எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 1 அக்டோபர், 2015

வாசல் பிரபஞ்சம்.



23.4.86.

15. அவள் போட்ட கோலம்
வாசல் ப்ரபஞ்சத்தில்
கிரகப் புள்ளிகளை அடுக்கி.


புள்ளிகளனைத்தும்
திசைக்கொன்றாய்
சூரியனைச் சுற்றி.

சுற்றாத கிரகங்கள்
சுற்றிலும் பாதைகள்.

நெளிந்து வளையும்
வழித்தடங்களாய்

சூரியனும் சந்திரனுமே
அவளின் புள்ளிகளில் ஒன்றாய்.

வாசல் ப்ரபஞ்சம்
எல்லையற்று விரியும்
புள்ளிகளுடனும்
பிரிவுகளுடனும்
பாதைகளுடனும்

கிரகங்கங்கள் பாதைகளை
விட்டுத் தள்ளி.


4 கருத்துகள்:

  1. அவள் போட்டக் கோலத்தில் நிழல் கிரங்களை காணவில்லையே. சூரியனையும் சந்திரனையுமே அவைகள் படாத பாடு படுத்திவிடும்.

    பதிலளிநீக்கு
  2. ஆம் உண்மைதான் ரவீந்திரமணி சார்

    நன்றி துளசி சகோ & கீத்ஸ் :)

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...