எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 31 அக்டோபர், 2015

சாட்டர்டே ஜாலி கார்னர். அமெரிக்காவும் தெலுங்கானாவும். - காந்திமதி அம்மாவுக்கு உதவிய கிருஷ்ணன்.

முகநூலில் சொற்ப காலமே இருக்கும் நட்பில் இணைந்து. ஆனால் முதன்முதல் நட்பான போதே ஒரு ஹார்மனி இருந்தது காந்திமதி மேமுடன் :) அமைதியும் ஆனந்தமும் ஞானமும் மிளிர்ந்த முகம். அவர்கள் தலைமையாசிரியையாக இருந்தவர்கள் என்பதைப் பின்னர் அறிய நேர்ந்தது. ஆனால் அது ஒரு முக்கிய காரணமாயிருக்கலாம்.  ஏனெனில் ஆசிரியைகளை நமக்குப் பிடிக்கும்தானே :) 

அப்புறம் இவரோடு நெருக்கமாக அன்பாகத் தோளில் கைபோட்டு அணைத்து நிற்பது மகளென்று நினைத்திருந்தேன். ஆனால் மருமகள். மகள் போல மருமகள் அமைந்திட்ட இவருக்கு வாழ்த்துகள்.  மாமியார் மருமகள் இருவரும் பரஸ்பரம் அன்பா இருந்தாதான் அம்மா என்றே அழைக்க முடியும். இந்த நெருக்கமும் பிறக்கும்.

எல்லாவற்றையும் பாசிட்டிவாகப் பார்க்கும் அவர்களிடம் ஒரு சில கேள்வி.

அன்பு காந்திமதி மேம்..
உங்களைக் கவர்ந்த ஏதேனும் ஒரு விஷயத்தை என் ப்லாகின் சாட்டர்டே போஸ்டுக்காக எழுதித்தர முடியுமா.? பறவைகள் பற்றி அல்லது தலைமை ஆசிரியையாக இருந்து சந்தித்த சவால்கள் , இனிமையான சம்பவங்கள் பற்றி
அப்படியே உங்களைப் பற்றிய சிறிய சுயவிவரக்குறிப்பும், ஒரு புகைப்படமும் வேண்டும்.

மேம் :-  எழுதுகிறேன்.,ஏற்புடையதெனில் ஏற்றுக்கொள்க.

அஹா நீங்கள் எழுதுவது ஏற்புடையதாக இல்லாமல் போகுமா. அப்படியே சிதைக்காமல் போடுவேன் . இரண்டு மூன்று சம்பவங்களை அனுப்புங்க.

அவர்கள் தலைமை ஆசிரியப் பணியிலும் தன்னுடைய மகன் மகளுடன் வெளிநாட்டிலும் வெளி மாநிலங்களிலும் பயணித்தபோது நிகழ்ந்தவைகளையும் சுவைபடக் கூறியிருக்கின்றார்கள். 

சுய விவரம். :-  காந்திமதி திருநெல்வேலி நடுநிலைப்பள்ளிதலைமைஆசிரியராக 36 ஆண்டுகள் பணி பயணிப்பது, படிப்பது. விருப்பமானது இளமையில் பட்டிமன்ற பேச்சாளர்.,ஆன்மீகச் சொற்பொழிவாளர்.,கல்வியல் பிரச்சாரகர்.கவிஞர். கணவர்.குழந்தைகள்.பொறுப்பான பணி இவற்றால் மேற்படியார்கள் ஒதுங்கிப்பதுங்க நல்ல மனைவி.அன்புத்தாய்.சிறப்பான ஆசிரியை ஆகியோர் வெளி வந்தனர். முன்னேற்றம்._அயர்ச்சியற்ற முயற்சியால் கிடைத்தது இலட்சியம் _தேவாரப்பாடல்கள் பெற்ற.மங்களாசனம் பெற்ற எல்லா திருக்கோவில்களையும் வலம்வருவது.

  
தலைமை ஆசிரியையாக :-


"முதல்வகுப்பு மாணவன் ஒருவன் அடிக்கடி விடுப்பு எடுப்பதாக புகாருடன் வகுப்பு ஆசிரியை பையனுடன் வந்து என் முன் நின்றார் பால்மணம் மாறாத முகத்துடன் நின்றவனைப் பார்த்து "ஏண்டா அடிக்கடி லீவ் எடுக்கிறாய்.?"என்றேன் கடுமையான தொனியில். புண் இருக்கு வலி தாங்கல.அதனாலதான்."பையன் முகத்தில் வேதனை தெரிந்தது. "பொய் சொல்றான் மேம்."இடையிட்டார்.,வகுப்பு ஆசிரியை. பையனை மேலும்கீழும் பார்த்தேன். நான்பொய் சொல்லல.உண்மையிலே எனக்கு புண் இருக்கு."பையனின் குரலில்உறுதி. புண் எங்கடா இருக்கு.?காட்டு."பார்ப்போம். பதில் இல்லை." பார்த்தீங்களா மேம்.'இவனுக்கு புண்ணும் இல்லை., ஒண்ணுமில்லை.சும்ம சம்ம லீவு போடுறதுக்கு ஒரு சாக்கு."வெடித்தார்.,வகுப்பாசிரியை. இல்ல நா பொய் சொல்லல., புண் ரொம்ப வலிச்சுது.,அதான் லீவு போட்டேன்."பையன்அதையே தான் சொன்னான். "சரிப்பா உனக்கு புண் இருக்கு.,அதைக்காட்டு.டாக்டரிடம் போய் மருந்து போட்டுக்கலாமா.?"எனது வார்த்தைகளில்ஆறுதல் கண்டானோ.? சுற்றும் முற்றும் பார்த்தவன்.,சட்டென்று டிராயரை இடுப்பிலிருந்து சிறிது இறக்கினான். "கடவுளே."!வயிறு வாய்க்கு வந்து விட்டதைப் போன்ற உணர்வு.,கண்கள் என் பேச்சைக் கேட்பதாக இல்லை. கொச கொசவென்று உறுப்பே தெரியாதபடி புண்கள். மங்கலான பார்வையில் வகுப்பாசிரியர் அவன் கால்சட்டையை மேலே தூக்கி பட்டனைப் போடுவது தெரிந்தது. "ஏம்பா அம்மா கிட்ட சொல்றதுதானே "?குரல் கரகரவென்றது எனக்கு. "அம்மாதான் சாமிட்ட போய்ட்டாளே.

" அ."அப்பா?
 
அப்பாட்ட பேசினா சித்தி அடிக்கும்."

(பையனை அவன் ஆசிரியரோடு அருகிலிருந்த டாக்டர்.யேசுதாசிடம் அனுப்பி தொடர்ந்து மருந்திடச் செய்ததும் பின்குறிப்பு.)

அப்போது எனக்கு வயது 22.

  • ஆஹா.!ஓஹோ.!.அமேரிக்கா

    அன்பு மகன் அழைத்தானென்று ஆசைப்பட்டு போனேன் அமெரிக்கா. ஆனந்தங்கள் அனுபவித்தது போலவே அவதிகளுக்கும் ஆளானேன். சென்னை விமான நிலையத்தில் சக்கரநாற்காலியில் உட்காரும் போதே பணம் கேட்ட.(ஐம்பது ரூபாய் தான்.)பணியாளருக்கு. "இந்தியாவுல இது ஒரு தொந்திரவு.,காச கண்ணில காட்டுனாத்தான் காரியம்நடக்கும்.வயசான காலத்தில் தனியா வந்துவேற வந்திருக்கோம்."என்றெல்லாம் எண்ணி முகம் சுளித்தபடி பணத்தைக் கொடுத்த அந்த நேரத்தில். "அமெரிக்கப் பணியாளருக்கு ஆயிரம் ரூபாய் தண்டம் அழப்போகிறோம் என்று சத்தியமாகத் தெரியாது.தெரிந்திருந்தால் அந்த இந்தியச் சகோதரனுக்குஇன்முகத்துடன் கொடுத்திருப்பேன்.
  •  
  • அம்பரத்தை ஊடறுத்து முன்னே முன்னே சென்ற ஆயுதப்பறவையின் சிறகசைப்பு எனக்கு ஆனந்தமாகவே இருந்தது.மனப்பாடமாகச் சொல்லிக் கொண்டு வந்த 200 ஸ்தல தேவாரப்பதிகங்களும்.'ஒன்றிரண்டு திரைப்படங்களுமாக நேரத்திற்கு வழங்கப்பட்ட நல்லுணவுகளுமாக பயணம் ரசிக்கும்படியாகவே இருந்தது. ஆனந்தம் ஆனந்தமே.!

    *அறுபத்தைந்தாம் அகவையை மகன்._மருமகளுடன் கொண்டாடியது. (இதுவரை மெழுகுவர்த்தி._கேக் வெட்டுதல்.கலாச்சாரத்தில் நடை பெற்றதில்லை..) *குடியரசுத் தலைவர் மாளிகையைக் கண்டது.,போட்டோக்கு நின்றது.,அப்பூங்காவிலேயே கொண்டு சென்றதை உண்டது.(என்னதென்று கேளாதீர்.,தயவுகூர்ந்து.) *மலர்த்திருவிழாவை ரசித்தது.,மியூசியம் சென்றது.,கடற்கரை மணலில் சாயவுற்றது. *நியூயார்க்.பிலடெல்பியா.நியூஜெர்சி. பாஸ்டன்.போன்ற இடங்கள் முதுகலையில் பயின்ற."அமெரிக்க  சுதந்திரப் போரை நினைவூட்டியது 

  • ஆபிரஹாம் லிங்கன் நினைவிடமும் அவ்வாறே.! *இரண்டாம் உலகப்போரில் உயிர் நீத்தவர்கள் நினைவிடமும். "இன்னமும் இவ்வுலகம் போரை விட்டொழிக்க வில்லையே என்ற மனக்காயத்தைத்தான் ஏற்படுத்தியது
    அதிர்ச்சிகள்._ ______________*அங்கேயும் பிச்சையெடுப்பவர்கள்.அதுவும் வெள்ளைக்காரர்கள்.,முதியவர்.,இளவயதினர்.குடும்பமாய்.,_"Help us,"என்று அட்டை ஏந்தியவர்."கிழிசல்கோட்.அணிந்தவர்.உளம்உருகப்பாடுபவர்._அதிர்ச்சிதான் எனக்கு.
  • நிறுத்தியிருக்கும் கார்கண்ணாடியை உடைத்து உள்ளிருக்கும்பொருட்களைத் திருடுபவர். *கைக்குழந்தையை அருகில் வைத்தபடியே மது அருந்தும்.,சிகரெட் பிடிக்கும் இளம்தாய்கள். *மூட நம்பிக்கைகளை பின்பற்றுதல்.(எ.கா.)ஒரு ஜனாதிபதி தங்கியிருந்த அறையை அடுத்த ஜனாதிபதி பயன்படுத்த மாட்டாராம்.முந்தியவரின் ஆவி அந்த அறையையே சுற்றி வருமாம்.

  • ஆனாலும் படித்துக்கொண்டே சம்பாதிக்கும் மாணவர்கள., பற்பல வேலைவாய்ப்புகள்.,சுத்தமான காற்று. குடிநீர்.இயற்கை வளம்.தனிமனிதசுதந்திரம்.,பெரியவர்களுக்கு மரியாதை.,முண்டியடித்து முட்டி மோதாருவரிசையில் காத்திருக்கும் மாண்பு.,நான் எப்படியும் இருப்பேன்.ஆனால் என்னைஆள்பவன் ஒழுக்கமாய் இருத்தல் வேண்டும்என்ற திண்மை. (இங்கே தலைகீழ்.)

  • எனக்குப் பிடித்திருந்தது.!



  • தெலுங்கானா கலவரத்தின் போது ஆந்திராவில் நான். ______________________________________________________ 

    இச்சம்பவம் நடந்து ஐந்தாண்டுகள் ஆகி விட்டன. அப்போது நானும் என் இளைய மகளும்."ஹைதராபாத்தில் இருந்தோம்.மருமகன் பெங்களுருக்கு மாற்றுதல் ஆகிப் போனதால். வீடுபார்த்துவிட்டு ரயில் டிக்கெட் அனுப்பி எங்கள் இருவரையும் வரச்சொல்லியிருந்தார்.பெங்களுர்கன்டோமென்ட் ஸ்டேஷனில் காத்திருப்பதாகவும்போன் செய்திருந்தார்.மகளுக்கு ஐந்து மாதங்கள்.,மசக்கை.,வாந்தி.இருவரும் வீட்டைவிட்டு வெளியே வந்து ஓனரிடம் வீட்டுச்சாவியை ஒப்படைத்துவிட்டு டாக்சியில் ஏறினோம்.அதன்வரை எல்லாம் சரியாகத்தான் இருந்தது.

  • டாக்சி சிறிது தூரம் சென்ற பின் டிரைவர் செல்லுமிடம் கேட்டார். இடத்தைச் சொன்னதுமே "அங்கேசெல்லும் வழியெல்லாம் கலவரம் போறது ரிஸ்க்மா."என்றார்.ஓனரிடம் சாவியைக் கொடுத்தாச்சு ஸ்டேஷனுக்கு போய்தான் ஆகணும்னு நான் ஆங்கிலத்திலும் தமிழிலும் வாதாட அவனோ. "தெலுகுல செப்பு."ஹிந்தி மேபோலோனா."என்று வண்டியை நிறுத்தியேவிட்டான். இறங்கி இரண்டுதடவை வாந்தி எடுத்த என் பெண் அவனிடம் பேசவே ஏதோ சுத்து வழியில கொண்டு விடுவதாக ஒப்புக்கொண்டான்.

  • ஸ்டேஷனில் இரண்டுமணிநேரம் பயணித்து வந்து சேர்ந்தோம்.எனக்கு தெரிஞ்ச இந்தியில்.??போர்ட்டரிடம்பேசி ரிசர்வ் செய்யப்பட்ட பெட்டியில் ஏறி எங்கள் சீட்டை சரிபார்த்து அமர்ந்தோம்.வண்டியெல்லாம் குறிப்பிட்ட நேரத்தில் கிளம்புற மாதிரி தெரிய லை.இறங்கி பிளாட்பாரத்தில் கொஞ்சமெ பழங்கள் வாங்கிக்கொண்டு திரும்பினால் மகள் கீழே இறங்கி நிற்கிறாள். என்னம்மான்னா "இது நம்ம சீட் இல்லையாம் மாத்திட்டாங்களாம் "என்கிறாள். உள்ளே ஏறிப்பார்த்தால் ஒரு வாத்திய கோஷ்டி சாமான்களுடன் இடத்தை அடைத்திருந்தனர்.

  • வாத்தியகோஷ்டி தமிழ்.எனக்கு பரமானந்தம்.அதிலிருந்த நாதஸ்வர வித்துவான். அருமையா பேசினார்.என் வாழ்க்கையில மறக்கமுடியாத பேச்சு.ஏம்மா பார்த்த படிச்சவளாட்டம் தெரியிறே.நாம ஏறுத இடம் தெலுங்கு .,இறங்குற இடத்தில கன்னடம்.இந்தியும் தெரியாதுங்குற., என்ன தைரியத்துல சூலிப் பிள்ளையைக்கூட்டிட்டு இந்த மாதிரி நேரத்துல கிளம்புன.? ஏகவசனம். எதிர்பார்க்கலை.,நான்.இதற்குள் அங்கு வந்த டி.டி.ஆரிடம் விளக்கம் கேட்டேன். "வழியில கலவரக்காரர்கள் ஒரு ஸ்டேஷனைக் கொளுத்திட்டாங்க.நீங்க இரண்டுபேரும் லேடீஸ்.எனவே உங்கள் சீட்டை A,C.Coach க்கு மாத்திட்டேன்.ரயில் பத்து நிமிஷத்துல புறப்பட்டுரும்.சீக்கிரம் போய் ஏறுங்க."என்றார் இனிமதாங்க. கிளைமாக்ஸ்.
  • இரணடு பெட்டி.ஒருபழக்கூடை.ஒருலேப்டாப்+இரண்டு handbag.தூக்கிகிட்டு பத்து பெட்டிகள் கடநது போகணும்.அறிவுரை சொன்னவர் இடத்தைவிட்டு அசையவில்லை.."சரிம்மா நீ சுமை தூக்கக் கூடாது., மெல்ல நடந்து போ.போர்ட்டர் ஒருவரையும் காணலை. லேப்டேப்பைத் தோளில் போட்டுக்கொண்டு இரண்டு பெட்டியையும் நான் இழுத்துக்கொண்டு பின்னாலேயே வருகிறேன்.என்றபடியே பெட்டியை வெளியே இழுத்தேன்.Wait a minute. I will help u.என்றபடியே மேல் இருக்கையிலிருந்து ஒரு இளைஞன் இறங்கினான்.இருகைகளிலும் இருபெட்டியை தூக்கியபடி.follow me,


  • என்றபடியே நடக்க ஆரம்பித்தான்.இல்லை ஆரம்பித்தார்.எங்களைப் பெட்டியில் ஏற்றி விட்டவரிடம் நன்றி கூறி பெயரைக்கேட்டேன்.Krishnan,Doctor,fromGujarath என்று கூறி விடை பெற்றார்.
  டிஸ்கி:- 

அஹா ஒன்றுக்கு மூன்றாக அருமைச் சம்பவங்களைப் பகிர்ந்துகிட்டதுக்கு முதலில் நன்றிம்மா. அந்த மாணவன் நிலையைப் படித்தவுடன் என் மனமும் பதறியது. என்ன கொடுமை.. ஹ்ம்ம் . இப்போ எங்கே இருக்கிறானோ. நன்றாக இருக்க வேண்டுமென வேண்டினேன். 

அமெரிக்கா பற்றி நகைச்சுவையாகப் பிளந்து கட்டிவிட்டு அதன் நல்ல அம்சங்களையும் பட்டியலிட்டமை அருமை. அதே போல் மாநிலம் விட்டு மாநிலம் வந்தாலும் மனிதநேயம் மரிக்கவில்லை எனக் கூறிய ரயில்வே ஸ்டேஷன் சம்பவம் நெகிழ்வு. ஹேட்ஸ் ஆஃப் டு டாக்டர் கிருஷ்ணன். எங்கிருந்தோ வந்தார். மனித நேயமிக்க மனித சாதி நானென்று சொல்லாமல் உதவி செய்தார். அவர் வாழ்க வளமுடன். :)

மிக சுவாரசியமா குறுகிய நேரத்துக்குள்ள எழுதிப் பகிர்ந்தமைக்கு என் வலைத்தள வாசிகள் சார்பில் அன்பும் நன்றியும் மா. :)  


10 கருத்துகள்:

  1. காந்திமதி அம்மா அவர்களுக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. தலைமை ஆசிரியரின் மூன்று விதமான அனுபவங்கள் சிறப்பான பாடமாய் அமைந்தன! சுவையான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  3. தலைமையாசிரியையின் அனுபவங்கள் என்போன்றோர்க்குப் பாடங்கள்
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  4. என்னைப்பெருமைப்படுத்தி விட்டீர்கள்.நன்றிம்மா.!

    பதிலளிநீக்கு
  5. காந்தி அம்மாவின் அனுபவங்கள் சுவையாக இருந்தன அந்தக் குட்டிப்பையனின் வேதனை தவிர. இப்போது அந்தப் பையன் எங்கிருக்கின்றானோ/ரோ..

    பதிலளிநீக்கு
  6. முதல் செய்தி அதிர்ச்சி.

    மற்ற தகவல்கள் மகிழ்ச்சி. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. நன்றி தனபாலன் சகோ. அவர்களிடம் தெரிவிக்கிறேன்.

    எனது பெண்பூக்கள் பற்றிய கோபால் சாரின் விமர்சனத்தைப் பகிர்ந்தமைக்கும் நன்றி. டிடி சகோ.

    நன்றி சுரேஷ் சகோ

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி காந்திமதி மேம். ஏற்கனவே உங்களிடம் இருந்த திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு கருவியாகவே செயல்பட்டேன் என்று கூறலாம். எல்லாப் புகழும் உங்களுக்கே :)

    ஆம் துளசி சகோ & கீத்ஸ்.

    ஆம் வெங்கட் சகோ . நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...