வெள்ளி, 16 அக்டோபர், 2015

விசுவாசம்28. 4.86

18. நாம் ஒரு
அழகிய கனவுக்குள்
பொதிந்திருந்தோம்
வெளிப்படுத்தப்பட்டு விட்டொம்.


உண்டியலுக்குள்
காசாய் விழுந்திருந்தோம்
செலவழியப் போகிறோம்

மரங்களாய்
உடல்விரித்து
நிழல் கொடுத்தோம்
வெட்டுப்படப் போகிறோம்.

விசுவாசமாய்த்தான்
துணிகளைப் பற்றியிருந்தோம்.
அவை
தண்ணீரில் நம்மை
சாயங்களாய்க் கழுவி விட்டன.


5 கருத்துகள் :

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

விசுAWESOME சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
விசுAWESOME சொன்னது…

அடே டே! என்னை பாராட்டி தான் ஏதோ கவிதை எழுதி இருக்கின்றீர்கள் என்று ஓடோடி வந்தேன், ஏமாற்றி விட்டீர்களே .. இருந்தாலும் நல்ல அருமையான கவிதை தான். வாழ்த்துக்கள்.

பரிவை சே.குமார் சொன்னது…

கவிதை அருமை அக்கா...
வாழ்த்துக்கள்.

Thenammai Lakshmanan சொன்னது…

அஹா அருமை சார் விசுஆசம் :) உண்மைதான் இரண்டுமே ஒன்றுதானே. :)

நன்றி குமார் தம்பி

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...