எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 5 ஜூன், 2010

லேடீஸ் ஸ்பெஷல் கிரிஜாம்மா., வித்யா நான்..

லேடீஸ் ஸ்பெஷல் ஜூன் மாத இதழில் என்னுடைய ”நீரெழுத்து கவிதை” (ஏழாம் பக்கத்திலும் ) மற்றும் வித்யா(விதூஷ்) உடைய ”இன்னிக்கு என்னாச்சு தெரியுமா” கதை ., 24 ., 25 ஆம் பக்கத்திலும் ) வெளிவந்து இருக்கு..
ஐந்தாம்., ஆறாம் பக்கத்தில் முன்னுரையில் என்னையும் குறிப்பிட்டு இருக்காங்க..
எங்கள் எழுத்துக்கு முதல் அங்கீகாரம் அளித்து தன் பத்ரிக்கையில் வெளியிட்ட கலைவாணியை அவர் அலுவலகத்தில் வித்யாவுடன்(இவரும் சரஸ்வதி) சந்தித்து ... என்னையும் கடைக்கண் நோக்கி எழுத வைத்த அற்புத சக்தி .. கல்விக் கடவுள் சரஸ்வதியின் முன் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்..
மிகுந்த சந்தோஷமான நிகழ்வாக இது இருந்தது,,, நம்ப முடியவில்லை.. விஜய்., நேசன்., பாரா., மேனகா., சசி., அக்பர்., ஸ்டார்ஜன்., சரவணாவின் நினைப்பு வந்தது.. என்னை ஊக்குவித்த செல்வா,. நாகு மாமா., என் வலை உலக சகோதர., சகோதரிகள்..அனைவருக்கும் இந்த சந்தோஷம் சமர்ப்பணம்..
பேசிக்கொண்டே இருந்தோம்.. அடுத்து என்னென்ன புதுமைகள் செய்யலாம் என எங்களை கனிவுடன் கேட்டு அவர் அங்கீகரித்தது இனித்துக் கொண்டேஇருக்கிறது மக்கா.. வாழ்வதற்கும் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது.. எங்கள் எழுத்தையும் அச்சில் பார்த்துவிட்டோம் நேசன்.. இரத்தம் சுண்டுவதற்குள்..
உங்கள் அன்பும் ஆசியும் ஆதரவும் வேண்டி.. தேனுவும்., வித்யாவும்..

41 கருத்துகள்:

 1. சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. தேனக்கா ரொம்ப சந்தோஷமா இருக்கு...உங்களுக்கும்,வித்யாவுக்கும் வாழ்த்துக்கள் அக்கா....இருங்க அந்த லிங்ல போய் படித்துட்டு வரேன்....

  பதிலளிநீக்கு
 3. அன்பின் தேனக்கா..

  ரொம்ப சந்தோஷமா இருக்கு. மனமார்ந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. இன்னும் பல உயரங்களைத்தொடும் தகுதியும் திறமையும் உங்களுக்கு உண்டு.
  வாழ்த்துகள் தேனக்கா, வாழ்த்துகள் வித்யா மேடம்.

  பதிலளிநீக்கு
 5. இன்னும் மென்மெலும் உயர வாழ்த்துக்கள்..!
  :-)

  பதிலளிநீக்கு
 6. சகோதரிகள் விண்ணை தொடும் அளவு உயர வேண்டும் என்ற அபரிமிதமான ஆசையுடன்......


  சகோதரிகளே..முயற்சி செய்யுங்கள்..
  இன்னும்..இன்னும்...
  வானம்?
  தொட்டு விடும் தூரம் தான்!!!

  அன்புடன்,
  ஆர்.ஆர்.ஆர்.

  பதிலளிநீக்கு
 7. மனம் நிறைந்து இருக்கிறது தேனம்மை.இன்னும் நெடு வழி இருக்கிறது பயணிக்க ...

  மலர்ந்து எரியும் சுடர் ஏந்தும் பெண்டிர் எழுத்துக்கு கிடைத்த மரியாதை .

  வாழ்த்துக்கள் மக்கா

  விதூஷ்...! ஸ்பெஸல் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 8. தேனம்மை இதை விட பல உயரங்கள் பறக்க வேண்டியவர் நீங்கள் .முதல் அடிக்கு வாழ்த்துக்கள்.
  வித்யா மேடத்துக்கும்

  பதிலளிநீக்கு
 9. வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...இருவருக்கும்....

  பதிலளிநீக்கு
 10. அச்சில் நம் எழுத்தை பார்க்கும் போது, ஏற்படும் ஆனந்தம் உள்ளதே. அதை வார்த்தையால் விவரிக்க இயலாது. நான் மகிழ்ச்சியில் அழுதே விட்டேன். நீங்கள்?

  பதிலளிநீக்கு
 11. அன்பான என் இனிய சகோதரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 12. உயர உயர பறக்கிறீர்கள், எங்கள் கண்ணுக்கு சிறிதாக தெரிந்தாலும் உங்களது பிரமாண்டத்தை உலகமறியும்

  எப்போதும் வாழ்த்தும்
  உங்களன்பு தம்பி

  விஜய்

  பதிலளிநீக்கு
 13. வாழ்த்துக்கள் மக்களே.. :)

  பதிலளிநீக்கு
 14. மேன்மேலும் வளர வாழ்த்துகள் தேனக்கா.

  பதிலளிநீக்கு
 15. தேனம்மை,வித்யா உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  சரஸ்வதியின் அருள் பார்வை என்றும் நிறைந்து இருக்க வாழ்த்துக்கள்.

  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 16. வாழ்த்துகள் தேனக்கா கைய குடுங்க...இன்னும் நிறைய சாதிக்க அன்பு தம்பியின்...அட்வான்ஸ் வித்யா அவர்களுக்கும்..வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 17. இருவருக்கும் நல்வாழ்த்துகள்..தொடரட்டும் சாதனைகள்..

  பதிலளிநீக்கு
 18. இருவருக்கும் நல்வாழ்த்துகள்..தொடரட்டும் சாதனைகள்..

  பதிலளிநீக்கு
 19. வாழ்த்துக்கள் தேனக்கா..

  பதிலளிநீக்கு
 20. மிக்க சந்தோஷம் சகோதரி தேனம்மை.அன்பு வாழ்த்துக்கள்.அவசியம் லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகை வாங்கிப்படித்து விடுகின்றேன்.உங்கள் எழுத்துக்களை அச்சிலும் பார்க்க வேண்டுமல்லவா?

  பதிலளிநீக்கு
 21. நன்றி சூர்ய கண்ணன்., மேனகா., சரவணா.,அக்பர்., அமைதிச்சாரல்., ஜெய்லானி., தேவா.,ஆர் ஆர் ஆர் ., நேசன் (பாவை விளக்கு..?)., கதிர்., பத்மா., கண்ணகி., ரமேஷ்..(உண்மை நண்பரே.. உணர்வுகளால் ஆளப்படுபவர்தாமே நாம்..அதுவும் எழுத்தாளர்கள்)., ஜமால்., ஸ்டார்ஜன்., மாதேவி., விஜய்.,ஆறுமுகம் முருகேசன்., முனியப்பன் சார்., ராம்ஜி., ஹேமா., கோபி.,பாலா சார்., நீச்சல்காரன்., கோமதி அரசு., கனி., ரிஷபன்., இர்ஷாத்., சத்ரியன்., நிஜாம்., அஷோக்., விதூஷ்.,நசர்., ஸாதிகா..(ரொம்ப நன்றி ஸாதிகா உங்க அன்புக்கு)

  பதிலளிநீக்கு
 22. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

  பதிலளிநீக்கு
 23. அட, அப்படியா!! உங்க ரெண்டு பேருக்குமே என்னோட வாழ்த்துகள்!!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...