எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 11 ஜூன், 2010

துர்கா லெக்ஷ்மி சரஸ்வதிப்யோ நமஹ:

புன்னகை நிலவு பெற்ற
இரு பால் நிலவுகள்....
ஒன்று செல்லக் குட்டி.,
ஒன்று வெல்லக் கட்டி..

சிங்கக் குட்டிகளின்
சர்க்கரை தோய்ந்த சிரிப்பில்.,
சந்தோஷமாய்ச் சிதறுகிறது மனசு..

பிள்ளை நிலாக்கள்., பிஞ்சு நிலாக்கள்..
பிறைச்சந்திரனை ஒட்டி வைத்ததாய்..
நம்மையும் தொற்றும் புன்னகை..


மென்மை., மேன்மை., மெய்மை..,
கன்னக் குழிகளில் விழுந்து.
கனிந்து., களித்து., கொஞ்சி.,

பஞ்சு பொம்மிகள்.,
பாசப் பந்துகள்..
பார்க்கர்பேனா பரிசளித்து
ஒரு பளீர்ச்சிரிப்பு..

ஒரு தீபம் போல ஒளிவிடும் புன்னகையில்
நிறைய தீபங்கள் ஒளிவிட..
நிறைவாக வாழுங்கள் கண்மணி..!!!

அன்பின் துர்க்கை பெற்ற
அழகு லெக்ஷ்மி., அறிவின் சரஸ்வதி.,
சாதிக்கப் பிறந்தீர்கள்..!!!
சந்தோஷமாக வாழ்க என்றும்..!!!

டிஸ்கி:- என் அன்புத் தங்கை அபியின்
ஆருயிர்ச் செல்லங்கள் ., என் உள்ளம் கவர்
தங்கங்கள்., ஹரிணி ராகவி., ஷாஷிணி
ராகவிக்காக எழுதியது..:))

23 கருத்துகள்:

 1. ”கவிதைகள்” வாழ்க!

  உங்களுக்கு பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 2. உங்களின் பிரியங்கள் வார்த்தைகளில் தெறிக்கிறது . மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 3. சர்வ சித்தி ப்ராப்தி ரஸ்து

  :)

  பதிலளிநீக்கு
 4. உங்கள் செல்லங்கள் உங்களைப்போலவே நன்றாக எழுதிருக்காங்க.அவர்களுக்கு என் பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்....

  பதிலளிநீக்கு
 5. உங்கள் உள்ளம் கவர் தங்கங்களுக்கு
  வாழ்த்துக்கள்!

  வாழ்க வளமுடன்!
  வாழ்க நலமுடன்!

  பதிலளிநீக்கு
 6. எனது பாராட்டுக்களும் வாழ்த்துகளும் அக்கா!

  பதிலளிநீக்கு
 7. ஒரு தீபம் போல ஒளிவிடும் புன்னகையில்
  நிறைய தீபங்கள் ஒளிவிட..
  நிறைவாக வாழுங்கள் கண்மணி..!!!//
  இதல்லவோ வாழ்த்து.

  பதிலளிநீக்கு
 8. கவிதையில் அன்பு பாசம் எல்லாம் தெரிகிறது..உங்க வீட்டிலேயும் ராகவி(கள்) இருக்காங்களா?

  பதிலளிநீக்கு
 9. வாழ்த்துக்கள் லக்ஷ்மி சரஸ்வதிக்கு,

  வாழ்த்துக்குள் கவிதை படைத்த பிரம்மாவிற்கு

  விஜய்

  பதிலளிநீக்கு
 10. டிஸ்கி:- என் அன்புத் தங்கை அபியின்
  ஆருயிர்ச் செல்லங்கள் ., என் உள்ளம் கவர்
  தங்கங்கள்., ஹரிணி ராகவி., ஷாஷிணி
  ராகவிக்காக எழுதியது..:))


  ...... Thats sweet!

  பதிலளிநீக்கு
 11. கவிதை அழகு தேனக்கா.. கண்ணுகுட்டிகளுக்கு வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு
 12. செல்லங்களுக்கு வாழ்த்துக்கள்..!!

  பதிலளிநீக்கு
 13. //பிறைச்சந்திரனை ஒட்டி வைத்ததாய்..
  நம்மையும் தொற்றும் புன்னகை..//

  நல்லதொரு தொற்றுவியாதி :-)))

  பதிலளிநீக்கு
 14. வாங்கி குவித்துக்கொண்டுருக்கும் கீரிடங்களை சுமக்க இன்னும் ஒரு இடுகை உருவாக்க வேண்டும் போல இருக்கிறதே?

  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 15. உங்களுக்கு பாராட்டுக்கள்.
  மழலைகளுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 16. வாழ்த்துக்கள் அக்கா....

  அளவில்லா பாசம்
  அணையிட
  முடியா வெள்ளம்

  உங்கள் வரிகளின் வெளிப்பாடும் அப்படித்தான்

  பதிலளிநீக்கு
 17. நன்றி கருணாகரசு., பனித்துளி சங்கர் .,நேசன்., மேனகா., கோமதி அரசு.,அக்பர்., ஜெய்லானி.,ராஜ்., கோபி (ஆம் கோபி)., விஜய்.,சித்து., மயில் ராவணன்., கனி.,ப்ரேமா மகள்., ராம்ஜி.,சிவாஜி சங்கர்.,மாதேவி., அமைதிச்சாரல்,ஜோதிஜி., அம்பிகா செந்தில் குமார்..

  பதிலளிநீக்கு
 18. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...