந்து கொள்வதும் இருவருக்குமிடையே அழகான நட்பு தோன்றி இருக்கும்போது இறக்கும் இடமும் எதிர்பாராதது. குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதோ வேலைபார்த்துப் பணம் அனுப்பவதாக நினைத்துக் கொள்ள இவர்களோ வேறொரு நாட்டில் இத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருப்பது பகீர் உணர்வைத் தூண்டியது. கடைசியில் அன்னா ஆன்லைன் மூலமே அனைவருக்கும் பணத்தைப் பகிர்ந்து அளிக்கும்போதும் பாராட்டத் தோன்றுகிறது.

பி எம் டபிள்யூ ( TRANSPORTER - 1 ) , லம்போர்க்கினி  ( TRANSPORTER - 2 ), மெர்சிடஸ்  (TRANSPORTER - 3) , ஆடி ( TRANSPORTER - 4 )  என கார்களின் அணிவகுப்பும் , அவை  ரயில்வே ட்ராக்குகளிலும் கூட ஓடுவதும் (இந்தப் படத்தில் ஃப்ளைட்டில் கூட தாவுது. ) நதியிலே மூழ்கினால் கூட ஜேம்ஸ்பாண்ட் கார் மாதிரி எழுந்து நீந்தித் தரையில் ஓடுவதும் கார் விரும்பிகளுக்கான அட்வெஞ்சர். விதம் விதமான காரை விரும்புபவர்கள், ரேஸ் பிரியர்கள் இப்படத்தை  ரசிப்பார்கள்.

எடிட்டரான கமில்லே டெலிமர்  ( CAMILLE DELAMARRE )  இயக்குநராகி இருக்கார்.  ட்ரான்ஸ்போர்ட்டர் லெகஸி, ரீப்யூயல்ட் ஆகி இருக்கு. ( ரீ பூட் ஆகி இருக்கா தெரியல ) . இந்த வீடியோவுல முதலில் ஜேசன் ஸ்டேதமையும் பின் எட் ஸ்க்ரைனையும் பாருங்க வித்யாசம் தெரியும்.செப்டம்பரின் சென்னை சந்திரா மாலில் ( விருகம்பாக்கம் ) பார்த்தேன். இப்போதான் எழுத நேரம் கிடைச்சுது. ஜேசன் மோல்டியேயே பார்த்துப் பழகிவிட்டதாலோ என்னமோ ட்ரான்ஸ்போர்ட்டர் மைனஸ் ஜேசன் கொஞ்சம் அப்செட்தான். .


டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. எந்திரன் .. THE ROBOT.. எனது பார்வையில்.

2. ஸ்மைலியும் க்ளாடியும் கல்கியும்.


 


 4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...