வியாழன், 1 அக்டோபர், 2015

அன்னப்பறவையில் நானும்.

புதுச்சேரியில் வசிக்கும் நண்பர் பாலசுப்ரமண்யம் முனுசாமி பொறியாளர். மிகப்பெரும் கவிஞர், எழுத்தாளர்.அவர் சென்ற வருடம் மூன்று நூல்கள் வெளியிட்டிருக்கிறார். கொதிக்கும் பூமி என்றொரு நூல் அதில் ஒன்று. இன்னொன்று  அன்னப்பறவை. குழந்தைகளுக்கான பாடல்கள் இடம் பெற்ற மிகப் பெரும் அளவிலான நூல்.


///புதுவையைச் சேர்ந்த பொறியாளர் பாலசுப்ரமணியம் 5 நூல்கள் வெளியிட்டுள்ளார். தன் பிள்ளைகள் இளம்பரிதி, அன்பன் ஆகியோரின் பெயரை இணைத்து பரிதியன்பன் என்ற புனைபெயரில் எழுதியுள்ளார். புதுவை அரசால் இவரது புத்தகங்கள் விருதுகள் பெற்றுள்ளன. குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவிற்குப் பிறகு நான் இவரின் சிறுவர் பாடல்கள் புத்தகம் படித்து மகிழ்ந்தேன். சிறுவர் பாடல்கள் ”சிட்டுக் குருவி, நடைவண்டி” என இரண்டு புத்தகங்களும். ”அரைக்கீரை விற்கிறான் அம்பானி” என்ற ஒரு துளிப்பா புத்தகமும்., வாழப்பிறந்தோம் மற்றும் வெள்ளைத்திமிர் என்ற இரு சமுதாயக் கவிதைப் புத்தகங்களும் வெளிவந்துள்ளன.///

இவர் புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் செயலாளராகவும் இருக்கிறார்.


அன்னப் பறவை நூலின் முன்னுரையில் எனது பெயரையும் குறிப்பிட்டு நன்றிகூறி இருக்கிறார்.   

பார்த்ததும் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். நன்றி பாலா.

படித்ததும் மதிப்புரை தருகிறேன். நன்றியும் வாழ்த்தும். :)5 கருத்துகள் :

Geetha M சொன்னது…

வணக்கம்.வலைப்பதிவர் திருவிழாவிற்கு விழாக்குழு சார்பாக உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.நன்றி.

Ramani S சொன்னது…

வாங்கி நிச்சயம் படித்து விடுவேன்
நல்ல அறிமுகம்
வாழ்த்துக்களுடன்..

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வாழ்த்துகள்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கீதா :) சந்திப்போம் புதுகையில் :)

நன்றி ரமணி சகோ

நன்றி வெங்கட் சகோ :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...