எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

வீடு எரிகிறது.:-



26. 4. 86.

17. வீடு எரிகிறது.:-

எரியூட்டப்படுகின்றன
நமது சுயங்கள்

பற்றியெரியும்
சட்டங்களாய்
நமது கனவுகள்


நிகழ்வில் உடையும்
ஓடுகளாய்
நமது இறந்தகாலம்.

ஊரெல்லாம்
வேடிக்கை பார்க்க
சிதறிச் சரியும்
நமது கோட்டைகள்.

நீரூற்றி
அவிக்கப்பட்டுக் கிடக்கும்
கரிக்கட்டைகளாய்
மனசுச்சவம் பொதித்த
மயானங்களாய்
சிறுத்துக் கிடக்கும்
நமது சுயங்கள்.



4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...