எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 27 அக்டோபர், 2015

சிக்ரிட் அண்ட்செட். SIGRID UNDSET.

இலக்கியத்தில் பெண் விடுதலைக்காகப் பாடுபட்டவர்களில் முக்கியமானவர் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த  சிக்ரிட் அண்ட்செட்.

இவர்  டென்மார்க்கில் 20 மே, 1882 இல்  பிறந்த நாவலாசிரியை. 1928 இல் இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்றவர்.


அவருடைய படைப்புகளில் மிகச் சிறந்ததாக க்ரிஸ்டின் லாவ்ரன்ஸ்டாட்டர் என்ற வரலாற்றுப் புதினம் கூறப்படுகிறது. இது இடைக்காலத்தில் ஸ்காண்டினேவியாவில் பிறப்பிலிருந்து இளமைப்பருவம் இறப்பு வரையான ஒரு பெண்ணின் வாழ்க்கையைச் சித்தரிப்பதாக அமைந்திருக்கிறது. 1920 இலிருந்து 1922 வரை மூன்று தொகுதிகளாக இது பிரசுரிக்கப்பட்டது.

அண்ட்செட்டின் நோபல் பரிசு இவ்விலக்கியப் படைப்பாக்கத்துக்காவும் மேலும் நான்கு தொகுதிகளாக வெளியான தெ மாஸ்டர் ஆஃப்  ஹெஸ்ட்விகென் ( 1925 - 1927 வரை பிரசுரிக்கப்பட்டது ). என்று இதைப்போன்ற கருப்பொருளில் உருவான நாவலுக்காகவும் வழங்கப்பட்டது.

இதுக்கு ஒரு தசாப்தத்துக்கு முன்னாடியே - க்ரிஸ்டின் லாவ்ரன்ஸ்டாட்டர்  எழுதுவதற்கு முன்பே -  இவர் பதினாலாம் நூற்றாண்டின் நார்வே பற்றிய ட்ரையாலஜி என்று சொல்லப்படக் கூடிய ஒரு முத்தொகுப்பு நாவலான குன்னரின் மகள் என்ற நாவலை எழுதி இருந்தார். இது அப்போதைய நார்வே நாட்டின் வரலாற்றில் வன்முறை மிகுந்த மிகவும் பரபரப்பான காலகட்டத்தை சுருக்கமானதாகப் பதிவு செய்த புதினம்.

இது பதினோராம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்த நார்வே, ஐஸ்லாந்து ஆகிய இடங்களில் வசித்த மிக அழகியான நார்வேயைச் சேர்ந்த மன்னர் குன்னரின் மகளான விக்டிஸை ஐஸ்லாந்தைச் சேர்ந்த மன்னனான லிஜட்  பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய கதை. இதில் என்ன கொடுமை என்றால் யாரை அவள் திருமணம் செய்ய எண்ணிக் காதலித்திருந்தாளோ அந்த மன்னனே அவளை சர்வநாசம் செய்த கதை.

அரசியல் ரீதியான இந்தத் தாக்குதலை எல்லாம் எதிர்த்து வீரமும் புத்திசாலித்தனமும் நிரம்பிய அவள் எதிர்பாராமல் மாறிய சூழ்நிலைகாரணமாகக் கடினமானவளாக மாறுகிறாள். தன்னந்தனியாக நின்று வல்லுறவின்மூலம் தனக்கும் லிஜட்டுக்கும் பிறந்த மகனான உல்வரை வளர்க்கிறாள்.

மீண்டும் மீண்டும் ஆண்களால் நாடு நிர்வகித்து ஆளப்படுவதை எதிர்த்து தனது சுயாட்சிக்காகப் போராடுகிறாள். தனது வாழ்க்கையையும் குடும்பத்தின் மானத்தையும் மீட்கப் போராடுகிறாள். அதில் வெற்றியும் பெறுகிறாள். ஆனால் எவ்வளவு விடாமுயற்சியுடன் போராடியும் மாற்றவியலாத முரட்டுத்தனமான சமூகக் கோட்பாடுகளின் முன் அவளைச் செலுத்தும் முடிவுகள் அவளின் சந்தோஷத்தை அழிக்கின்றன.

இந்நூல் முதலில் 1909 இல் வெளியிடப்பட்டபோது (முதல் தொகுதி ) இது தேசியவாதத்தைத் தூக்கிப் பிடிப்பதாகவும் நார்வேயின் தேசிய அடையாளத்தை அதன் பூர்வீகத்தில் தேடுவதாகவும் அமைந்தது. ஆனால் அந்தக் காலகட்டத்தில் படைக்கப்பட்ட மற்ற புதினங்களைப் போல இது ஒரு சரித்திரக் காதல் கதை அல்ல. 

இது அந்தக்காலகட்டத்தில் ( அண்ட்செட்டின் )  நிகழ்ந்த இரு வேறு நாடுகளுக்கிடையேயான தொல்லை மிகுந்த வரலாற்றுத் தருணங்களை -  சரித்திர மாற்றங்களைத் துணிவுடன் சாடுவதான வலிமையான உரையாடல்களுடன்  அமைந்தது. 

அன்றைப் போலவே இன்றும் நிகழ்கின்ற - கற்பழிப்பு, பழிவாங்கல், உள்நாட்டு மட்டும் தனிமனிதர்கள் மீதான வன்முறை, தொல்லை தரும் திருமணங்கள். பிரச்சனைக்குரிய தங்கள் பெற்றோரின் திருமணத்தால்  பாதிக்கப்படும் குழந்தைகள் என இந்நூல் இன்றும் அதன் உயிர்ப்போடு வாசிக்கக் தக்கதாக தேவைக்குரியதாக இருக்கிறது.

பெண்களின் விடுதலைக்காகவும் அவர்களின் நலனுக்காகவும் நியாயங்களுக்காகவும்  இலக்கியத்தின் மூலம் குரல் கொடுத்த சிக்ரிட் அண்ட்செட்  பெற்றோருக்கு மூன்று பெண்களுள் முதலாமவர். 16வயதிலேயே முதல் நாவலை எழுதத் துவங்கினார். கிட்டத்தட்ட 25 வயது வரை இரு நாவல்களை எழுதியும் பதிப்பகத்தாரால் அவரது எழுத்து அங்கீகரிக்கப்படவில்லை.  அப்புறம் சரித்திரத்தை விட்டுட்டு யதார்த்தத்தைப் படைக்கத் துவங்கினார். 1907 இல் இருந்து அவர் வெற்றி பெற்ற நாவலாசிரியை ஆனார். அதன்பின் நிறைய எழுதிக் குவித்தார். சரித்திர நாவல்களிலும் வெற்றி வாகை சூடினார்.

ஒரு பெயிண்டரைத் திருமணம் செய்து ( ஏற்கனவே மணமாகி 3 குழந்தைகளுக்கும் தந்தையாகி விவாகரத்துப் பெற்றிருந்த ஆண்டர்ஸ் காஸ்டஸ் ஸ்வர்ஸ்டாட் ) மூன்று குழந்தைகளுக்குத் தாயானார். முதலில் பையன். அடுத்து மனவளர்ச்சியற்ற பெண் குழந்தை மூன்றாவதாக கர்ப்பமுற்றிருந்தபோது மணமுறிவு பெற்று தனித்து லில்ஹாமர் என்ற ஊரில் வாழத் துவங்கினார். அதன்பின்தான் க்ரிஸ்டின் லாவ்ரன்ஸ்டாட்டர் எழுதினார். தன் இலக்கியப் படைப்புகளால் மக்கள் மனங்களில் அழியாத இடத்தைப் பிடித்த அவர் 10 ஜூன் 1949 அன்று இப்பூவுலகை விட்டு மறைந்தார்.

தன்னுடைய இலக்கியப் படைப்பில் பெண்களுக்காகக் குரல் கொடுத்ததன்மூலம் என் மதிப்பில் உயர்ந்த அவரைப் பற்றி என் முகநூல் தோழி ருமேனியாவைச் சேர்ந்த டானா மஷ்டேஷியா மூலம் அறிந்தேன். அதை இங்கே சொல்வதன் மூலமும் பகிர்வதன் மூலமும் பெருமையுறுகிறேன். 


 எனக்குப் பிடித்த சிக்ரிட் அண்ட்செட்டின் மேற்கோள்கள் சிலவற்றை இங்கே பகிர்ந்திருக்கிறேன்.

“And when we give each other Christmas gifts in His name, let us remember that He has given us the sun and the moon and the stars, and the earth with its forests and mountains and oceans--and all that lives and move upon them. He has given us all green things and everything that blossoms and bears fruit and all that we quarrel about and all that we have misused--and to save us from our foolishness, from all our sins, He came down to earth and gave us Himself.”
Sigrid Undset 

“All that had happened and would happen was meant to be. Everything happens as it is meant to be.”
Sigrid Undset, Kristin Lavransdatter  

“No one and nothing can harm us, child, except what we fear and love.”
Sigrid Undset, The Wreath 


“But man proposes, God disposes.”
Sigrid Undset, Kristin Lavransdatter  


6 கருத்துகள்:

 1. அறியாத ஒரு ஆளுமையை அறியத் தந்தமைக்கு நன்றி சகோதரியாரே

  பதிலளிநீக்கு
 2. இதுவரை நான் அறிந்திராதவரைப் பற்றி அறிந்தேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 3. இதுவரை அறிந்திராத ஒரு பெண் ஆளுமையைப் பற்றி இங்கு பகிர்ந்து நாங்கள் அறியச் செய்தமைக்கு மிக்க நன்றி சகோ

  பதிலளிநீக்கு
 4. இந்த மேற்கோள்கள் உலகப்புகழ் பெற்றவை. ஆனால் அதனை படைத்தவரை இன்றுதான் தெரிந்துகொள்கிறேன். மிக்க நன்றி அக்கா!

  பதிலளிநீக்கு
 5. நன்றி ஜெயக்குமார் சகோ

  நன்றி ஜம்பு சார்

  நன்றி துளசி சகோ & கீத்ஸ்

  நன்றி மைதிலி. நானும்தான். இவரைப் படித்தபின் தான் இது எல்லாம் இவர் சொன்னது என அறிந்தேன். :) எவ்ளோ தரம் இவற்றை சொல்லி இருப்போம். :)

  பதிலளிநீக்கு
 6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...